சமூகத்தில் படிப்படியான குழுக்கள் ஒரு நோக்கத்திற்காக அல்லது ஒன்றிணைந்த பணியாளர்களுடன் ஒரு இலக்கை அடைவதற்காக ஒற்றுமையாக செயற்படும் குழுவே சமூகக் குழு ஆகின்றது. எனவேதான் ஆரம்ப குழுக்கள், துணை குழுக்கள், முறைசார் குழுக்கள், முறையில் குழுக்கள், அகக் குழுக்கள், புறக்குழுக்கள், சகபாடிக்குழுக்கள் என பல்வேறு குழுக்கள் தோற்றம் பெற்று அவை பாடசாலையுடன் பல்வேறுபட்ட வழிகளில் தொடர்பு படுகின்றது.
சமூக குழு என்பது ஒரு தொகுதி தனியாட்களின் பொதுவான அடையாளத்தை இனங்கண்டு உணர்ந்து ஓர் அமைப்புக்குள் உட்பட்ட வழியில் நிரந்தரமான இடைத்தாக்கத்தில் ஈடுபட்டு தமது இலக்குகளையும் நியமங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு குழுவினை சமூகக் குழு எனலாம். குறித்த கால வேளையில் சில உடன்பாடுகளினடிப்படையில் இடைவினைத் தாக்கங்களில் ஈடுபடும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொண்ட சமூக குழுக்கள் சமூக முன்னேற்றத்திற்கு இட்டுச் சென்று சமூகமானது அழியாமல் பாதுகாக்கும் கருவியாக உள்ளது.
பாடசாலை என்பது ஒரு மாணவன் தன்னுடைய அறிவுவிருத்தி, ஆளுமைவிருத்தி என்பவற்றை விருத்தி செய்வதோடு எதிர்கால உலகின் கல்வி, சமூக பொருளாதார, அரசியல் போன்ற விடயங்களுக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் மாணவர்களை எதிர்கால உலகிற்கு தயார்படுத்தும் ஒரு சமூக நிறுவனம் பாடசாலை ஆகும். பிள்ளைகளை வளப்படுத்தி அவர்களை நற் பிரஜைகளாக சமூகத்தில் புகுத்த வேண்டிய பொறுப்பு பாடசாலைக்கு உண்டு. பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு நெருக்கமானதாக காணப்பட வேண்டும். இவ்வாறு காணப்படுகின்ற போது பாடசாலை வளர்ச்சியில் கல்வி விருத்தி ஏற்பட வழி ஏற்படுகின்றது. பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தினுடைய பிரதான குறிக்கோளாக காணப்படுவதே சமூகத்துடனான நெருங்கிய தொடர்பாகவும் கருதப்படுகிறது.
யுனெஸ்கோ நிறுவனத்தால் 1970 இல் நியமிக்கப்பட்ட சர்வதேச ஆணைக் குழுவின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட வாழ்க்கைக்கான கல்வி எனும் அறிக்கையில் பாடசாலைகளில் இடம்பெறும் முன்னேற்றமானது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான வகிபங்கினை கொண்ட செயல்முறை தொடர்புகள் உடனேயே நிகழ்வதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலைகளும் எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்ற மாணவர் ஆசிரியர் மற்றும் பெற்றோர் குழுக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றனர். பாடசாலையில் முறைசார் நிர்வாக முறை சிறந்து விளங்குவதற்கு பின்வரும் விடயங்கள் இன்றியமையாதது.
1.பாடசாலையின் பருமன்
2.வகுப்பறையின் பருமன்
3.வகுப்பறைக் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் ஒழுங்குமுறை
4.பாடசாலையின் பௌதிக மற்றும் நிதிசார் வழங்குதல் என்பனவாகும்.
பாடசாலையில் முறைமையில் குழுக்கள் தோன்றுவதற்கான காரணிகள்
முறைமையான அமைப்பின் இறுக்கமான தன்மைகள் காரணமாக பரஸ்பர உதவி தேவைப்படல் தனி நபர்கள் நெருக்கமாக வாழ்தலும் நிதமும் சந்தித்தலும், விசேட செயற்பாடுகளில் ஈடுபடல், இன, மத, கலாச்சார இயல்புகள் காரணமாக சிறப்பான ஆற்றல் வெளிப்படல்.
முறைமையற்ற ஒழுங்கமைப்பு தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் இவ்வாறு தோன்றுகின்ற முறைசாரா குழுக்களின் பண்புகள்.
அங்கத்தவர்கள் தாமாகவே ஒன்று சேர்வார்கள், குறித்த சட்டதிட்டங்கள் ஒழுங்கு அமைப்புக்கு ஏற்ப அமைவதில்லை, அங்கத்துவ உறுதிப்பாடு கிடையாது, பெரும்பாலும் கலந்துரையாடலில் முடிவெடுக்கப்படும் ,உறுப்பினர்களிடையே உழைப்பு உயர்வு, சுதந்திரம் காணப்படும் இவற்றின் ஒத்துழைப்புத் தன்மை உயர்வானது. பரஸ்பர இணக்கம், மதித்தல் ,சுதந்திரம் என்பன காணப்படும்.
பாடசாலையில் உள்ள முறைசாரா ஒழுங்கமைப்புக்கள்
ஆசிரியர் குழுக்கள், மாணவர் குழுக்கள், ஆசிரியர் மாணவர் குழுக்கள், அதிபர்-ஆசிரியர் சேவையாளர்கள் குழு, சேவை ஆட்களின் குழு என்பனவாகும்
சமூகத்தில் காணப்படும் பல்வேறு நிறுவனங்களும் பாடசாலையும் ஒன்றாகும் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு நெருக்கமானதாக காணப்பட வேண்டும் இவ்வாறு காணப்படுகின்ற போது பாடசாலை வளர்ச்சியில் கல்வி விருத்தி ஏற்பட வழி ஏற்படுகின்றது. பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் உடைய பிரதான குறிக்கோளாக காணப்படுவதே சமூகத்துடனான நெருங்கிய தொடர்பாகவும் உள்ளது.
இன்றைய சூழலில் இத்தொடர்பானது பெரும்பாலும் இல்லை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை காணமுடிகின்றது இதற்கு காரணம் பாடசாலையானது சமூகத்தினால் கவனிக்கப்படாமையாகும். பாடசாலையில் பெற்றோர்களையும் நலன் விரும்பிகளையும் இணைக்கும் வகையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக இன்று பாடசாலைகள் தோறும் அபிவிருத்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு அடிக்கடி குழுக்கள் ஒன்றுகூடி தீர்மானங்களை எடுக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றன.
பாடசாலையானது சமுதாயத்திலிருந்து விலகாமலும் சமுதாயமானது பாடசாலையின் சகல செயற்பாட்டிற்கும் உறுதுணையாகவும் இருந்தும் பாடசாலை சமூக உறவை விளங்கிக்கொண்டு மேம்படுத்துவதன் மூலம் கற்பித்தல் செயற்பாடுகளை விருத்தி செய்யலாம். பாடசாலை மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் காலத்திற்கு காலம் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமையினை காணமுடிகின்றது.
1960 ஆண்டில் கொண்டுவரப்பட்ட வேலை அனுபவம் எனும் திட்டம்.
1972 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட தொழில் முன்னிலை பாடம்.
1984 இல் பாடசாலை மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை உருவாக்க.
1979 பெற்றோர் சாசனம்.
1976 ஆம் ஆண்டு நூறு பிள்ளைகளையும் ஒரு அல்லது இரு ஆசிரியர்களை கொண்ட சிறிய பாடசாலை அபிவிருத்தி திட்டம். போன்ற செயற்பாடுகளை கூறலாம் எனவே பாடசாலையுடன் பின்வரும் சமூகக் குழுக்கள் சட்டங்கள் அடிப்படையில் செல்வாக்குச் செலுத்துகின்றன.செயற்பாடுகள், உயர் கல்வி வியாபாரம், நூலகங்கள், சுக நலம் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், அரும்பொருட்காட்சியகம் மற்றும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் போன்றனவும். இணைப்பில் உள்ளடக்கப்படுகின்றனர். எனவேதான் பாடசாலையும், சமூக குழுக்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து செல்ல முடியாது. இரண்டுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒன்றுடன் ஒன்று தாக்கம் செலுத்துகின்றது. எனவே பாடசாலை சமூக குழுக்களும் ஒன்றிலிருந்து ஒன்று தங்கியிருப்பதன் காரணமாகவும் அவை ஒன்றுக்கொன்று அவசியமானது எனவும் கருதப்படுகிறது.
இவற்றின் அடிப்படையில் பாடசாலையும் சமூக குழுக்களும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளது. பாடசாலையின் வினைத்திறனான இயக்கத்திற்கு சமூக குழுமங்கள் பெரிதும் பங்களிப்பு செய்கின்றன. மேலும் பாடசாலை தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சமூக குழுமங்கள் அவசியமானவை என்பதை உறுதிபடுத்தலாம். பாடசாலையானது தனது சமுதாயத்திலிருந்து விலகாமலும், சமுதாயமானது பாடசாலையின் சகல செயற்பாடுகளுக்கும் உறுதுணையாகவும் இருந்தும் பாடசாலை சமூக உறவை விளங்கிக் கொண்டு மேம்படுத்துவதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை விருத்தி செய்யலாம்.