சமுகவியல் என்பதன் விளக்கம்
இன்றைய அறிவியற் கலைகளில் „சமூகவியல்‟ (ளுழஉழைடழபல) ஒன்றாக விளங்குகிறது. சமுகவியல் என்பது அடிப்படையில் சமூக விஞ்ஞானங்களில் ஒன்றாகவும், அறிவியல் துறையாகவும் விளங்குகிறது. இது விஞ்ஞானங்களுள் மிகவும் அண்மைக் காலங்களில் விருத்தியடைந்த ஒரு துறையாக காணப்படுகின்றது.
சமூகத்தைப் பற்றியும், அச்சமூகத்தில் மக்கள் ஒருவரோடொருவர் கொண்டுள்ள சமூக உறவுகள் பற்றியும் கூறும் இயல் சமூகவியலாகும்.
சமூகவியல் என்னும் எண்ணக்கருவை விளக்கும் பல வரைவிலக்கணங்கள் உள்ளன. சமூகவியல் பாடத்தின் பரப்பு பெரிதாக இருப்பதாலும் சிக்கல் நிறைந்ததாக உள்ளதாலும் சில சொற்களில் சமூகவியலுக்குக் கொடுக்கப்படும் வரைவிலக்கணங்கள் சமூகவியல் முழுமையினையும் ஒப்புவித்து நிற்பதில்லை. சமூகவியலாளர்கள் சமூகவியல் பற்றிய திட்டவட்டமான வரைவிலக்கணங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக சமூகவியலின் இயல்பினை விரிவான முறையில் எடுத்துக் காட்டியுளள்னர். இவற்றுள் பல உறுதியான வரைவிலக்கணங்களாகவும் காணப்படவில்லை.
சமூகவியல் என்பது மனித சமூகத்தின் இயல்பினையும், வரலாற்றையும் பற்றிய கற்கை நெறியாகும் – Oxford Dictionary
சமூகச் செயல்முறை பற்றி அறியும் அறிவியல் – Max weber – 1864-1920
சமூகவியல் என்பது மனித ஊடாட்டம் மற்றும் மனித இடைத்தொடர்புகள் பற்றி கற்கைநெறியாகும் – Morris Ginsberg
சமூகக் குழுக்கள் பற்றிய கல்வியே சமூகவியலாகும் – Johnson, 1977
மனிதன், குழுக்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கை முறை மற்றும் சமூக நடத்தைகள் பற்றி ஆராயும் இயல் சமூகவியலாகும் – Antony Giddens, 1994
“சமூக நிறுவனங்களைப் பற்றிய விஞ்ஞானமே சமூகவியல்” – Emile Durkhiem
ஒடோனால் சமூகவியலை „சமூகத்தைப் பற்றிய முறைசார்ந்த கற்கை – Donnel, 1992)
மேற்கூறிய வரைவிலக்கணங்களைத் தொகுத்து நோக்குமிடத்து சமூகவியலானது, தனி மனிதன் குழுக்கள் சமூகம் என்பவற்றின் நடத்தை, ஊடாட்டம், வாழ்க்கைமுறை என்பனவற்றைக் கருப்பொருளாகக் கொண்டுளள் து. இவற்றை விட அதன் இயல்பினைக் கொண்டு “சமூகவியல் சமூகம் பற்றிய ஒரு விஞ்ஞானம், சமூகத்தின் தோற்றப்பாடு பற்றிய விஞ்ஞானம், சமூகச் செயல்முறைகள் பற்றிய விஞ்ஞானம், சமூகத் தொடர்புகள் பற்றிய விஞ்ஞானம்” எனப் பொதுவாகப் பொருள் கொளள் ப்படுவதனைக் காணலாம். உன்னிப்பாக நோக்குமிடத்து சமூகவியலுக்கு கொடுக்கப்பட்டுளள் வரைவிலக்கணங்கள் அநேகம் உண்டெனினும் அவற்றின் உட்பொருள் ஒன்றாகவும் அவற்றினை விளக்குவதற்குப் பயன்படுத்திய சொற்களில் சில வேறுபாடுகள் உளள் மையையும் அவதானிக்க முடிகிறது.
”கல்வியின் அடிப்படைகளும் பாடசாலை முகாமைத்துவமும்” எனும் நூலில், “சமூகத் தொடர்புகள் பற்றி விஞ்ஞானபூர்வமாகப் பயிலும் பாடம் சமூகவியலாகும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சமூகத்தில் சமூகத் தொடர்புகளில் செல்வாக்குச் செலுத்தும் ஆட்கள், நிறுவனங்கள், குழுக்கள், குழுமங்கள், சந்தர்ப்பங்கள், நிகழ்வுகள், சமூக அமைப்புக்கள் என்பன காணப்படும்.
மேற்கூறியவற்றிலிருந்து சற்று வேறுபட்டதும் ஆழமானதொரு வரைவிலக்கணத்தை கிடிங்ஸ் என்பவர், சமூகவியல் என்பது சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு மற்றும் செயற்பாடுகளை அதன் பரிணாம வளர்ச்சிச் செயன்முறைகளுடனும் பௌதீக, உளவியல் காரணிகளுடனும் இணைந்து செயற்படும் ஒன்றாகும்” எனக் குறிப்பிடுகின்றார். இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில் சமூகவியலானது சமூகம் தொடர்பான வகைப்படுத்தப்பட்ட அறிவுத் தொகுதி, பல கோட்பாடுகள், சட்டங்கள், என்பனவற்றை உளள் டக்குவதுடன் காரணிகள், மற்றும் விளைவுகள், பற்றியும் ஆராய்கின்றது. மேலும் சமூகச் சக்திகளைக் கண்டறிந்து அதன் கட்டுப்பாடுகள் பற்றிய சட்டங்களையும் செயற்படும் விதிமுறைகளை உருவாக்கவும் முற்படுகின்றது.