அரசு அரசியல் செயற்பாடுகளில் தற்காலத்தில் இன்றியமையாத ஒரு விடயமாகவும் ஒவ்வொரு நாட்டினதும் ராஜதந்திர முறைகளில் ஒன்றாகவும் சமாதான உடன்படிக்கை அமைகின்றது. தனிநபர் மோதல்களை காட்டிலும் இன மோதல்கள் சமூக மோதல்கள் அரசியலுக்கு இடையிலான மோதல்கள் போன்றவற்ற தீர்வு கொண்டு வருவதற்கு கையாளப்படும் மிக முக்கியமான உத்தியாக இது கருதப்படுகின்றது.
*மோதல் தரப்பினர்களிடையே மோதலை இடைநிறுத்தி இருதரப்பினர்களுக்கும் சாதகமான முறையில் மத்தியஸ்தம் வகித்தல்.
*முதல் தரப்பினர்களிலேயே மோதலை இடைநிறுத்தவோ அல்லது முடிவுக்கு கொண்டு வருவதற்கோ தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
*தனியாகவும் கூட்டாகவும் நடைமுறைப்படுத்த உடன்படுகின்ற உறுதிமொழிகளை சமாதான உடன்படிக்கைகளின் நிபந்தனைகளாக மாற்றுதல்.
*சிவில் யுத்தங்களின் போது யுத்தத்தை நிறைவு செய்தல்இ நிராயுதபாணியாக்குதல், போராளிகளுக்கு புணர்வாழ்வளித்தல், யுத்தத்தின் போது சரணடைந்த பொதுமக்களை மீள்குடி அமர்த்துதல் போன்ற கூட்டு செயல்களில் ஈடுபடுதல்.
*போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று அதற்கேற்ப தீர்மானங்களை மேற்கொள்ளுதல்.
போராட்டத் தரப்பினர்களை அரசியல் செயற்பாடுகளுக்கு உள்வாங்கிக் கொள்ளுதல்.
*உடன்பாட்டின் நிபந்தனைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதற்கான கண்காணிப்பு விதிமுறைகளை ஏற்படுத்துதல்.
எவ்வாறாக இருப்பினும் சமாதானத்தை கட்டி எழுப்பும் போது பல்வேறுப்பட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. குறிப்பாக கூறின் உறுதிப்படுத்தப்படும் நியதிகள் இருபாலருக்கும் பொதுவானதாகவே அமைதல் வேண்டும். அத்தோடு உடன்படிக்கை முறையாக செய்யப்படாத சந்தர்ப்பங்களில் மீண்டும் மோதல்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
சமாதானத்தினை கட்டி எழுப்புதல்
Pex என்ற இலத்தின் மொழி சொல்லில் இருந்து உருவானதே Peace எனும் சொல். Pex என்ற பதத்தின் பொருளாக உடன்படுதல் அல்லது இணங்குதல் என்று காணப்படுகின்றது. 1964 களில் கல்nuuண் என்ற அறிஞர் சமாதானத்துக்கான அணுகுமுறைகளை மூன்றாக வகுக்கின்றார்.
*சமாதானத்தை ஏற்படுத்துதல்
*சமாதானத்தினை காத்தல்
*சமாதானத்தை கட்டியெழுப்புதல்
இவர் சமாதானமானது இரு வழி முறைகளில் தோற்றம் பெறுகிறது என்கின்றார்.
எதிர்மறையான சமாதானம்
வன்முறை யுத்தம் அற்ற நிலையில் உண்டாகும் சமாதானமே இதுவாகும். எனினும் முழுமையான சமாதானத்தை இங்கு எதிர் பார்க்க முடியாது.
எதிர்கனிய கணிய சமாதானம்
முற்றுமுழுதாக முரண்பாட்டை தவிர்த்து எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு சமூக நீதியினை நிலை நாட்டும் முகமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும். எவ்வித வன்முறை செயற்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் இதன் பின்னர் காணக்கிடைக்காது.
சமாதானத்தின் முக்கியத்துவம்
1. மனித உரிமைகளை பாதுகாத்தல்
2. நாட்டின் அபிவிருத்தியினை ஏற்படுத்துதல்
3. நாட்டில் சத்தம் ஒழுங்கை பேணுதல்
4. சுற்றுச்சூழலை பாதுகாத்தல்
5. சுற்றுலா துறையினை வளர்ச்சி அடைய செய்தல்
6. தேசிய ஐக்கியத்தனையும் ஒருமைப்பாட்டினையும் கட்டி எழுப்புதல்
7. பொருளாதார தடைகளை வெற்றி கொள்ளுதல்
8. மக்களின் சுதந்திரமான அரசியல் பங்கேற்பினை ஏற்படுத்துதல்
9. சுமுகமான வாழ்க்கை தரத்தினை உயர்த்துதல்
10. சமாதானத்தின் மூலம் நாட்டின் நன்மதிப்பினை மேம்படுத்துதல்.
சமாதானத்தை கட்டி எழுப்புதல் எண்ணக்கரு வளர்ச்சி
1964 களில் ஜோஹான் கல்றுங் எனும் அறிஞர் சமாதானத்தை கட்டிய முதல் பற்றிய பல விளக்கங்களை தந்துள்ளார். 1990களின் பின்னர் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பல முரண்பாடுகளாலும் மோதலினாலும் ஏற்பட்ட சமாதான பாதிப்புகளை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக இவ்வாறான எண்ணக்கருக்கள் துரிதமாக வளர்ச்சி அடைந்தது. 1992இல் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பூத்ரோஸ் காளி என்பவரால் இதற்கென ஒரு நிகழ்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டது. சமாதானத்திற்கான ஒரு நிகழ்ச்சி திட்டம் என்பது அதன் பெயராகும். (யுn யுபநனெய கழச Pநயஉந) முரண்பாட்டினை முகம்கொடுத்த நாடு மீண்டும் மோதலை நோக்கி செல்லும் நிலையினை குறைக்கும் நோக்கோடு மோதல் முகாமைத்துவத்திற்கான தேசிய மட்டத்தில் காணப்படும் திறமைகளை அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக காணப்பட்டது. அத்துடன் நிலைபேறான சமாதானம்இ நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றுக்கு அடித்தளம் இடுவதற்காக பல்வேறு நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு பரந்த செயல்பாடாக இது காணப்படுகின்றது.
அமெரிக்க சமூகவியல் அறிஞரான “ஜோன் போல் லெட்ராஜ்” என்பவர் சமாதானத்தை கட்டி எழுப்புவது தொடர்பாக மூன்று செயல்பாடுகளை குறிப்பிடுகின்றார்.
உயர் மட்டம்
அரசியல்வாதிகள் இராணுவத் தலைவர்கள் என்பவரை உள்ளடக்கிய ஒரு செயற்பாடாகும். உலக இன மோதல்கள்இ சிறுபான்மை மக்களது பிணக்குகள் போன்றவற்றை தீர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடாகும். இங்கு இறுதி தீர்மானமானது அரசியல்வாதிகளாலோ இராணுவ தலைவர்களினாலோ எடுக்கப்படுகின்றது.
இடை மட்டம்
முரண்பாட்டில் ஈடுபட்டவர்களை சமாதான செயற்பாட்டில் உள்வாங்கி புத்திஜீவிகள்இ பிரபலமானவர்கள்இ துறை சார்ந்த தலைவர்கள்இ சமய தலைவர்கள் போன்றோர் இணைந்து சமாதானத்தை கட்டி எழுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இங்கு உள்ளடங்கும்.
சமூக மட்டம்
சாதாரண மக்களை பிரதிநிதித்துவம் செய்து உள்ளூர் மோதலில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்ளும் முயற்சியில் அனைவரது பங்களிப்புகளும் அவசியமானதாகும். சமூக மட்டத்தில் மக்களை இணைத்து தமக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் ஆகும்.