உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து மூத்த மொழியாக விளங்கும் தமிழ் மொழி என்று தமிழரின் பெருமையை பேசுவதுண்டு. முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்தவர்கள் நமது மூதாதையர்கள். முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழ் தொடர்ந்து களத்திரர் பல்லவர் போன்ற அன்னியர் ஆட்சிகளின் போது சிறிது தூய்மையை இழந்தது அதன் பின்னர் சோழப்பெருமன்னர் காலத்தில் மீண்டும் உன்னத நிலையை அடைந்தது. தொடர்ந்து விஜயநகர மன்னர்கள் காலத்தில் தமிழரின் நிலை உறைந்தாலும் ஐரோப்பிய காலத்திலும் இருபதாம் நூற்றாண்டிலும் உன்னத நிலையை அடைந்தது. இதனையே கடந்த மூன்றாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு காட்டி நிற்கின்றது மாநாடு காட்டி இருக்கின்றது.

மதுரை தமிழ் சங்கத்தில் பல புலவர்களும் கூடி தமிழை ஆராய்ந்து உள்ளனர். அதே நிலை இம்மாநாடுகளிலும் இடம்பெற்று இருக்கின்றது. ஏனெனில் தமிழர்களின் பல்வேறுப்பட்ட ஆக்கத்திறன்களையும் அவர்களின் வழிவந்த உன்னத இலக்கியங்கள் மற்றும் அவற்றினால் தோன்றிய உலகளாவிய தொடர்புகள் என்பவற்றை காலத்திற்கு காலம் ஆராய்வதே தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் அடிப்படை நோக்கமாக காணப்படுகின்றது.

பண்டைய காலத்தில் இயல் இசை நாடகம் என வகுக்கப்பட்டு சங்கம் வைத்து தமிழ் ஆராயப்பட்டு இருக்கின்றது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் கூற்றுக்கு அமைய தமிழர்களின் சிந்தனை எத்தனை விசாலமானது என்பதனை பறைசாற்றுகின்றது. மேலும் உலக நாடுகளையும், வெவ்வேறு இனங்களையும் வேறுபடுத்தாது ஒற்றுமை உணர்வோடு நோக்குவதையே இக்கூற்று உணர்த்துகின்றது.

சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட தமிழை புது வடிவில் உலகம் முழுவதிலும் வளர்த்தெடுப்பதுடன் அதன் சுவை அழகு மட்டும் கம்பீரத்தை உலக மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்ற தன்மையிலேயே அனைத்து உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு கால்கோள் இடப்பட்டது. அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்ற அப்பழுக்கற்ற தூய தமிழ் சிந்தனை இலங்கையில் முதல் வடிவம் பெற்றது. வணக்கத்திற்குரிய தனிநாயகம் அவர்களே இந் சிந்தனையின் பிதாமகன் ஆவார். 

யாழ்பாணத்தின் ஊர்காவல்துறை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட தனிநாயகம் அடிகளார் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் சிந்தனையை பலப்படுத்தும் வகையில் உலகில் தமிழ் ஆர்வம் கொண்ட மக்களுடன் விரிவான தொடர்பினை கொண்டிருந்தார். இத்தொடர்பே உலகளாவிய ரீதியில் தமிழ் அபிமானம் கொண்டவர்களை ஒன்றிணைத்தது எனலாம். அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு என தமிழை ஆராயும் உயரிய பணிக்கு வித்திட்டது.

தமிழ் பண்பாடு என்று முத்திங்கள் ஏடு ஒன்று நடத்தப்பட்டது இதன் வழியாகவே உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டது. இம்மன்றம் உருவான இரண்டாம் ஆண்டில் அதாவது 1996 ஏப்ரல் மாதம் உலகளாவிய தமிழ் ஆராய்ச்சி மாநாடு தனிநாயகம் அடிகளார் தலைமையில் மலேசியாவில் மலேசிய பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு கோலாலம்பூரில் மிக விமர்சையாக நடைபெற்றது.

1968 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் C.N அண்ணாதுரை இம்மாநாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் நன்கு திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தார். பல்வேறு நாடுகளில் இருந்தும் பல பெரியார்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஊக்குவிப்பினால் நடாத்தப்படும் உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் நலத்தப்படலாம் என முடிவு எடுக்கப்பட்டது. மூன்றாவது மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்றது. 39 நாடுகளை சேர்ந்த இருநூறு பிரதிநிதிகளுக்கு மேல் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நான்காவது தமிழராய்ச்சி மாநாடு இலங்கையில் நடைபெற்றது. இலங்கை அரசு கொழும்பில் நடத்தலாம் என முடிவு செய்த போதும் இலங்கை தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி யாழ்ப்பாணத்தில் நடத்தினர். பல இடையூறுகளை சந்தித்தபோதும் எதற்கும் அஞ்சாமல் பேராசிரியர் க.வித்தியானந்தன் தலைமை தாங்கி இம்மாநாட்டினை நடத்தினார். இதில் 179க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் படிக்கப்பட்டது. இறுதி நாள் நிகழ்வில் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்த போனார்கள். இந் நிகழ்வுக்கு தமிழ் பேசும் நல்லுலகம் கண்ணீர் வடித்தது.

ஐந்தாவது தமிழராய்ச்சி மாநாடு தமிழக முதல்வராக இருந்த எம் ஜி ஆர் தலைமையில் மதுரையில் 1981ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆறாவது தமிழ் ஆராய்ச்சி மாநானது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் மிக விமர்சையாக நடைபெற்றது. இங்கு பல பிற நாட்டு அறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இம்மாநாட்டில் உள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால் இங்கே வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இதுவரை காலமும் ஒரு நூலாகவேணும் தொகுத்து வெளியிடப்படாமை ஆகும்.

ஏழாவது தமிழராய்ச்சி மாநாடானது 1989 ஆம் ஆண்டு மொரிசியசிலும் எட்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1995 ஆம் ஆண்டு தஞ்சாவூரிலும் இடம்பெற்றது. மாடா மாநாடானது முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் அங்கு நடாத்தப்பட்டது. இம்மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு சிறப்பு பெண்மணியாக திகழ்ந்தமை அங்கு இடம்பெற்ற தஞ்சை அலங்கார வளைவுகள், ஊர்திகள், மற்றும் கவிதைகள், உரைகள் என்பனவும் பறைசாற்றின் நின்றன. தமிழ் மொழிக்கு சூட்டப்பட்ட அத்தனை புகழாரங்களும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது இதனால் இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவும் மாறி இருந்தது.  அத்துடன் இத்தமிழ் ஆராய்ச்சி மாநாடானது அரசியல் சார்புடையதாக காணப்பட்டது என பல கல்விமான்கள் நிராகரிக்கப்பட்டனர். நிராகரிக்கப்பட்டவர்களுள் இலங்கை கல்விமான்களும் அடங்குவர். குறிப்பாக யாழ்ப்பாணத்துடன் தொடர்புடையவர்கள் அழைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள். இந்நிகழ்வு இம்மான் நாட்டின் அழிக்க முடியாத ஒரு கரும் புள்ளியாக நிலைத்திருக்கின்றது. ஏனெனில் இவ்வாறான மாநாடு நடைபெற காரணமாக இருந்த முதல் அறிஞர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அடிப்படையில் தொடர்ச்சியாக தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற வேண்டும். இவ்வாறு நடாத்தப்படும் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் மூலம் உணர்ச்சி பெறுவோம். அறிவு சிந்தித்து ஆற்றல்  மிக்க சாதனங்களை படைப்போம். இதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் வித்துடுபவர்களாக இருப்போம்.

Leave a Comment