அரசியல் கருத்தியல்கள்

அரசியல் பாடப்பரப்பில் ஆராயப்படுகின்ற பல்வேறு எண்ணக்கருக்களுள் முதன்மை வாய்ந்ததாக கருத்தியல்கள் காணப்படுகின்றன. நவீன அரசியல் விஞ்ஞானத்தின் கட்டமைப்புகளான அரசியல்இ மெய்யியல்இ அரசியல், சிந்தனை, அரசியல் கோட்பாடு போலவே அரசியல் கருத்தியலும் முக்கிய இடம் பெறுகின்றது.

மனதில் தோன்றுகின்ற எல்லா விதமான எண்ணங்களில் தெரிவு செய்யப்பட்ட சில எண்ணங்கள் கருத்தாக வெளியிடப்பட்டு சமூகத்திற்கு பொதுவான கருத்தாக காணப்படுகின்ற போது அது பற்றிய கருத்துக்களை பல அறிஞர்கள் முன் வைப்பார்களாயின் அது கருத்தியல் என அழைக்கப்படுகின்றது. ஒரு சமூகத்தில் உள்ள அரசியல் நிறுவனங்கள் மற்றும்

மக்களின் ஆட்சி செய்முறைகள் என்பவற்றை உருவமைக்கும் காரணிகளை அரசியல் கருத்தியல் ஆகும். இவை ஒன்றுடன் ஒன்று இணைந்த கருத்துக்களின் தொகுதியாகும். இவை சமூகத்தில் உள்ள சிற்சில குழுக்களின் அரசியல் இலட்சியம்இ நம்பிக்கைகள் என்பவற்றை ஒழுங்கு படுத்துபவர்களாக உள்ளன. மேலும் சமூகத்தில் உள்ள குழுக்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தக் கூடியவையாகவும் உள்ளன.

அரச அறிவியலில் ஆரம்பக் காலத்திலேயே அரசியல் கருத்தியல் பற்றிய கருத்துக்கள் பற்றி தோற்றம் பெற்றுக்கொண்டன. எனினும் 18ம் 19ம் நூற்றாண்டின் பின்னரே பிரபலியம் பெற்றது. கருத்தியல் எனும் பதத்தினை 1796 இல் டிரேசி (Tracy) என்பவர் முதன்முதலில் பயன்படுத்தியவர் ஆவார். The Elements of Ideology எனும் Volume ஊடாக கருத்தியல் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். இச்சொல்லானது எண்ணக்கரு அல்லது கருத்து எனும் பண்டைய கிரேக்க சொற்கள் ஆகிய Volume என்பதையும்  logy எனும் சொல்லையும் இணைத்து உருவாக்கப்பட்டது.

அரசியல் கருத்தியல் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட Andrew Hewood   தனது An Introduction to Political Ideology  எனும் நூலில் அரசியல் கருத்தில் என்பது அரசியல் நம்பிக்கைஇ ஆழும் வர்க்கத்தின் சிந்தனைகளை மையப்படுத்தியது என குறிப்பிடுகின்றார். பொதுவாக அரசியல் கருத்தியல் என்பதானது மக்கள் அரசியல் ரீதியாக எவ்வாறு வாழ வேண்டும் என்பது தொடர்பான கருத்துக்களின் தொகுதியினையும் அந்த கருத்துக்களை நிறைவு செய்வதற்காக செயற்பாட்டு திட்டத்தையும் குறிக்கின்றது. அரசியல் கருத்துக்களின் விஞ்ஞானம் அரசியல் கருத்தியலாக நோக்கப்படுகின்றது.

கருத்தியல் என்பது நம்பிக்கைகள், இலக்குகள், எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் ஒரு தொகுதி ஆகும். பொதுவாக அரசியலில் இது பயன்படுத்தப்படுகின்றது. கருத்தியல் என்ற  சொல்லுக்கு பதிலாக கருத்து நிலை, சித்தாந்தம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. சமூகம் வளர வளர மனிதர்கள் பொதுவான எண்ணக் கருத்துக்களையும் உலகம், சமூக வாழ்க்கை, தெய்வம். சொத்து, தர்மம்இ நீதி ஆகியவை பற்றிய கருத்துக்களை விருத்தி செய்து கொள்கின்றனர். இவ்வாறாக சமூகம்இ அரசியல்இ சட்டம், மதம், கலை, மெய்யியல் நோக்கு ஆகியவை தொடர்பான கருத்து நிலை பட்ட எண்ணங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இவை கருத்து நிலை என்று பெரும்பாலும் குறிப்பிடப்படுகின்றது. ஜேம்ஸ் கிளக்மான் எனும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.

கருத்தியலின் முக்கியமான நோக்கம் நெறி சார்ந்த சிந்தனைகள் ஊடாக மாற்றங்களை உண்டாக்குவதாகும். கருத்தியல்கள் பொதுவான விடயங்களில் பயன்படுத்தப்படும் நுண்ணிலை சிந்தனை (Abstract thought) முறைகள் எனலாம். இதனால் கருத்தில் எனும் கருத்து அரசியலில் சிறப்பிடம் பெறுகின்றது. வெளிப்படையாக சொல்லப்பட்டாலும் சொல்லப்படாவிட்டாலும் எல்லா அரசியல் போக்குகளும் உள்ளார்ந்த நிலையில் ஒரு கருத்தியல் நிலைமையை கொண்டிருக்கின்றது.

கருத்தியலானது பொது சொல்லாக பல்வேறு அரசியல் கருத்துத்துறைகளிலும் சமூக குழுக்களின் பார்வைகளிலும் மாற்றம் கண்டு வந்துள்ளது. கால் மார்க்ஸ் இச்சொல்லினை வகுப்பு போராட்டத்தில் பயன்படுத்த மற்றவர்கள் இதனை சமூக கட்டமைப்பு செயற்பாட்டின் பகுதியாகவும் சமூக ஒருங்கிணைப்பாகவும் நம்பினர். தற்கால அரசியல் கருத்தியல் இயல்பானது சமூக பொருளாதார ரீதியாக பின்வரும் நான்கு வகைகளாக பிரித்து நோக்கப்படுகின்றது. சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வாதிகாரம்இ ஜனநாயகம் எனவும் பொருளாதார தன்மையை கொண்டு இடதுசாரிஇ  வலதுசாரி எனவும் காணப்படுகிறது.

1. சர்வாதிகார தன்மையை கொண்ட இடதுசாரி

    (ரஷ்யாவின் ஸ்டாலின் கொள்கை)

2. தாராள தன்மை மிக்க ஜனநாயகம்

    (சீனாவின் மாவோ செய்து கொள்கை)

3. சர்வாதிகாரம் கொண்ட வலதுசாரி  (ஹிட்லர், முசோலினி கொள்கை)

4. ஜனநாயக வலதுசாரி    (முதலாளித்துவ நாடுகளின் கொள்கை)

அரசியல் ரீதியாக மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கிய அரசியல் கருத்தியல்கள் சில,

1 தாராண்மை வாதம் 

2 சமஉடமை வாதம் 

3 குடியரசு வாதம் 

4 சமூக ஜனநாயக  வாதம்

5 பாசிச வாதம் தேசியவாதம் 

6 மதசார்பின்மை வாதம் 

7. பெண்ணியல் வாதம்

அரசியல் கருத்தியலில் பணிகள் 

1 உலக ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக விவரித்தல்

2  உலக ஒழுங்கினை விளங்கப்படுத்தலும் மதிப்பிடுதலும்

3 வழிக்காட்டுதல்

4 நிகழ்ச்சி நிரல்களை தயாரித்தல்

அரசியல் கருத்தியல்களின் பண்புகள்

1  குறித்த ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு காணப்படும்

2 சமூகத்தின் கட்டுமான அடிப்படையில் தோற்றம் பெறும் எதிர்காலம்                      நோக்கிய வடிவமாக காணப்படும்

3  அரசியல் செல்வாக்கு செலுத்தும் நபர்களால் முன்வைக்கப்படுகின்றது

4  நடைமுறை சார் ஆட்சியை தீர்மானிக்கும்

அரசியல் கருத்தியல்களின் முக்கியத்துவம்

1  அரசியல் செயற்பாடுகளை நிர்ணயித்தல்

2 சமூக வரலாற்று சூழ்நிலைகளால் விருத்தி விருத்தி செய்ய செய்தல்.

3 அரசியல் நடத்தைகளுக்கு வழிகாட்டுதல்

4 உலக வாழ்க்கை அரசியல் செயல்பாடுகளுக்கு தூண்டுதல்

5 சமூக ஒழுங்கை வெளிப்படுத்தும் ஒரு சக்தியாக செயல்படுதல்

6 அரசியல் முறைமையில் தன்மையை வடிவமைத்தல்

7 அரசியல் கட்சிகளின் கொள்கைகளை உருவாக்கத்திற்கு உதவுதல்

Leave a Comment