சமூக அடுக்கமைவும் கல்வியும்

     அனைவருக்கும் கல்வி என்பது மனித இனம் முழுவதற்கும் கல்வி வழங்குதல் என்பதைக் குறிக்கின்றது.இந்த அறிவியல் யுகத்தில் நாமும் இணைந்துக் கொள்ள மேலும் அதன் சவால்களுக்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் கல்வி அறிவு பெற்றிருப்பது அவசியமாகும் .கல்வி,சமூகம் என்ற இரு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட எண்ணக்கருக்களாகும்.கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதால் கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகின்றது.பல்வேறு கல்விசார் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை பெற்று தருவது கல்வியாகும்.

சமூகமொன்றின் அபிவிருத்திக்கு கல்வி முக்கியமானது போல கல்வி அபிவிருத்திக்கு சமூகம் பொறுப்பாக உள்ளது. தனியாட்களின் ஆளுமை விருத்திக்கு அடிப்படையாக அமைவது போன்று சமூகநலன்களை பேணுவதற்கும் கல்வி இன்றி அமையாதது. மறுபுறத்தில் சமூகத்தின் இயல்புகளும்  சமூகத்தின் தராதாரங்களும் பொறுப்பான விடயங்களும் கல்வியின் மீது செல்வாக்கு சமூக கட்டுபாடுகளுக்கு அல்லது உற்பத்தி வழிமுறைகளுக்கு பொறுப்பாகவுள்ள சமூக வகுப்பானது கல்வி முறைமையிலும் கல்வி நிருவாக முறைமையாலும் முக்கிய வகிபாகத்தினை ஏற்கின்றது.

பல்வேறு சமூக வகுப்புகளும் தமக்கேயுரிய ஆர்வத்துடன் செயற்பட முற்படும் பொழுது அத்தகைய ஆர்வமானது வழங்கப்பட வேண்டிய கல்வி முறைமையிலும் செல்வாக்கு செலுத்துகிறது.இவ்வாறான நிலைமை முதலாளித்துவ சமூகங்களில் மட்டுமன்றி சோசலிச சமூகங்களிலும் உள்ளது. உயர்வகுப்பினை  சேர்ந்தவர்களுக்கு தரத்தில் உயர்வான கல்வி மற்றவர்களுக்கு இழிந்த கல்வி என்ற பாகுபாட்டின் அடிப்படையிலாகும் என்றொரு வாதம்காணப்படுகின்றது.இத்தகைய வாக்கு தவறானது.

 உளவிருத்தி,ஆற்றல்விருத்தி என்பன ஒருவருக்கு வழங்கும் வாய்ப்பினை பொறுத்தவை.பின்தங்கிய சமூக வகுப்பினருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்படுமானால் அவர்களுடைய ஆற்றல்களும் விருத்தியடையும்.சிறந்த பிரஜைகளாக உருவாகுவார்.சமூக வகுப்புகளுக்கு இடையில் நிலவும் இடைவெளிகளை குறைப்பதற்கும் கல்வி ஒரு முக்கியமான வழிமுறையாக அமையும்.சமூக வகுப்பினை உள்ளவாறு பேணுவதற்கான கருவியாகவும் கல்வி தொழிற்படுகின்றது என்றும் அவ்வாறான நிலையிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ற வகையில் கல்வி வழங்கப்பட வேண்டுமென்பது கார்ள்மாக்சின் கருத்தாகும். 

சமூக வகுப்பும் கல்வி வாய்ப்புகளும் எவ்வாறு காணப்படுகின்றது என்பதை நோக்குவோமானால்,கல்வி வாய்ப்புகளை தீர்மானிப்பதில் சமூக வகுப்பானது முக்கிய காரணியாக தொழிற்படுகின்றது. பெற்றோருடைய கல்விநிலை ,தொழில் வருமானம் போன்றவை பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியுடன் நெருங்கிய தொடர்புடையவை. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சிறந்த சமூக பிண்ணனியுள்ளவருக்கு கல்வி வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன. 

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் அநேகமானவை மத்தியதர கலாச்சாரத்தை உடையவை.சமூகவகுப்பின் அடிப்படையில் இயங்கி வருகின்ற பாடசாலைகள் நாம் இன்னும் காணலாம்.இலங்கையில் கல்வி்க்கும் சமூக பொருளாதார பிண்ணனிக்கும் இடையிலான பற்றி JAYAWERAA, RUPASINGA என்போர் கருத்து தெரிவித்துள்ளார்.

சமூக வகுப்பு மாணவருடைய கல்வி செயற்பாட்டில் தாக்கம் செலுத்தும் விதம் பற்றி ஆராய்வோமானால் முன்பள்ளி தொடர்பாக ஆய்வாளர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் முக்கியமானவை.பிள்ளைப்பருவத்தில் உருவாக்கப்படும் நடத்தைக் கோலங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.குறிப்பாக ஆரம்ப சமூகமயமாக்கலின் போது பிள்ளையின் ஆளுமை பெருமளவு வடிவமைக்கப்படுகின்றது.இவ்வாறான நடைமுறைகளில் சமூக வகுப்பின் செல்வாக்கு அதன்வழி ஏற்படும் வேறுபாடுகள் முக்கியமானவை.

சமூக வகுப்புகளுக்கு இடையிலான உப கலாச்சார வேறுபாடுகள் பற்றி ஆராயந்த பஸில பெனஸ்ரின் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.பேச்சு கோலமானது 2வகைப்படும்.

விரிவான குறியீடு

கட்டுப்படுத்தப்பட்ட குறியீடு

தொழிலாளர் வகுப்பினர் பொதுவாக கட்டுப்படுத்திய குறியீடும் மத்திய வகுப்பினர் இருவகையான குறியீடுகளையும் பயன்படுத்தி தொடர்பாடலில் ஈடுபடுவார்.முறைசார் கல்வி பிரயோகம் கூடியது.பாடசாலைகள் உலகளாவிய விடயங்களை பரிமாற வேண்டும். மாணவர் இடத்தில் இவற்றை விருத்தி செய்ய் பொருத்தமான மொழிப் பிரயோகம் அவசியமா. தொழிலாளர் வகுப்பினை சேர்ந்து பிள்ளை கட்டுப்படுத்தியஒழுக்கத்திற்கு பழக்கப்பட்டவர்கள் ஆகையால் கல்வி முறைகளினால் எதிர்பார்க்கப்படுகின்ற சில திறன்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு.

தொழிலாளர் வகுப்பினரின் கலாச்சாரத்தின் அம்சங்களை பாதிப்பதனால் பிள்ளைகளின் கல்வி அடைவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.வறுமைக்குட்பட்ட பிள்ளைகள் உயர்கல்வி படைப்புகளுக்கு தேவையான முக்கியமான திறன்கள் மனப்பாங்குகள் மற்றும் பெறுமானங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு குறைவு.பெற்றோருடைய கல்விநிலை வருமானம் என்பன மாணவரின் பாடசாலை கல்வியால் நீடித்திருக்கும் காலம் என்பவற்றை சமூகவகுப்பை தீர்மானிக்கின்றது.அநேகமான ஆசிரியர்கள் மத்திய வகுப்பை தீர்மானிக்கின்றது.  அனேகமான ஆசிரியர்கள் மத்திய வகுப்பு சேர்ந்தவர்களாக இருப்பினும்  சமூக வகுப்பின் அடிப்படையில் இயங்கி வரும் பாடசாலைகள் கிராம புறங்களில் காணலாம். 

உயர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கற்பதற்கான பாடசாலை இனம் ,மொழி,பால்நிலை அடிப்படையில் தனிதனியாக காணப்படுகின்றது.எனினும் கிராமபுற மாணவர்களுக்கு உயர்தரம் பாடசாலை பல கலவன்பாடசாலைகளி்ல் தொழிற்படுகின்றது.உயர் சமூக வகுப்பு தொடர்புடைய பாடசாலைகளில் மாணவருக்குl வழங்கப்படும் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் உயர் மட்டத்தில் காணப்படும்.இலங்கையில் நகர்மற்றும் கிராம புறங்களில் பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வியும் தராதர வேறுபாடு சமூக வகுப்பு செல்வாக்கு செலுத்துகின்றது. உயர்வகுப்பு மாணவர்களுடன் ஒப்பிடும் போது கிராமபுற அல்லது பின்தங்கிய பிரதேசங்களில் மாணவருக்கு வழங்கப்படும் கல்வியின் தராதரம் ஒப்பிட்டளவில் குறைவாகும்.

Leave a Comment