தாராண்மை வாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

தாராண்மை வாதமானது இக்கால பகுதியில் தான் தோன்றியது என கூற முடியாது. தாராண்மைவாதம் பற்றிய சிந்தனைகளுக்கான ஆதாரங்களை ஏனைய அரசியல் ஆதாரங்களைப் போன்று கிரேக்க காலத்திலிருந்து காணமுடிகின்றது.

கிரேக்க காலப்பகுதியில் சுதந்திரம் என்ற அம்சத்திலிருந்து இது அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்த சுதந்திரமானது தற்காலத்தில் வலியுறுத்தப்படும் சுதந்திரம் பற்றிய முழுமையான அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. கிரேக்க அரசில் பங்குபற்றுவதே இக்காலப் பகுதியில் சுதந்திரமாக கருதப்படுகின்றது. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எங்களுக்கான பொதுவானதொரு கொள்கையினை உருவாக்கி அதன் அடிப்படையில் செயல்படுவோம்; வேறு எந்த அதிகாரத்திற்கும் கட்டுப்பட வேண்டியதில்லை என்ற மக்களின் அரசியல் சுதந்திரம்

பற்றிய கருத்தின் அடிப்படையிலேயே தரான்மை வாதம் கிரேக்க கால பழமை கொண்டதாக கருதப்படுகின்றது .

இதன் பின்னர் மத்திய காலப்பகுதியில் (15,16 ஆம் நூற்றாண்டுகளில்) தோன்றிய மத சீர்திரு சீர்திருத்த கருத்துக்களின் ஊடாக தராண்மைவாத சிந்தனைகள் இனம் காணப்பட்டதுடன், அக்கால பகுதியில் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட சகலத் துறைகளிலும் கத்தோலிக்க திருச்சபையும் மதகுருமார்களும் ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் ஏனைய மக்களை அடிமைகளாக நடத்தியதோடு சொத்துக்களை சேர்ப்பதும் வட்டிக்கு பணம் வழங்குவதும் பாவம் என கூறினர். இத்தகைய கருத்துக்களில் இருந்து மக்களை பாதுகாக்க மத சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது மாட்டின் லூதர் மற்றும் கல்வின் ஆகியோர் தோன்றி மத சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்தனர். இவர்களின் கருத்துப்படி மக்கள் சொத்துக்களை சேர்க்கவும் வட்டிக்கு பணம் கொடுக்கவும் சுதந்திரம் உள்ளது என வலியுறுத்தப்பட்டது. இக்கருத்து தாரான்மை வாதம் வலியுறுத்தும் தனிநபர்கள் தமக்கு விரும்பியவாறு சொத்துக்கள் உழைப்பதற்கும் சேகரிப்பதற்கும் முழுமையான சுதந்திரம் உண்டு. அதனை தேவையற்ற விதத்தில் ஆனது கட்டுப்படுத்தலாகாது என்ற சிந்தனையோடு தொடர்புபட்டதாக காணப்பட்டது.

17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய நிலமானிய சமூகம்இ பொருளாதார அரசியல் முறைமை மற்றும் சர்வாதிகார அரசாட்சி முறைமையின்பின்னணியில் அவர்களுக்கு எதிராக தோற்றம் பெற்ற கருத்துக்களின் தொகுதியாக தாராண்மை வாதத்தினை அறிமுகப்படுத்தலாம்.

17 ஆம் நூற்றாண்டாகும் போது அரசன் தான்தோன்றித்தனமான ஆட்சி முறைமைக்கு எதிராக பல சமூக வகுப்புகளின் எழுச்சி தோற்றம் பெற்றது.  முதலாளித்துவத்தின் ஆரம்பகட்டமான கட்டமான இக்கால பகுதிகள் உருவான புதிய வர்த்தக மற்றும் மத்திய தர வகுப்பினர் அரசின் தான்தோன்றித்தனமான ஆட்சி முறையினையும் தான்தோன்றித்தனமான வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் வரி சேகரிப்பு முறைமையினையும் கொண்ட பொருளாதார கட்டுப்பாடுகளை பெற்று கொள்ளவில்லை. இவ்வாறான பின்னணியில் அரசாட்சியின் தான்தோன்றித்தனமான அரசியல் மற்றும் பொருளாதார தலையீடுகளில் இருந்து இவர்களுக்கு சுதந்திரம் தேவைப்பட்டது. பின்னர் தாராண்மை வாதத்தின் அடிப்படை கோட்பாடாக வளர்ச்சி அடைந்தது.

தாராண்மை  வாதமானது தேசிய அரசுகளின் எழுச்சியுடன் தோற்றம் பெற்றது என்ற கருத்து பலமாக வலியுறுத்தப்படுகின்றது. தேசிய அரசு என்பது மக்களால் உருவாக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை பாதுகாக்க தோன்றிய அமைப்பு என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதன்படி 1688 ஆம் ஆண்டு உருவான பிரதானிய தேசிய அரசும் அதனை தொடர்ந்து உருவான பிரான்ஸ்இ இத்தாலிஇ போர்த்துக்கல்இ அமெரிக்கா போன்ற தேசிய சுதந்திர அரசுகளின் எழுச்சியோடு தாராண்மை வாத சிந்தனைகளும் பரவலடைந்தது என்றும் கூறப்படுகின்றது.

ஆயினும் தாராண்மை வாதம் பிரபல்யமாக தொடங்கியது பதினெட்டாம் நூற்றாண்டுகளை தொடர்ந்து ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியையும் அதனால் உருவாகிய சமூக மாற்றங்களையும் அடுத்து ஆகும். கைத்தொழில் புரட்சியை தொடர்ந்து வளர்ச்சி அடைந்த வாணிபம் வளர்ச்சி பெற்றது. அதுவரை காலமும் இருந்த விவசாயம் (நிலமானிய முறைமை) வீழ்ச்சி அடைய கைத்தொழில் சமூக மாற்றம் கண்டது. இதனால் தொழிற்சாலைகளை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ வர்க்கம் அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர் சமூகத்தையும் கொண்ட வகையில் சமூக மாற்றமடைந்தது. இவர்களும் முதலாளிகள் தங்கள் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புஇ மூலதனம் என்பவற்றைப் பெறவும் ப நாடுக்கான் பயணங்களில் ஈடுபடுவதுடன் அதற்கு தடையாக இருந்த முன்னை அரசியல் முறைமையில் மாற்றத்தை வேண்டி நின்றனர். இவர்கள் பண வளம் படைத்தவர்களாகவும் அதனை பயன்படுத்தி அரசியலில் செல்வாக்கு செலுத்தவும் முற்பட்டனர். மேலும் தங்கள் சொத்துக்களை பெருக்கிக் கொள்ளவும் அதனை பாதுகாப்பதற்காகவும் அரசியலில் பங்கு பெற்றவும் முயன்றனர். அதாவது இவர்கள் தாராளமாக சொத்துக்களை சேர்க்கவும் அதற்கான தடைகளை அகற்றி அதற்கேற்ற வகையில் அரசியல் முறைமைகளை மாற்றங்களை ஏற்படுத்த முயன்ற போது தோன்றி வளர்ந்த சிந்தனைகளை தராண்மைவாத சிந்தனை எனலாம்.

இதனாலேயே காராண்மை வாதத்தின் தோற்றம் பற்றி “ஹரல்ட் லஸ்கி” பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.  “17ஆம் நூற்றாண்டில் இடம் பெற்ற கைத்தொழில் புரட்சியின் விளைவாகவே தாராண்மை வாதம் பிரபல்யம்அடைந்தது”

Andrew Vincent என்பவரின் கருத்துப்படி “தாராண்மை வாதம் ஐரோப்பிய அரசியலமைப்பு வாதிகளின் மரபுகளில் இருந்து தோன்றியது” அதனை அவர் கூறும் போது “19ஆம் நூற்றாண்டில் இருந்து அரசியல் அமைப்பு வாதமும் தாராண்மை வாதமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத எண்ணக்கருக்கல் கொண்டவையாக காணப்பட்டது”  ஆங்கில உள்நாட்டு போரின் விளைவாகவும் பிரான்சில் இடம் பெற்ற மத யுத்தங்களின் விளைவாகவும் தனிமனித உரிமை சுதந்திரம்இ ஒப்பந்தம்இ அரசாங்க கட்டுப்பாடற்ற தனிநபர் முயற்சி போன்ற அம்சங்கள் வளர்ச்சி அடைந்தன.

இவை 1776 இல் அமெரிக்க புரட்சியிலும் 1789இல் பிரான்சிய புரட்சியிலும் பெருமளவு பிரதிபலித்ததோடு அமெரிக்கஇ பிரான்ஸ் அரசியலமைப்பு வாதிகளினால் பெருமளவு விருத்தி செய்யப்பட்டன என்கின்றார். இதன் படி தாராண்மை வாத எண்ணக்கருவின் அடிப்படை கருத்து அரசின் அல்லது அரசாங்கத்தின் தலையீட்டிலிருந்தும் அதன் கட்டுப்பாட்டில் இருந்தும் பெறுகின்ற சுதந்திரமாகும் (Freedom from government or government interference and control) இந்த கருத்தில் தத்துவார்த்தம் மற்றும் அரசியல் சார்ந்த அடிப்படையும் பிணைந்து காணப்படுகின்றது.

Leave a Comment