தாராண்மை வாதம்

தாராண்மை வாதம் ஆங்கிலத்தில் Liberalism என குறிப்பிடப்படுகின்றது. இது 1811 இல் ஸ்பானியாவில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட Liberty என்ற சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இதன் பொருள் சுதந்திரம் எனப்படுகின்றது. இதனால் தான் தாராண்மை வாதமும் தனிநபர் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஒரு அரசியல் சிந்தனையாக கருதப்படுகின்றது. 
தாராண்மை வாதமானது தனிமனித சுதந்திரம், அரசியல் சுதந்திரம் என்பவற்றை வலியுறுத்துகின்றது. தான்தோன்றித்தனமான அதிகாரத்தை எதிர்ப்பது இதன் உட்பொருளாகும். தனிமனிதன் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது இதன் தாற்பரியம் ஆகும்.
இதனை பழமைப் பேன் வாதம், சோசலிசம் என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட அரசியல் நிலை என்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கும் ஆனால் தீவிரவாதத்தை எதிர்ப்பது என்றும் கூறப்படுகின்றது.
மார்க்சிச வாதிகளின் பார்வையில் தாரான்மை வாதம் ஆனது வேறு விதமாக பொருள் கொள்ளப்படுகிறது. அவர்களின் கருத்துப்படி தராண்மை வாதம் என்பது “தலையிடா கொள்கையை இலக்காகக் கொண்ட முதலாளித்துவ அரசியல் கோட்பாடு” ஆகும்.
தாரான்மை வாதம் சிக்கல் நிறைந்த ஒன்றாக காணப்படுவதால் பல அறிஞர்களும் தங்களின் புரிதலுக்கும் தெளிவுக்கும் ஏற்ற வகையில் இதற்கான வரையறைகளை கொடுத்துள்ளனர். இவர்களில் சிலரின் கருத்துக்களாவன,
” சமூகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் சுதந்திரத்தை பெற வழி வகுப்பது தாராண்மை வாதம்” (Dearek Keater) (A. P.Graims)

“சமூகத்தில் சுதந்திரத்தை ஒழுங்கமைக்கின்ற ஒரு முறைமை” ஆகும். (Dearek Keater)

“லிபரிசம் என்பது சுதந்திரத்தைக் குறிக்கின்றது. மிகவும் ஆபத்தானது என கருதக்கூடிய கொள்கைகளை கூட வெளியிடுவதற்கான சுதந்திரத்தை வழங்குவது லிபரிசம்” ஆகும். (Lasky)

இவ்வாறாக தாராண்மை வாதம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்ற போதிலும் எல்லாவற்றிலும் “சுதந்திரம்” என்ற பொதுவான ஒரு தளம் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் தாராண்மை வாதம் என்பதனை “சமூகத்தினரும் தனிமனிதனதும் வாழ்க்கை சம்பந்தமாகவும் அரசியல் முறையின் கொள்கைகள் வழிமுறைகள் போன்றன சம்மந்தமாகவும் பயன்படுத்தப்படுகிற சுதந்திரம் பற்றிய கருத்துக்களின் குவியலே தாராண்மை வாதம்” என்ற முடிவுக்கு வரலாம்.

Leave a Comment