சமூகவியலின் தோற்றமும் அதன் வளர்ச்சியும்

சமூகவியல் எனும் கோட்பாடு 19ம் நூற்றாண்டில் தான் தனித்ததொரு துறையாக வலுவாக உருப்பெற்றது எனினும் அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே உலகம் முழுதும் சமூகவியற் சிந்தனைகள் இருந்துள்ளன என்பத
ற்குப் பல சான்றுகள் உள்ளன. பிளேட்டோ, அரிஸ்டோட்டில்,மனு,கௌடில்யர், கன்பூசியல், சீசர் போன்றோரின் எழுத்துக்கள் சமூகவியலின் பால் தனித்த ஈடுபாடுடையவர்களாகத்தான் விளங்குகின்றன. ஆவை நெறிப்படி சமூகவியலின் இயல்பு தன்மைகள், சட்டம், தத்துவம் ஆகிய கோட்பாடுகளை ஆய்ந்து விளக்கம் தந்துள்ளன. பிளோட்டோவின் “ரிபப்ளிக்”, அறிஸ்டோட்டிலின் “பாலிடிக்ஸ்”, கௌடில்யரின் “அர்த்த சாஸ்திரம்”, கன்பியூசியசின் “அனலெக்ட்ஸ்”, சீசரின் “ஆன் ஜஸ்டிஸ்”  ஆகியவை சமூகவியல் சிந்தனைகளைத் தெளிவாக உரைக்கும் நூல்களாகும். 

 சமூகவியல் துறை பிரெஞ்சுப் புரட்சிக்குச் சற்றுப் பிந்திய காலத்தில் அறிவொளிச் சிந்தனைகளில் இருந்து, சமூகத்தின் நேர்காட்சியில் அறிவியலாக உருவானதில் இருந்து தொடங்குகிறது. இதன் தோற்றத்துக்கு அறிவியல் மெய்யியலையும், அறிவு மெய்யியலையும், சார்ந்த பல்வேறு இயக்கங்கள்  காரணமாக இருந்தன. வுpரிந்த நோக்கில், சமூகப் பகுப்பாய்வு, சமூகவியல் உருவாவதற்கு முன்னமே பொதுவான மெய்யியலின் ஒரு பகுதியாக தோற்றம் பெற்றது.தற்காலப் புலமைசார் சமூகவியல், நவீனத்துவம், முதலாளித்துவம், நகராக்கம், பேரரசுவாதம், ஆகியவற்றுக்கான ஒர் எதிர்வினையாகத் தோன்றியது.19ம் நூற்றாண்டுச் சமூகவியல், நவீன தேசிய அரசின் தோற்றம், அதன் உருப்பு நிறுவனங்கள், அதன் சமூகமயமாக்கல் அலகுகள், அவற்றின் கண்காணிப்பு முறை ஆகியவற்றை தொடர்பில் குறிப்பாக வலுவான ஆர்வம் கொண்டிருந்தது. அறிவொளிச் சிந்தனைகளை விட, நவீனத்துவக் கருத்துருவே பெரும்பாலும், சமூகவியல் விடயங்களைச் அரசியல் மெய்யியலில் இருந்து வேறுபடுத்தியது.

மேலைத்தேய அரசியற் சிந்தனையாளரும் தத்துவவியலாளருமான பிளேட்டோ, கொப்ஸ், லொக், ரூசோ, மொண்டஸ்கியு போன்றோர் அரசியல் பிரச்சினைகளையும்சமூகப் பிரச்சனைகளையும் ஆராய்ந்தவர்களாவார். அடம்ஸ்மித் சமூக ஒழுங்கமைப்புக்களுக்கும் சமூகமாற்றங்களுக்குமான காரணங்களைத் தேடியறிற்தார். 19ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே சமூகவியல் சார்ந்த ஒரு நோக்கு வளர்ச்சியடைந்தது.சமூகவியல் என்னும் சொல்லை பிரான்சு நாட்டவரான ஒகஸ்ட் கொம்டே என்பவரே பயன்படுத்தினார். கொம்டே அவர்கள் சமூகக் கோட்பாடுகளை உருவாக்குவதன் மூலம் சமூகத்தை முன்னேற்ற முடியும் என்ற சிந்தனையைக் கொண்டே இவர் கலாசாரத்தினையும் சமூக வாழ்ககையையும் பகுப்பாய்வு செய்ய முற்பட்ட போது மனித அபிவிருத்தியின ; ஒவ்வொரு நிலைகளுடனும் சமூகத்தினை இணைக்கும் கோட்பாடுகளை இனங்காண முற்பட்டார். விளக்கங்களின் அடிப்படையில் ஹரியட்மாட்டின் (1802 – 1876) சமூக நடத்தைகளை அவதானித்ததன் மூலம் பெற்ற சமூகவியலின் மேம்பாட்டிற்கு உழைத்தார். எமில் துர்கையிம் 1858 – 1916 சமூகங்கள் கூட்டாக இயங்கும் முறைகளை முன்வைத்தார். தமது ஆய்வுகளில் தனியாட்களிலும் பார்க்கக் குழுக்களே முக்கியமானவையெனக் கருதியமையால் சமூகவியல் பற்றிய ஆய்வுகளில் சமூக அம்சங்களுக்குரிய முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டினார். 

மக்ஸ்வெபர் 1804 – 1920 இவர் சமூகச் செயற்பாடுகள் பற்றிய ஆய்வுகளுக்கு சமூகவியலின் இன்றியமையாமையை முன்வைத்தார். பணிக்குழுவாட்சி அதிகாரம், சமூக அடுக்கமைப்பு, சட்டம், சமயம், முதலாளித்துவம் போன்ற இவரது கருத்துக்களும் முக்கியமானவை. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் சமூகவியல் ஒரு பாடமாக கற்பிக்க ஆரம்பித்தனர். 1890 இல் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் தனியொரு பாடமாக அறிமுகமானது. 1892இல் அல்பியலன் று.சிமோஸ் என்பவர் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையை ஆரம்பித்தார். ஐரொப்பாவில் 1895இல் போர்டியாக்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையை எமில் துர்கையிம் ஆரம்பித்தார்.   1919இல் மக்ஸ் வெபர் மியூனிச் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையை ஆரம்பித்தார். இன்று உலகின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி சமூகம் சார் நிறுவனங்களிலும் சமூகவியல் தனியொரு துறையாக வளர்சசிடைந்துள்ளது.

சமூகவியல் என்னும் துறைகுறித்த விளக்கம், “சமூகவியல் என்பது மனித சமூகத்தின் இயல்பினையும் வரலாற்றினையும் பற்றிய கற்கை நெறியாகும். “சமூகச் செயன்முறை பற்றிய அறியும் அறிவியல்.” , “சமூகவியல் என்பது மனித ஊடாட்டம் மற்றும் மனித இடைத் தொடர்புகள் பற்றிய கற்கை நெறியாகும்.” சமூகக் குழுக்கள் கற்றிய கல்வியே சமூகவியலாகும். “மனிதக் குழுக்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கை முறை மற்றும் சமூக நடத்தைகள் பற்றி ஆராயும் இயல் சமூகவியலாகும்” “சமூகவியல் என்பது சமூகம் பற்றிய கற்கை என்கையில் மக்கள் குழுக்கள் மற்றும் சமூக நடத்தைகள் பற்றி ஆராயும் இயல் சமூகவியலாகும்.”  போன்றோரின் கருத்துகள் முக்கியமானதாகும்.

ஹெபர்ட் ஸ்பென்ஸர் 1820-1903 பிரெடரிக் லபிலே 1806-1882 கார்ள் மார்க்ஸ் 1818-1883 சார்ள்ஸ் டார்வின் 1809-1892 சிகன்மண்ட்; ப்ராய்ட் 1856-1939 போன்றோர்கள் சமூகவியல் வளர்ச்சிகாக பாடுபட்ட அறிஞர்கள் ஆவர். கைத்தொழில் புரட்சிஇ பிரான்சியப் புரட்சிஇ மனித உரிமைப் பிரகடனம்இ முதலாளித்துவ சமவுடைமைப் பொருளாதாரங்களின் வளர்ச்சிஇ அறிவியல் சிந்தனை வளர்ச்சி, புத்தொளிக் கொள்கையின் வளர்ச்சிஇ ஐரோப்பிய மாக்ஸிசவாதத்தின் எழுச்சி போன்றன சமூகவியல் தோற்றத்திற்கும் வளர்ச்சிகும் காரணங்களாக அமைகின்றது. 

மனிதனையும் மனித நடத்தைகளையும் சமூக விஞ்ஞானக் கற்கைகள் என்ற பகுதிக்குள் பல பாடங்கள் உள்ளன. சமூக விஞ்ஞானப் பாடங்களில் பிரதான பாடங்களில் ஒன்றாகச் சமூகவியலைக் குறிப்பிடலாம். இச்சமூகவியல் சமூக விஞ்ஞானப் பாடங்களில் இடம்பெறும் ஏனைய பாடங்களுடன் தொடர்புடையவை. அத்தகைய தொடர்புடைய பாடங்கள் பின்வருமாறு அரசறிவியல் புவியியல் பொருளியல் மானிடவியல்  உளவியல்  குடிசனவியல்  வரலாறு  தத்துவம் போன்றவைகளாகும். 

மேலும் 1941ல் அமெரிக்க நாட்டுச் சமூகவியலாளரான சொர்க்கின் (ளுழசயமin) என்பவர் சமூக விஞ்ஞானங்களில் முக்கியமான பிரிவு சமூகவியல் எனக் குறிப்பிட்டதுடன் சமூகவியலைப் பின்வரும் உபபிரிவுகளாக எடுத்துக்காட்டியுள்ளர். (குடிசனச் சமூகவியல் சட்டம் பற்றிய சமூகவியல் நகரச் சமூகவியல் குடும்பச் சமூகவியல் சமயச் சமூகவியல் குற்றவியல் சமுகவியல்)

எமில் துர்கெயிம் சமூகவியலின் உப பிரிவுகளாகப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றார் (பொதுச் சமூகவியல் சமயச் சமூகவியல்  குற்றவியற் சமூகவியல்  சட்டச் சமூகவியல்  பொருளாதாரச் சமூகவியல்  புள்ளிவிபரச் சமூகவியல); பொதுவாக 1960களில் இரு வகையாக பாகுப்படுத்தப்படுகின்றன. தூய சமூகவியல், பிரயோகச் சமூகவியல், (கைத்தொழில் சமூகவியல்,  அழகியற் சமூகவியல், கல்விச் சமூகவியல், மருத்துவச் சமூகவியல், சட்டச் சமூகவியல், குடிசனச் சமூகவியல் ,நகரச் சமூகவியல்) இவ்வாறு சமூகவியலின் வகைப்பாடு காணப்படுகின்றது.

சமூகவியலின் முக்கியத்துவம் எனும் பொழுது,இக்கற்கைத் துறையானது சமூகப் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விசாரனை செய்தல் என்பவற்றுக்கான சமூக பொறியியலாளர்களை (ளுழரட நுபெiநெநசள) உருவாக்கின்ற துறையாகும். இவர்கள் பல்வேறு கருத்திட்டங்களை (pசழதநஉவ) தயாரிப்பதற்கு முன்வராமல் சமூக தேவைகள் பற்றி கவனம் எடுப்பவர்களாக விளங்க வேண்டும். வணிகமயமான அமைப்பான்மைகளில் சமூக அம்சங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. சமூக தேவைகளை அடிப்படையாகக் கொண்டே உற்பத்தி செயன்முறைகளும், வணிக செயற்பாடுகளும் நடைபெறுவதால் அங்கு சமூகவியல் முக்கியத்துவம் பெறுகின்றது.

சமூகவியல் என்ற கற்கையானது சமூகத்தேவைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் விசாரனை செய்வதற்கும் உதவுகின்றது. இதன்படி அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளில் வரையறுக்கப்பட்ட வளங்களின் விசேடத்தன்மை பற்றியும் அவற்றின் முறையான பங்கீடு பற்றியும் திட்டமிட்டுக் கொள்வதற்கு திட்டமிடல் சார்ந்த துறையினருக்கு உதவுகின்ற கற்கைத் துறையாக இது அமைகின்றது.(மக்களின் தேவையறிந்து திட்டமிடல் வேண்டும்.)சமுதாயத்தாலே அதிகளவு கேள்வியுள்ள அரச துறை, கைத்தொழில் துறை, நகர திட்டமிடல் துறை, தொடர்பாடல் துறை, விளம்பரத்துறை போன்ற பல சமூக வாழ்வில் பல்வேறு துறைசார்ந்த விடயங்களுக்கும் சமூகவியல் சார்ந்த அறிவு பயன்படுத்தப்படுகின்றது.(அரசதுறை – தேர்தலில் பொதுசனத்தின் அபிப்பிரயாயம் என்ன? என ஆராய்ந்து பல ஆய்வு செய்யும் முறை காணப்படுகின்றது.இவ்வாறு சமூகவியலில் உலக அளவில் சாதித்த வல்லுநர்களாக இம்மானுவேல் ஜோசப்,அகஸ்டேகாம்டே, அடால்ப்க்யூட்லேட், ஹெர்பெர்ட் ஸ்பென்சர், எமில் டெக்கீம்,மாக்ஸ் வெபர் போன்றோர் காணப்படுகின்றனர்.புதியன புகுதலை போன்று இத்துறை காலத்திற்கு காலம் வளர்ச்சியடையும் துறையாக சமூகவியல் காணப்படுகின்றது

Leave a Comment