சமூகமயமாக்கலும் அதன் முக்கியதுவமும்

உலகில் அல்லது உலகின் ஒரு பகுதியில் முன்னர் உறுப்பினராக அல்லாதவர்கள் உறுப்பினராக நுழைவதற்கு ஏற்ற தகுதிப்பாட்டினை வளங்குவதற்கான ஒரு செயற்பாடு சமூகமயமாக்கள் ஆகும். (WENTWORTH-1980)) 

சமூகமொன்றில் ஒரு மனிதன் தானும் ஒரு அங்கத்தவனாக இணைந்து வாழ எடுகின்ற முயற்சி அல்லது பயிற்சி சமூகமயமாதலாகும். ஒரு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய விடயமாக சமூகமயமாதல் காணப்படுகின்றது.  சமூகமயமாக்கள் முகவர்களாக குடும்பம், பாடசாலை இசமய நிறுவனங்கள் , சகபாடி குழு , வெகுசன ஊடகம் காணப்படுகின்றது. 

பிறந்த  குழந்தை சமூகமயமாதலுக்கு உள்ளாகும்  அதனை சுற்றியுள்ள சமூகமயமாக்கல் முகவர்களின்  தன்மையை கொண்டே அப்பிள்ளையின் பழக்கவழக்கங்களும்நடத்தைகளும்  தீர்மானிக்கப்படுகின்றன. எனவே சமூகத்துடன்  இணைந்து வாழ  சிறப்பான முறையில்  சமூகமயபடுத்தப்படுவது ஒவ்வொரு மனிதனதும் தேவையாக காணப்படுகின்றது. மனித வாழ்வு என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட மனித வாழ்வியல் காலக்கட்டங்களை குறிக்கின்றது. இக்காலகட்டத்தில் மனிதன், குடும்பம்இ திருமணம்இ கல்விபட்டம் இ பதவிஇ செல்வம்இ என்று பல வாழ்க்கை கோலங்களில் சங்கமிக்கின்றான். இவ்வாறு மனித வாழ்வு பல வாழ்க்கை கோலங்களைத் தாண்டி செல்கின்றது. 

ஒரே மாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூக உறவுகள் காணப்படும். இவ்வாறு சமூகத்தில் வாழும் ஒவ்வொரு  மனிதருக்கும் மேற்குறிப்பிட்டது போல தனிதனித்தனியான வாழ்கைக்கோலங்கள் காணப்படுகின்றது. இவ்வாறான வாழ்க்கை கோலங்களில் ஒவ்வொரு  மனிதனதும் மனப்பாங்கு, நடத்தை,  சிந்தனை,  ரசனை, ஆலோசனைகள் ஆசைகள் போன்றன வேறுப்பட்டு செல்வதினை அவதானிக்கலாம். இவ்வாறான வேறுபடபட்ட நடத்தைக் கோலங்கள் மானிடர்களிடையே காணப்டுவதற்கான காரணம் என்னவென்ற சமூகவியலாளர்களின் வினாவிற்கு விடைக் காண முயன்ற போது தோன்றியதே “சமூகமயமாக்கல்” எனும் அம்சமாகும். 

சமூகம் இயங்குவதற்கு கல்வி மிக முக்கியமானது. ஆகவே கல்வி செயன்முறையின் அடிப்படை நடவடிக்கை சமூகமயமாக்கலாகும். ஒருவன் சமூகத்தில் அடியெடுத்து வைத்தது முதல் மரணிக்கும் வரை சமூகத்துக்கு கடமைப்பட்ட நிலையி;ல் வாழ்க்கையைக் கொண்டு நடாத்துகின்றான். எங்கள் வாழ்க்கையை சமூகத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் நடத்த முடியாது. பிறப்பு முதல் மரணம் வரை சமூகத்தினால் நாம் பக்குவப்படுகின்றோம். சமூகத்துக்கு ஏற்ற பிரஜையை உருவாக்குதல் கல்வியினாலே நடைப்பெறுகின்றது. இதன்படி கல்விச் செயற்பாடுகளே சமூகமயமாக்கல் செயன்முறை எனக் கூறலாம்.

சமூகமயமாக்கல் நடவடிக்கையின் போது ஒரு பிள்ளைக்கு குடும்பத்திலிருந்து கிடைக்கும்  முக்கிய செல்வம் மொழியாகும். கருத்தும் பரிமாற்றலுக்;கும் அந்நியொன்னிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கும் மொழி உதவுகின்றது. சிறுவயதிலேயே சிறந்த பழக்கவழக்கங்கள் மற்றும் குணங்களை அறிமுகப்படுத்துவதும் அதற்கேற் பழக்குவதும் குடும்பத்தினாலேயே நிறைவேற்றப்படுகின்றது. அதேபோல குடும்பத்தால் அன்பு, கருணை, நம்பிக்கை  பொறுமை, பரஸ்பர ஒத்துழைப்பு, ஒழுக்க விழுமிய பண்புகள் தியாக மனப்பான்மை, சிறந்த தலைமைதுவம், ஒற்றுமை, சமய ஒழுக்காறு ஆகியப்பண்புகளை குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும். சமூகம் ஏற்று கொண்டதும் மதிப்பதுமான குணங்கள் முதலில் பெற்றுக் கொடுப்பது குடும்பமேயாகும். மேலும் உணவருந்தும் முறை, சுகாதார பழக்கவழக்கங்கள் என்பவற்றையும் குழந்தை குடும்பத்திலிருந்தே கற்றுக் கொள்கின்றது. மேலும் ஒரு குடும்பத்தின் கட்டமைப்பானது சீரான முறையில் ஒழுங்கமைக்கப்படாத விடத்து குடும்பத்தினால் சிறந்த சமூகமயமாக்கலை வழங்குவது கடினமான விடயமாகும். 

அதேப்போல ஒரு மனிதனை சமூகமயமாக்குவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பானது மிக முக்கியமானதாகும். கல்விக்கு வரைவிலக்கணம் கூறும் நவீன சமூகவியளாலர்கள் “வாழ்க்கையே கல்வி , மனித பண்பு வளர்ச்சியே கல்வி” என்கின்றனர். இதற்கான பயிற்சி; பாடசாலைகளின் மூலமே வழங்கப்படுகின்றது எனலாம். 

இதனையே டர்கயிம் என்பவர், “கல்வி நிறுவனமொன்றின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டியது எதிர்கால பொறுப்புக்களை ஏற்க்க்கூடிய விதத்தில் சிறுவர்களை சமூகமயமாக்குதலாகும் எனக் கூறினார்.  சமூக நன்மைக்  கருதி செயல்ப்படும் சிறந்த ஆளுமையை தனியாட்களிடம் உருவாக்குவதற்கு பாடசாலை முக்கியமான சில கடமைகளை நிறைவேற்றுகின்றது. பாடசாலைக் கலைத்திட்டத்தில் சமூக செயற்பாடுகளுக்கான பயிற்சியும் வழங்ப்படுகின்றது. அந்த வகையில் பாடசாலையில் நடைப்பெறுகின்ற விளையாட்டுப் போட்டி , கல்விச் சுற்றுலா முறை , குழு முறை கற்பித்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் சமூகத்தோடு பரஸ்பரம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் குழுக்களாக செயற்படவும் வாய்ப்பளிக்கப்படுகின்றது.

ஒரு பிள்ளை வளர்ந்த சமூகத்தினராக மாற்றுவதற்கு அப்பிள்ளைக்கு பாதுகாப்பு அளிக்கும், நேசிக்கும் , அவரை பாராட்டும் , ஏற்றுக்கொள்ளும் , தண்டனை வழங்கும் , அவருக்கு கற்பிக்கப்படும் எல்லா விதமான சமூகத்துடன் கருதப்பட்டவைகள் சமூகமயமாக்கல் காரணிகளாகும்.அவ்வாறு ஒரு பிள்ளை சமூகமயமாக காரணமாக அமைகின்ற மனிதக் குழுக்கள் , சமூக நிறுவனங்களே சமூகமயமாக்கள் முகவர்களாகும்.

இவ்வாறான சமூகமயமாக்கள் முகவர்களை 03 வகையின் கீழ் வகைப்படுத்திக் குறிப்பிடலாம். 

01.முதன்மையான காரணிகள் – குடும்பம், ஒத்த வயதினர், சகபாடிகள் , சகோதர    சகோதரிகள்.

02.துனையான காரணிகள்   – பாடசாலை , தொடர்பு சாதனம் , ஊடகங்கள் , சமய தாபனங்கள் ,  சமூகக் குழுக்க , சுயாதீன குழுக்கள்.

03.புடைக் காரணிகள்     – தொலைக்காட்சி ,கணனி , தொலைபேசி , செய்தித்தாள் , வானொலி , இணையம்.

மேலே குறிப்பிட்டது போல பாடசாலையினதும் குடும்பத்தினதும் பங்களிப்பு எவ்வாறாக காணப்பட்டது என அறிவோம். அதேப்போல மிக முக்கியமானவர்கள் சகபாடிக் குழுக்கள் ஆவர். இவர்களே இரண்டாவது பெரிய சமூகமயமாக்கல் முகவர் ஆவர். பிள்ளையின் வயது அதிகரிக்கும் போது குடும்பத்தின் செல்வாக்கு இன்றியும் படிப்படியாக விடுபட்டு சமவயது குழுக்களின் உறுப்பினராக மாறுவர்.இது உளவியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் ஓர் அவசியத் தேவையாகும். அது மட்டுமின்றி அனுபவங்கள் மூலமான ஆளமை வளர்ச்சி தேவை ,புதிய சக்திகளையும் திறன்களையும் அடைவதற்கான தேவை என்பவையும் சகபாடிக் குழுக்கள் மூலமாக நிறைவேற்றப்படும். 

சமூகமயமாக்கல் முகவராக சமய தாபனங்களும் திகழ்கின்றது. கோவில்கள், விகாரைகள்; , பள்ளிவாசல்கள் , தேவாலயங்கள் போன்றவை இதற்கான உதாரணங்களாகும். புண்ணிய செயற்பாடுகளும் , தர்ம போதனை , தானம் வழங்கள் , பொருந்தி வாழல் , சமத்துவ இயல்பு , ஒழுக்கம் பேணுதல் , பொறுமை , கருணை , பிரதி உபகார சிந்தனை என்பவற்றை தனியாட்களிடம் வளர்க்க முற்படுகின்றது.

சமூகமயமாக்கலின் முக்கிய பங்கு வகிப்பதில்  வெகுசன ஊடகங்களும் சலித்ததல்ல. காரணம், தற்காலத்தில் சமூகமயமாக்களின் முதன்மைப் பங்கு வெகுசன ஊடகங்களுக்கே சென்றடைகின்றன. ஊடகங்கள்  என்பதில் புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிப்படங்கள் மற்றும் காட்சிகள் , வீடியோ வலைப்பின்னல், மற்றும் அனுப்புபவர் , பெற்று கொள்பவருக்கு இடையிலான சாதனங்களினூடாக அதிகளவிலான பார்வையாளர்களை போய்  சேருகின்ற ஏனைய தொலைத் தொடர்பான மற்றும்  தகவல்  தொழிநுட்ப முறைமைகள் உள்ளடங்குகின்றன. 

வெகுசன ஊடகங்களினால் ஒரு தகவல் மக்களுக்கு விரைவாகவும், தெளிவாகவும் கிடைக்கப்பெறுகின்றன. மிக முக்கியமாக தற்போதைய கொரோனா போன்ற நிலைமைகளை சமாளிக்க ந-டநயசniபெ மூலமான கற்ப்பித்தல்களை  முன்னெடுக்கலாம். அத்தோடு பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறியவர்களுக்கும் ஓய்வு நேரங்களை மகிழ்ச்சியாகவும், தாம் வாழும் சமூகத்திற்கு ஏற்ப மாற்றம் பெற உதவுவதாகவும் வெகுசன ஊடகங்கள் இருந்து வருகின்றது. இவ்வாறு வெகுசன ஊடகங்களினால் கிடைக்கும் நன்மைக்கு அப்பால் தீமைகளும் காணப்படுகின்றன.

வெகுசன ஊடகங்களை இளைஞர்கள் நல்ல முறையிலின்றி சிலர் தீய முறையிலும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, தொலைப்பேசி  மூலம் சமூகவிரோத செயற்பாடகளில்  இணைதல், விளம்பரங்களை நம்பி  பாதகமான  பழக்கங்களில்  ஈடுபடல், தேவையற்ற ஆபாச படங்களை பார்வையிடல் ,முறையற்ற கலாசாரத்திற்கு அடிமையாதல் ,முகப்புத்தகத்தில்  பல்வேறு பிரச்சினைகளில்  சிக்கி கொள்ளல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனினும் நாம் வெகுசன ஊடகங்களை முறையாக சரியான விதத்திலேயே பயன்படுத்த வேண்டும். 

பிறக்கும்  குழந்தைகள் அனைவரும் சமூகமயமாதலுக்கு உள்ளாகுவர்  அதனை சுற்றியுள்ள சமூகமயமாக்கல் முகவர்களின்  தன்மையை கொண்டே அப்பிள்ளையின் பழக்கவழக்கங்களும் நடத்தைகளும்  தீர்மானிக்கப்படுகின்றன. எனவே சமூகத்துடன்  இணைந்து வாழ  சிறப்பான முறையில்  சமூகமயபடுத்தப்படுவது ஒவ்வொரு மனிதனதும் தேவையாக காணப்படுகின்றது.

Leave a Comment