சமூகநகர்வு

பொதுவாக மனிதர்கள் அவர்கள் சமூகத்தில் கொண்டிருக்கும் அந்தஸ்தினாலும் மற்றும் வசிக்கும் பாத்திரங்களாலுமே அளவிடப்படுகிறார்கள். மனிதன் சமூகத்தில் தான் கொண்டிருக்கும் அந்தஸ்து உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு விடயங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறான். தாழ் நிலையிலிருற்து உயர் நிலையை நோக்கிச் செல்வதற்கான உத்திகளையும் உபாயங்களையும் அவன் வகுத்துக் கொள்கிறான்.அவ்வாறு சமூகத்தின் பல்வேறு காரணிகள் மனிதனை உயர் நிலையிலிருந்து தாழ் நிலையை நோக்கி தள்ளிவிடுவதும் உண்டு. இவ்வாறு சமூகத்தில் வாழும் இத்தகைய மனிதர்களின் உயர்வு நோக்கிய மற்றும் தாழ்வு நோக்கிய அசைவையே “சமூகநகர்வு” எனும் பதம் குறிக்கின்றது. ஒருசமூகம் அதன் மக்களுக்குத் தங்களுடைய சமூகப் பொருளாதார நிலையை மாற்றிக்கொள்ளவும் இடம் விட்டு இடம் பெயர்ந்து குடியிருக்கவும் கலாசார மதிப்பீடுகளில் இணக்கமடையவும் எந்த அளவிற்கு அனுமதியும் வாய்ப்புக்களும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கின்றது என்பதைக் குறிக்கும் சொல்லாடல் சமூக நகர்வு என்றும் கூறலாம்.  

9ம் நூற்றாண்டின் இறுதியில் புதிய வேலைவாய்ப்புக்கள் விரிவடைந்தன.கல்வி வாய்ப்புக்களில் ஏற்பட்ட விரிவாக்கமும் அரசியல் அதிகாரமும் மக்கள் குழுக்களில் சிலருக்கு புதிய வாய்ப்புக்களை உருவாக்கின.சேவைத்துறை தயாரிப்புத்தொழில் போன்றவற்றில் ஏற்பட்ட விரிவாக்கம் அவற்றில் ஈடுபட்டோரின் வருமானம் மற்றும் சமூக நிலைமைகளில் மாற்றங்களுக்கு வித்திட்டன.இந்நூற்றாண்டின் முடிவின்போது புதிதாக தோன்றிய மத்திய வகுப்பிலிருந்து புதியதொரு கற்ற தொழிலாளர் வகுப்பினர் தோன்றினர். 

இவற்றினடிப்படையில் முன்னேற்றங்கண்ட பொருளாதார அந்தஸ்தானது சமூக அந்தஸ்தினை மேம்பாடடையச் செய்தது.இதனோடு இணைந்த வகையில் சமூகப்படிமுறையில் ஏற்பட்ட நிலைமாற்றங்கள் சமூகநகர்வு எனக் குறிப்பிடப்படுகின்றது. புலம்பெயர்வு அதிகமாக நடந்த இடமாக மத்தியஆசியா-மெசபடோமியா,ஐரோப்பா என்பவற்றைக் குறிப்பிடலாம

ஒரு தனியாள் அரசியல் ரீதியாக அதிகாரத்தைப் பெறும் போது அல்லது பணத்தையும் பட்டத்தையும் பெறும் போது அவர் தனிநபர் நகர்வை அடைந்து கொண்டதாக கொள்ளப்படுகின்றது. ஜிம்மி காட்டர்  ஒரு விவசாயியின் மகனாக இருந்தும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மாறினார். ஆர்.பிரேமதாச அவர்கள் சாதாரணதொரு ஏழையின் மகனாக இருந்தும் இலங்கையின் ஜனாதிபதியாக மாறினார். இப்படி ஏராளமான தனிநபர் வரலாறுகளை தனிநபர் நகர்வுக்கு உதாரணமாக கூறலாம். அதேபோல் சமூக நகர்வு மூலம் ஒரு குழுவில் ஏதாவது நிலை மாற்றங்கள் தோன்றுமானால் அது குழு நகர்வாக கொள்ளப்படுகின்றது.

சமூகநகர்வு என்ற எண்ணக்கரு பற்றி பல்வேறு சமூகவியலாளர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவை பின்வருவனவாகும்.

சொரக்கின்- “தனியாள் ஒருவர் ஒரு சமூக நிலையிலிருந்து இன்னொரு சமூகநிலைக்கு மாறுதல் சமூகநகர்வு எனப்படும்”

ஐவர் மொரிஸ்- “தனியாட்கள் அல்லது குழுக்கள் ஒரு சமூக நிலையிலிருந்து இன்னொரு சமூக நிலைக்குசெல்லல்”

கோல்ட் தோர்ப்(1980),கிளைவ் பைன்(1989)- “ஒரு சமூகத்திலுள்ள மக்கள் அதனின்றும் விலகி இன்னொரு சமூகக்குழுவுடன் இணைந்து கொள்ளுதல் அல்லது சமூக வகுப்பில் அவருடைய அங்கத்துவம் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதனை எடுத்துக்கூறுவது சமூக நகர்வு என்கின்றனர்.

நிக்கலஸ் அபேகுரொம்பி(1990) – “சமூகநகர்வு என்பது ஒரு சமூக வகுப்பிலிருந்து இன்னொரு சமூகவகுப்பிற்கு மாறும் செயல்முறையாக இருந்தாலும் அதனைப் புவியியல் சார்ந்த அசைவுடன் இணைந்து நோக்குதல் கூடாது”  என்றவாறு இவர்களின் வரைவிலக்கணங்கள் அமையப்பெற்றிருந்தன.

சமூகநகர்வு பற்றிய அனுபவங்களுக்கு மக்கள் காட்டும் பதிற்குறிகள் பற்றியறிதலும் அவசியமானது. சமூக அந்தஸ்த்தின் கீழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவர் என்பதுடன் சமூக உறுதித்தன்மைக்கு அது ஒரு அச்சுறுத்தலாகவும் இருக்கும்.இவ்வாறான பண்புகளைக்கொண்ட சமூகநகர்வானது பொதுவாக நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.அவையாவன, 

1. ஒருதலைமுறையில் நிகழும் நகர்வு.(Intragenerational mobility)

2. இரு தலைமுறைகளுக்கு இடையிலான நகர்வு.(Intergenerational
mobility)

3. கிடையான நகர்வு.(Horizontal mobility)

4. குத்தான நகர்வு.(Vertical mobility)  என்பனவாகும்.

மேலும், ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரித்தானியக்கல்வி முறை பற்றி ஆராய்ந்த அமெரிக்கச் சமூகவியலாளரான ரால்ப் ரேணர் என்பவர்கள் சமூகநகர்வை பின்வரும் 2 முறைகளில் நோக்கியமை குறிப்பிடத்தக்கது.அனுசரணை நகர்வு,போட்டி நகர்வு என்றவாறு அவை அமைகின்றன.

ஒரு தலைமுறையில் நிகழும் நகர்வு என்பது, ஒருவருடைய தொழில்சார் அந்தஸ்த்தினை அவருடைய வாழ்க்கைக்காலத்தில் குறிப்பிட்ட அல்லது பல கட்டங்களுடன் ஒப்பிட்டு அளவிடுதலாகும். உதாரணமாக, ஒருவர் சாதரண தொழிலாளியாக ஆரம்பித்து சிறிது காலத்தில் உயர் பதவியைப் பெறுதல் ஆகும்.

அடுத்ததாக இரு தலைமுறைகளுக்கு இடையிலான நகர்வு என்பது, தந்தையின் தொழில் அந்தஸ்த்துடன் மகனின் தொழில் அந்தஸ்த்தினை ஒப்பிட்டு அளவிடல் கிடையான நகர்வு என்பது, அந்தஸ்தில் மாற்றமில்லாது நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றம் இதுவாகும். இங்கு அவரது அந்தஸ்து மாற்றமடையாமல் நிலைமைதான் மாற்றமடைகின்றது. தனியாள் ஒருவர் ஒரு சமூகவகுப்பிலிருந்து அதே நிலையை ஒத்த இன்னொரு சமூகவகுப்பிற்கு நகருதல் ஆகும்; 
உதாரணமாக, ஒரு சாதாரண தொழிலாளியின் மகன் மருத்துவராக வருதலைக் குறிப்பிடலாம். 

இங்கு குறித்த நபருடைய சமூக நிலையில் மாற்றம் ஏற்படாது.இதில் ஒரு தலைமுறை மற்றும் இரு தலைமுறைகளுக்கிடையிலான நகர்வுகள் இடம்பெறும். உதாரணமாக, குறித்த ஒரு பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றும் ஒருவர் இன்னொரு அதனையொத்த பாடசாலைக்கு அதிபராக மாற்றலாகிச் செல்லுதல்.மற்றும் ஒரு பொறியியலாளர் தான் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து விலகி மற்றுமொரு நிறுவனத்திற்கு அதே பொறியியலாளர் பதவிக்கு செல்வதைக் குறிப்பிடலாம். 

குத்தான நகர்வு என்பது, ஒரு தனிமனிதன் அல்லது குழு ஒரு சமூக அந்தஸ்திலிருந்து மற்றொரு சமூக அந்தஸ்துக்கு நகர்வது குத்தான சமூகநகர்வு எனப்படுகின்றது. வகுப்பு, தொழில்,அதிகாரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களையே இது குறிக்கின்றது. ஒரு குத்தான சமூக அடுக்கிலிருந்து அல்லது ஒரு சமூக வகுப்பிலிருந்து இன்னொரு அடுக்கிற்கோ அல்லது வகுப்பிற்கோ நகருதல். இங்கு மேல்நோக்கிய நகர்வும் கீழ்நோக்கிய நகர்வும் அத்துடன் ஒருதலைமுறை மற்றும் இரு தலைமுறைகளுக்கிடையிலான நகர்வு காணப்படும்.

உதாரணமாக, ஏழ்மை நிலையினரின் மத்தியவகுப்பை நோக்கிய நகர்வு, கடைநிலை ஊழியராக இருந்த ஒருவர் பதவி உயர்வு பெற்றுசெல்லல் என்பவற்றைக்குறிப்பிடலாம். இதற்கு மேலதிகமாக அமெரிக்கச் சமூகவியலாளரான ரால்ப் ரேணர் என்பவர்களின் பிரிவுகளாக பின்வருபவை காணப்படுகின்றன. போட்டிநகர்வு என்பது, சமமான ஆற்றல்,தகுதியுடையோர் போட்டிகளில் பங்குபற்றும்போது தீர்ப்புகளும் நடுநிலையாக இருக்கும். சில சமயங்களில் இத்தகையோர் வெற்றி பெறாவிட்டாலும் வெகுமதியைப் பெற தகுதியுடையோராக கணிக்கப்படுவர்.இவ்வடிப்படையில் ரேணர் கல்விக்கும் போட்டிநகர்வுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார்.                                                       

அனுசரணை நகர்வு என்பது,போட்டிநகர்வுக்கு மாறாக உயர்குடியினர், அவர்களது முகவர்கள் திறமையை மதிப்பிட்டு ஆட்களை தெரிவுசெய்வர். போட்டிநகர்வானது தகுதியுள்ளவர்கள் உயர் அந்தஸ்த்தை அடையவேண்டும் எனவும் அனுசரணை நகர்வானது உயர் வகுப்பிலுள்ள ஆற்றல் வாய்ந்தவர்களை பொருத்தமான நிலைக்கு தெரிவு செய்வதை குறிக்கும்.

இவ்வாறான பல வகைகளைக் கொண்ட சமூகநகர்வில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தின. 

கல்வி,

சமயநிறுவனங்கள்  

அரசியல் நிறுவனங்கள்

வேற்றுநாட்டு  ஆதிக்கங்கள் 

குடும்பமும் திருமணமும்

கைத்தொழில்மயமாக்கம்

சட்டமியற்றல்(டுநபளைடயவழைn)

நவீனமயமாக்கம்(ஆழனநசnணையவழைn)

யுத்தங்கள். 

ஊக்கல்               என்பவற்றைக் குறிப்பிடலாம்.

கல்வியானது ஏனைய காரணிகளுடன் நேரடியாகவும்,மறைமுகமாகவும் தொடர்புபட்ட முறையில் தனியாள் மற்றும் குழு அடிப்படை நகர்வுக்கு உதவியுள்ளது.கல்வி மேல்நோக்கிய நகர்வுக்கான அடிப்படையாகும். ஒருவரின் கல்வித்தகைமை அதிகரிக்கும்பொழுது, சமூகத்தால் மதிக்கப்படும் உயர் அந்தஸ்துடைய தொழில்களைப்பெறும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.

தொழிலும் பொருளாதார செயல்களும் என்ற ரீதியில், தந்தை செய்த தொழிலிருந்து தனயன் வேறு தொழில் செய்யும் போதும், தான் செய்த சாதாரண தொழிலிருந்து வேறு தொழிலை செய்யம் போதும்,ஒரே தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும்போதும், தொழில் முதுநிலையை அடையும்போதும் சமூக நகர்வு இயல்பாகத் தூண்டப்படுகின்றது. சமூக நகர்விற்கான சந்தர்ப்பங்களை பொருளாதார நடவடிக்கைகள் வழங்குகின்றன. இந்நடவடிக்கைகள் மூலம் கிடைக்கம் வருமானம் மேல் நோக்கிய சமூகநகர்வைத் தூண்டுகின்றன. 
மேலும் அரசியல் நிறுவனங்கள் சமூகநகர்வில் செல்வாக்கு செலுத்துமாற்றை பார்க்கும்பொழுது,அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்களுக்கு குடிமக்கள் கட்டுப்படும் போது திட்டமிட்ட மாற்றங்கள் சமூகப் பரப்பிலே தோன்றுகின்றன. நீதி, குற்றம், சமவுரிமை, பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் தொடர்பான சட்டங்கள்; பல்வேறு நகர்வுகளை சமூகப் புலத்திலே ஏற்படுத்தியிருப்பதனை பல நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் இயற்றப்பட்ட இனப் பாகுபாட்டுக்கெதிரான சட்டங்கள் (Racial Anti-Discrimination) அங்கு வாழும் கறுப்பினத்தவரிடையேயும், பெண்களிடையேயும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தன என்பது ஆய்வாளர்கள் கூறும் கருத்தாகும். இன முரண்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பின்மை காரணமாக பல்வேறு மக்கள் நகர்வுக்குட்பட்டனர்.
கட்டமைப்புக்காரணிகளுடன் தனிநபர் காரணிகளும் ஒரு தனியாளின் உயர் அந்தஸ்து நிலையைத் தீர்மானிக்கின்றன.ஆற்றலிலுள்ள செயற்றிறனுள்ள தனிநபர்கள் அவை அல்லாhத தனிநபர்களை விட அதிக அந்தஸ்த்தை அடைந்து கொள்கின்றார்கள்.ஒரு தனிநபருக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அவனின் ஆற்றல்களும் சமூக நகர்விலும் அதன் வேகத்திலும் தாக்கம் செலுத்துகின்றன.
அவ்வகையில்,இலங்கையில் கல்வியும் சமூக நகர்வும் தொடர்புபட்டுள்ள விதத்தை ஆராயும்பொழுது, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆங்கிலமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு வழங்கிய தொழில் வாய்ப்புக்களும் சமூக நகர்வுக்கு அடிப்படையாக அமைந்தன.குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினரின் தோற்றம்,தேசிய உயர் குடியினர் உருவாதல்(கல்வி,பொருளாதாரம் அடிப்படையில்), 1939இல் இலவசக்கல்விச் சட்டத்தினால் சமூக வகுப்பு வேறுபாடின்றி எல்லோருக்கும் கல்வி வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றமை, மத்தியவகுப்பைச்சேர்ந்த உயர் தொழில்களை மேற்கொண்டோரும் வர்த்தகக்குடும்பங்களும் பெற்ற கல்வியானது பின் தங்கிய சமூகவகுப்பைச் சேர்ந்தோருக்கும் கிடைக்கப்பெறல், 20ம்நூற்றாண்டின் ஊ.றுறு.கன்னங்கரவினால் வழங்கப்பட்ட இலவசக்கல்வி, 1940களில் இலங்கையில் நிறுவப்பட்ட மத்தியப் பாடசாலைகள். காலத்துக்குக்காலம் அறிமுகப்படுத்தப்பட்ட புலமைப்பரிசில் திட்டங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இலங்கையில் மேல்நோக்கிய சமூகநகர்வு இடம்பெறுவதற்கு அடிப்படையாக சில அம்சங்கள் காணப்பட்டன.குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் சமூகவியல் சார்பான விருத்தியை வரலாற்று நோக்கில் விபரித்துள்ளன.சமூக பொருளாதார அந்தஸ்தை அடைவதற்கான பெறுமானங்கள் மேலைநாடுகளில் இடம் பெற்றிருந்து பெறுமானங்களிலிருந்து வேறுபட்டிருந்ததுடன் மக்களுடைய அந்தஸ்து வேறுபாட்டினை தீர்மானிப்பதற்கு கல்வி புதியதொரு அம்சமாக விளங்குகின்றுது
இவர்களுடைய அவதானிப்பின்படி,அரசதுறை தொழில்களைப் பெற்றவர்களுக்கு அப்பதவிகளிலிருந்து இளைப்பாறும் பொழுது அரசாங்கம் வழங்கும் ஓய்வூதியப்பணம் ஒரு பாதுகாப்பாக இருந்ததுடன் அரசாங்கத்துறை சார்ந்த தொழில்களுக்கு இருந்த கௌரவம் அதிக சீதனத்தையும் பெற்றுக்கொடுத்தது.  
                      
எனவே, சமூகத்தில் தான் இருக்கும் நிலையிலிருந்து மற்றுமொரு நிலைக்குச் செல்வதனை சமூக நகர்வு எனும் பதம் குறிக்கின்றது. இந்நகர்வு கீழ் நிலை நோக்கிய நகர்வாகவோ மேல் நிலை நோக்கிய நகர்வாகவோ காணப்பட முடியும். ஒருவர் கொண்டுள்ள கல்வி, தொழில், பொருளாதாரம் போன்றவையும் அதேபோல் சமயம், அரசியல், குடும்பம் போன்ற சமூக நிறுவனங்களும் ஒருவரது முயற்சி, அடைவு, திறமை, பயிற்சி, அதிஷ்டம் போன்றவையும் சமூக நகர்வை தூண்டுகின்றன. சட்டம், புலம்பெயர்வு, நவீன மயமாக்கம், கைத்தொழில் மயமாக்கம் போன்றவையும் சமூக நகர்வைத் தூண்டுகின்றன.
சமூக நகர்வு சமூகத்துக்கு தேவையான பல நன்மைகளையும் சில விபரீதங்களையும் கொண்டு வந்திருக்கின்றன.எனினும்,ஒப்பீட்டு ரீதியில் சமூக நகர்வு அதிக நற்பலன்களையே சமூகப் பரப்பில் ஏற்படுத்தியிருக்கின்றன.சமூக நகர்வை திட்டமிட்ட அடிப்படையில் கொண்டுவரும்போது தேக்க நிலையிலிருந்து சமூகத்தையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாத்து புதிய மாற்றங்களை சமூகப் பரப்பில் கொண்டு வர முடியும்.

Leave a Comment