சமூகவியல் குழுக்களும் அவற்றின் முக்கியத்துவம்

தனியாட்கள்தமக்குள்பொதுவானஅடையாளத்தைஇனங்கண்டு உணர்ந்து ஓர் அமைப்புக்கள் உட்பட்ட வழியில் நரந்தரமான இடைத்தாக்கத்தில் ஈடுப்பட்டுதமது இலக்குகளையும் நியமனங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு குழுவினைச் ‘சமூகக் குழு”எனலாம் சமூகக் குழு தொடர்பாக அறிஞர்கள் சிலர் சில வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். “சமூக குழு என்பது சமூக இடைவினையின் முறைமை”, “ஒரு அமைப்புக்கு  உட்பட்ட முறையில் தொடர்புகளில் ஈடுபடுவர்களின் தொகை நோக்கம ; தொடர்புகளின்  காலம் போன்றவை  குழவை இனஙகாட்டும்”,  “குறித்த காலவேளையில் சில உடன்பாடுகளின் அடிப்படையில் இடைவினைத் தாக்கங்களில் ஈடுபடும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொண்ட தொகுதி சமூக குழு எனலாம்.

 ‘குழு” என்பதன் விளக்கம்

மனிதன் தனித்து வாழ இயலாதவன். ஏதோ ஒரு வகையில் ஏனையவருடன் இணைந்து வாழவேண்டிய சூழலுக்குட்பட்ட வாழ்க்கை நிலையை மனிதன் வாழ்கிறான். இவ்வாறு தனித்து வாழ முடியாதமனிதன் தமக்கிடையே காணப்படுகின்ற ஒற்றுமையின் அடிப்படையில் அல்ல தேவையின் அடிப்படையில்கூட்டம் கூட்டமாக வாழ தொடங்குகின்றான். இவ்வாறு கூட்டமாக வாழ்கின்ற அமைப்பே சமூகம் ஆகும்.இச்சமூக அமைப்பில் சமுதாயம் என்ற குழுவுக்கும் பொதுமக்கள் என்ற குழுவுக்கும் இடைப்பட்ட குழுவாகஇருப்பது சமூகக் குழுமம் என அழைக்கப்படும்.அரிஸ்டோட்டில் என்ற கிரேக்க மேதை ‘மனிதன் ஒரு சமூக விலங்கு” என்று கூறுகிறார். மனிதர்கள் தனித்து வாழ இயலாதவர்கள். மனிதர்கள் கூட்டமாக வாழ்கிறார்கள். அவர்களுடைய அடிப்படைத்தேவைகளான பசி பாலுணர்வு பாதுகாப்பு ஆகியவற்றைப் பூர்த்தி செய்து கொள்ள மக்கள், சமூகத்தில் வெவ்வேறு குழுக்களாக வாழ்கின்றார்கள. அடிப்படையில் குழுவானது மக்களின் ஒர கூட்டமாகும்.ஆனால் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள மக்கள் கூட்டத்தை ஒரு வெவ்வேறு விளக்கங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கீழே காண்போம்.

 சமூகக் குழுமங்கள்

வெவ்வேறு வகையான குழுமங்கள் காணப்படுகின்றன. ஆரம்பம் தொடக்கம் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த விதத்தை வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. மனிதன் குழுத் தொடர்புகளில் முனைப்புக் காட்டுகின்றமையானது மக்கோ என்பவரின் இயல்புக் கொள்ளையில் அடங்கியுள்ள’குழுவூக்கம்” மூலம் விளக்கப்படுகிறது.

குழுமங்களின் தன்மை வெவ்வேப்பட்டதாகும். குழுமங்கள் ஒழுங்கமைவு குறைவான நிலை தொடக்கம் நன்கு ஒழுங்கமைந்த நிலை வரை காணப்படும். குழுமங்கள் சிறியவை தொடக்கம் பெரியவை வரையிலும் காணப்படும். குழுமங்களுக்கு இடையே காணப்படும் இவ்வேறுபாடுகளை அடிப்படையாகக ;கொண்டு சமூகங்களை வகைப்படுத்த முயற்சி செய்துள்ளனர். 

ஆரம்பக்குழுக்களும் இரண்டாம் நிலைக் குழுக்களும்

ஆரம்பக்குழுக்களும் இரண்டாம் நிலைக்குழுக்களும் அந்;நானயமான தனிப்பட்ட நெருங்கிய  உறவை பேணும் குழவினை  ஆரம்பக்குழு எனலாம்;  உளவியலடிப்படையில் பல்வேறு நோக்கங்களுடன் கூடிய பொது வாழ்க்கைக்கு உட்பட்டதாக காணப்படும். ஆரம்பக் குழவினை இலகுவான முறையில் எடுத்துககூறுவதனால் இக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் நாம் என்ற உணர்வு இருக்கும்.சமூகத்தில் முக்கிய வகிபங்கினை  ஆரம்பக்குழுக்கள் வகிக்கின்றன.இக்குழுவின் உறுப்பினர்கள்  ஒவn;வாருவரும்சமூகத்திற்கு கட்டுபாடுடையவர்கள் என்ற வகையில் பல பொறுப்புக்களை ஏற்கின்றனர்;. , உறுபப்பினர்களின் நடத்தையை கட்டுப்படுத்தல், நடத்தைகளை சீர்தத்திருத்தல் மற்றும் சமூக மாற்றம்.

ஆரம்பக்குழுக்களை தீர்மானிக்கின்ற காரணிகளாக  பௌதீக நிலைமை பௌதீக ரீதியான அண்மிய நிலை உறவு நிலை நிலைக்கான முக்கியத்துவம் உள நிலைமை தனிப்பட்ட உறவுகள் உறவின் உள்ளடக்கிய தன்மை உறவினை இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல் உள்ளக கட்டுப்பாடு பாதுகாப்பு உயர்வு  பரஸ்பர ஒததுழைப்பு முதலியவற்றைகக் குறிப்பிடலாம்.இரண்டாம் நிலைக் குழுவை பொறுத்தவரையில் அகக் குழு உறுப்பினர்களிடையே உறவுகள் மட்டுப்படுத்தப்பட்டவை.

ஆலோசனைக் குழு

ஒரு சமூகக்குழுவிலுள்ள உறுப்பினர்கள் தம்மையும் தமது நடத்தைகளையும் மதிப்பீடு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் சில குழுக்கள் முக்கியமானவை. இத்தகைய குழுக்களில் ஒன்று ஆலோசித்தல் குழுவாகும்.

அகக்குழுக்களும் புறக்குழுக்களும்

அகக்குழு மற்றும் புறக்குழு என்ற கருத்து நாங்கள் எங்களுடையது அவர்கள் அவர்களுடையது என்ற விளக்கத்தினைத் தருகின்றது , ஒரு நாடு பிராந்தியங்கள் சமயங்கள் மற்றும் இனத்துவக் குழுக்கள் எல்லாம் இந்த வகையினுள் அடங்குகின்றன , ஒரு இனம் இன்னொரு இனத்திலும் பார்க்க மேலானது என்ற சிந்தனை புறக்குழு உறுப்பினரின் நடத்தைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது. 

சகபாடிக் குழு

சகபாடிக் குழுவும் ஆரம்ப நிலைக்குழவாக அல்லது முறையில் குழுவாக செயற்படுகிறது.வயதில் மற்றும் பண்புகளில் ஒத்தத் தன்மை கொண்டவர்கள் இடம்பெறும் குழுவாகும் , சகபாடிக் குழுவானது ஆலோசனைக் குழுவாகவும் செயற்படுகிறது , இக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் , ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்களாக இருத்தல் ,  நாம் என்ற உணர்வு இருக்கும் , நடத்தைகளில் ஒத்தத்தன்மை காணப்படும் , குழுவிலுள்ள உறுப்பினர்களின் நடத்தையைக்      கட்டுப்படுத்தல் , பரஸ்பரம்இகட்டுப்பாடுஇபரஸ்பர எதிர்பார்ப்பு என்ற குணவியல்புகள்  கொண்டவர்களாக காணப்படுகின்றன.

முறைசார் குழுவும் முறையில் குழுவும்

கல்வி நிலையங்களில் அவற்றி;ன் விசேட இலக்குகள் சிலவற்றை அடையும் நோக்கில் திட்டமிட்ட செயற்பாடுகளுடன் கூடியவாறு உருவாகும் குழுக்களை முறைசார் குழுக்கள் எனலாம். ஓர் இலக்கினை அடைவதற்கு இயைபுப்படுத்தப்பட்ட  திறன்களையும் அவற்றினைக் கொண்டுள்ள ஆட்களும் தேவைப்படும் போது முறைசார் குழுக்கள் உருவாகின்றன.சமூகத்தில் மூன்று வகையான முறைசார் குழுக்களைக் காணலாம்.

தன்னார்வ நிறுவனங்கள் , முழுமையான நிறுவனங்கள் , பணிக்குழுவாட்சி என்பனவாகும்.

பாடசாலையில் குழுக்களின் தாக்கம்

பாடசாலையைப் பொறுத்தவரையில் அங்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் போன்றோர் காணப்படுகின்றார்கள். இவர்களின் கருத்துக்கள் விருப்பு வெறுப்புக்கள்,மனப்பாங்குகள்,ஆர்வங்கள் போன்றன தனியான ஒற்றுமை வேற்றுமைகளில் பல தரப்பட்டகுழுக்கள் தோன்றுவது இயற்கையான தன்மையாகும்.

முறைசார்ந்த குழு

கல்வி நிறுவனங்களால் அவற்றின் விசேட இலக்குகள் சிலவற்றை அடையுமம் நோக்கில் திட்டமி;ட்ட செயற்பாடுகளுடன் கூடியவாறு உருவாகும் முறைசார் குழுக்கள் எனலாம்.                                         

உதாரணம் : பாடசாலை முகாமைத்துவக்குழு 

சமூகக் குழுக்களின் முக்கியத்துவம்

சமூகமொன்றின் வினைதிறன்மிக்க இயக்கத்துக்கு சமூகக் குழுக்கள் பெருமளவில் பங்களிப்பு செய்கின்றன. சமூக அமைப்புகள் குழுக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுதல் இதற்குச் சான்றாகும். சமூகம் ஒன்றில் சமூகக்குழுக்கள் இல்லாதொழிக்கப்படுமானால் சமூகமென்பது நீடித்து நிலவ முடியாது. சமூகத்தில் உறுப்பினர் ஒருவரை இன்னொருவர் அறிந்துக்கொள்வதற்குக் குழுக்களே உதவுகின்றன. குடும்பம், அயலவர், ஊறவர், அரசியல் கட்சிகள், சமயக்குழுக்கள் என்பவற்றின் உதவியுடன் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளப்படுவதன் வாயிலாக திறந்த சமூகமொன்று இயங்குகிறது. பாடசாலைச் சமூகத்திற்கூட பாடசாலை, வகுப்பு, நட்புக்குழு, விளையாட்டுக்குழு என்ற அடிப்படைகளில் மாணவரை வகைப்படுத்தி அறிந்து அங்கீகரிக்கப்படுவதைக் காணலாம்.

குழச்செயற்பாடு எல்லையற்ற சக்தி உருவாகக் காரணமாகின்றது. தனியாள் என்ற முறையில் நிறைவேற்ற முடியாத நோக்கங்களை குழு அடிப்படையில் நிறைவேற்றுதல் இலகுவாக இருக்கும். பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோள்கள் குழு அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. குழுச்செயற்பாடுகள் சக்தி வாய்ந்த ஆக்கத்திறனுடன் கூடியவையாக விளங்குவதால் அவை நிறைவேறுதற்கான வாய்ப்புகளும் அதிகம்.தனியாள் ஒருவர் குறிப்பிட்ட குழுவொன்றில் உறுப்பினராக இருக்கும்பொழுது உளரீதியான பாதுகாப்பும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது. மற்றும் சவால்களை எதிர்கொள்வதும் இலகுவாக இருக்கும். ஒவ்வோரு சமூகக் குழுவும் வலுவுள்ளதாக இருக்கும் பொழுது, அக்குழுக்களின் பண்புகள், அவற்றிடையிலான தொடர்புகளிலும் விசேட பண்புகள் காணப்படும் பொழுது, அவை பற்றிய பிம்பங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன.

ஒரு சமூகம் எப்படி இயங்குதல் வேண்டும் அதற்கான விதிமுறைகள் என்ன என்பதனை ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கும் குழுக்களே அடிப்படையாக உள்ளன.

பாடசாலையும் சமூகக்குழுக்களும்

பாடசாலையும் ஒரு வகையில் ஒரு சமூகம் என ஐவர் மொறிஸ் எடுத்துக்கூறியுள்ளார் . பாடசாலையில் முறைசார் நிர்வாக முறை சிறந்து விளங்குவதற்குப் பின்வரும் விடயங்கள் இன்றியமையாதனவென ஒலிவ் பாங் எடுத்துக் கூறியுள்ளார், அவையாவன:பாடசாலையின் பருமன் , வகுப்பறையின் பருமன் , வகுப்பறைக் கற்பித்தல்- கற்றல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள முறை , பாடசாலையின் பௌதீக மற்றும் நிதிசார் வளங்கள் , பாடசாலையில் உள்ள முறையில் குழுக்கள்

பாடசாலையிலேயே உருவாகின்ற குழுக்கள் முறைசார் குழுக்களாக அல்லது முறையில் குழுக்களாக இருக்கலாம். இத்தகைய குழுக்கள் பாடசாலையில் செயற்படும் முறையில் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கச் செல்வாக்கு செலுத்துகின்றன. பாடசாலையில் மாணவர்களும் குழுக்களாகச் செயற்படவே விரும்புவதை நாம் காண்கிறோம். வகுப்பறைச் செயற்பாடுகளில் குழு ரீதியாக இயங்கும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் எவ்வாறு உள்ளனர் என்பது பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமானது

முறைசார் குழுவும் முறையில் குழுவும்

கல்வி நிறுவனங்களிலே அவற்றின் விசேட இலக்குகள் சிலவற்றை அடையும் நோக்கில் திட்டமிட்ட செயற்பாடுகளுடன் கூடியவாறு உருவாகும் குழுக்களை முறைசார் குழுக்கள் எனலாம். ஊழியல் சங்கங்கள், தொழிற்சங்கம், பாடசாலை ஒழுங்கமைப்பு முதலியன முறைசார் குழுவுக்குச் சிறந்த உதாரணமாகும். ஓர் இலக்கினை அடைவதற்கு இயைபுப்படுத்தப்பட்ட திறன்களையும் அவற்றினைக் கொண்டுள்ள ஆட்களும் தேவைப்படும் பொழுது முறைசார் குழுக்கள் உருவாகின்றன. தனியார் உருவர் இத்தகைய திறன்கள் எல்லாவற்றினையும் கொண்டிருப்பார் எனக் கூற முடியாது. உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் இடம்பெறும் குறிப்பிட்ட உற்பத்தி, பாடசாலைகளில் சில நிருவாகப்பணிகள், விளையாட்டுப்போட்டி, கலைவிழா போன்றவற்றைக் குறிப்பிடலாம். திட்டமிடல், ஒழுங்கமைப்பு, தேவையான மனித மற்றும் பொருள்சார் சாதனங்களைத் திரட்டுதல், தொடர்பாடல் என்பன மேற்கூறிய விடயங்களுக்கு அவசியமானவை, நிறுவனங்களில் ஆட்கள் மாறலாம். ஆனால் நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து நிற்கின்றன. இவ்விடத்தில் முறைசார் குழுக்கள் அமைக்கப்படுவதும் அவற்றின் செயற்பாடுகளை ஒழுங்குப்படுத்துவதும் நிறுவனத்தின் விளைதிறன் மிக்க செயற்பாட்டுக்கு அவசியமானது. முறைசார் அமைப்பு அல்லது நிறுவனம் சிறப்புறச் செயலாற்றுவதற்கு அதனுடைய சமூக அமைப்பு, குழுவில் பங்கேற்பவர்கள், இலக்குகள், தொழில் நுட்பம் ஆகிய மூலகங்கள் அவசியமானவை.பணிக்குழுவாட்சியில் முறைசார் மற்றும் முறையில் குழுக்கள் செயற்படும்விதம் பற்றி மக்ஸ்வெபர் விபரித்துள்ளார் 

முறைசார் அமைப்பில் உத்தியோகபூர்வமான சட்டதிட்டங்கள், வேலை பற்றிய விபரங்கள், ஒழுங்கமைப்பு அட்டவணை, தொழில் பற்றிய படிமுறையமைப்பு முதலியன காணப்படும். இதற்கு முரணான வகையில், முறைசார் அமைப்பில் உத்தியோகபூர்வமற்ற நியமங்கள், அலுவலகச் சட்டத்திட்டங்களுக்கு உட்படாத வகையில் கூட்டுச் சேரும் நிலைமைகள், தமது பதவிகளை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைமைகள், மகிழ்ச்சி தராத நிகழ்ச்சிகளை தவிர்த்தல் என்பன இடம்பெறும். முறைசார் அமைப்பிலே தனிப்பட்ட முறையிலான உடன்பாடுகள், உறவுகள் நிகழும். இன்னொரு முறையில் கூறுவதானால் முறையில் அமைப்பினை “திரந்த இரகசியம்” எனக் கூறலாம். நிறுவனத்தின் வினையாற்றலை மேம்படுத்துவதற்கும் வசதி செய்வதற்கும் முறைசார் அமைப்புகள் உதவுகின்றன. சமூகத்தில் மூன்று வகையான முறைசார் குழுக்களைக் காணலாம். அவையாவன: 1.தன்னார்வ நிறுவனங்கள் 2.முழுமையான நிறுவனங்கள் 3.பணிக்குழுவாட்சி, என்பனவாகும்.மக்கள் தனது சுய விருப்பின் அடிப்படையில் ஒன்று சேர்வதைத் தன்னார்வ நிறுவனம் எனலாம்.

Leave a Comment