துறைமுக நகரம்

 துறைமுக நகரம்  PORT CITY

15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாரிய முதலீட்டுக்கான 233 ஹெக்டேயர் பரப்பளவினைக் கொண்ட மேற்கூறிய திட்டத்தின் மூலம் இலங்கையிலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. அது மட்டுமின்றி இலங்கையினது உல்லாச பயணத் துறையின் வளர்ச்சிக்கு இது பாரிய பங்களிப்பை செய்யும். மேலும் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடு களை இலங்கையில் மேற்கொள்ளவும் ஏதுவாக அமைகின்றது. இத் திட்டமானது 2022 ஆம் ஆண்டு பூர்த்தியாகும் போது இலங்கை பொருளாதாரத்தின் பிற்பட்ட காலப் பகுதியில் ஒரு அபிவிருத்தி வளர்ச்சியினை காணக் கூடியதாக இருக்கும். நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் பூங்காக்கள்இ நவீன பொழுது போக்கு அம்சங்கள்இ அதிசொகுசு விடுதிகள், மைதானம், காரியாலயங்கள், தொடர்மாடி வீடுகள் என்ப வற்றை கொண்டமைந்ததாக இது இருக்கும். இந்தத் துறைமுக நகர அபிவிருத்திக்காக ஈடுபடுத்தப்படவிருக்கும் மொத்த ஊழியர்களில் 70% மான ஊழியர்கள் இலங்கையிலிருந்தே பெற்றுக் கொள்ளப்பட போகின் றார்கள். இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் கிடைக்க சந்தர்ப்பமாக இது அமைகின்றது.

இலங்கை – சீன மத்திய வங்கி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை ரூபாவும் சீன யுவானும் வர்த்தக நடவடிக்கைகளின் போதும் மற்றும் இருதரப்பு உடன்பாட்டின் அடிப் படையிலும் ஏனைய தேவைகளுக்கும் பரிமாறிக்கொள்ள முடியும். இதன்மூலம் வேகமாக வளர்ச்சி யடைந்து வருகின்ற வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பாக இவ் ஒப்பந்தம் அமையும். சீன-இலங்கை மத்திய வங்கி ஒப்பந்தமானது 3 ஆண்டுகளுக்கு ஆகக் கூடியளவு 225 பில்லியன் ரூபாய் இலங்கை நாணயங்களையும் 10 பில்லியன் சீன யுவான் நாணயங்களையும் கைமாறிக் கொள்ள உதவுகின்றது.

இவ்வாறான இலங்கை – சீன ஒப்பந்தம் இலங்கையினை பொறுத்த வரையில் பல்வேறு நன்மைகளையும் பொருளாதார முன்னேற்றத்தினையும் தரப்போகின்ற போதும் பாதகமான பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிய விடயங்களும் காணப்படவே செய்கின்றன. இவற்றுள் பலராலும் முக்கியமாக பேசப்படுவது இலங்கையின் கடன்சுமை இதனால் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதாகும். அத்துடன் தென்னாசியாவில் தனது ஆதிக்கத்தினை நிலை பெற செய்வதற்கு இலங்கையினை ஒரு தளமாக கொண்டு சீனா இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத் துவத்தினை பெற்றுக்கொண்ட சீனா தனது பொருளாதார வளத்தினை மேலும் பலப்படுத்தி கொள்ளவே முயன்றும் வருகின்றது. இதற்காக பல நாடுகளை தனது அதிகாரத்தினுள் வைத்துக்கொள்ள மேற் கொள்ளும் நடவடிக்கைகளில் இலங்கை யும் சிக்கி விடுமா என்பது பல அறிஞர்களின் கருத்தாகவும் உள்ளது. இவ்வாறு இலங்கையுடன் வைத்துக்கொள்ளும் உறவு மேற்கத்தேய நாடுகளின் ஆதரவினை இலங்கை இழக்க நேரிடும் என்ற கருத்துக்களும் கூறப்படுகின்றன.

எவ்வாறு இருப்பினும் சீனாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கும் உதவிகள் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு எதிர்கால இலக்குஇ எதிர்கால விளைவு என்பவற்றினை கருத்தில் கொண்டு சிறப்பான முறையில் முகாமைப்படுத்துவதன் மூலமே குறித்த இலக்கை நாம் எட்ட முடியும். உலக நாடுகள் ஒன்றில் ஒன்று தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் மாறும் உலகத்திற்கு தேவையான ஒன்றாக இருப்பதனால் சீன- இலங்கை உறவினால் எமது நாடு ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாறும் என்றால் (அபிவிருத்தியில்) அது இலங்கை வாழ் மக்களது சிறப் பான எதிர்காலமாகவே அமையும்.

Leave a Comment