முரண்பாடும் முரண்பாடு தீர்த்தலும்

தனிமனித வாழ்வு என்று இல்லாமல் உலகின் அனைத்து உச்ச நிலையிலும் அவதானிக்க கூடிய விடயமே முரண்பாடு ஆகும். சாதாரண வாழ்வில் போட்டி, பொறாமை, என்ற நிலையிலிருந்து உலகப்போர் உள்நாட்டு போர், இரசாயனவியல் யுத்தம், அரசியல் யுத்தம் என்று பல நிலைகளில் பாரிய தாக்கத்தை செலுத்தும் விடையமேமுரண்பாடு ஆகும். நாள் உலகில் இன்றளவிலும் பல பிரச்சனைகள் நிகழ்வதற்கு இம்மு முரண்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மனிதன் எத்தனை போதிலும் சரியான முரண்பாட்டுக்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் அவை பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் சக்தியாக மாறி பல அழிவுகளை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கின்றது.

முரண்பாடானது புரிதல், சகிப்புத்தன்மை, பொறுமை போன்ற முக்கிய விழுமியங்களை சவாலுக்கு உட்படுத்தும் விடயமாக மாறி உள்ளது. எண்ணக்கருவானது  அரசறிவியலில் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் உள்வாங்கப்பட்ட ஒன்றாகும். Conflict இன்னும் ஆங்கில பதமானது முரண்பாட்டினை அர்த்தப்படுத்துகின்றது. இவ்  ஆங்கில பதமானது  confligere  எனும் இலத்தீன் மொழி சொல்லிலிருந்து தோட்டம் பெற்றது. அறிவியலில் முரண்பாடு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றமையினால் அரசரவியல் கற்கையில் காலத்துக்கு காலம் மாறி வருகின்ற விளக்கங்களின் போது மோதல், “மோதல் முகாமைத்துவம் பற்றி பற்றி விளக்கும் கற்கை துறையே அரசறிவியல்” என்ற கருத்து 1980 களில் வலுப்பெற்றது.

பேராசிரியர் கிறிஸ்டோபர் மிச்சல் என்பவர் “சர்வதேச முரண்பாடுகளின் கட்டமைப்பு” – (The structure of international conflict) எனும் கட்டுரையில் முரண்பாடு என்பது எதிர்வாதம், போட்டி, பிரச்சனை, பிணக்கு என்பவற்றில் இருந்து வேறுபட்டது என குறிப்பிடுகின்றார்.

முற்காலத்தில் அறிஞர்கள் முரண்பாடு பற்றி ஆய்வில் பெரிதும் ஈடுபட்டு வந்ததன் பயனாக இது அரச அறிவியல் பாடப் பரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இன்றளவிலும் முரண்பாடு, முரண்பாடு தீர்த்தல் என்ற பாடப்பரப்பு மாணவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் பாடப்பரப்பாக கருதப்படும்போது காலத்துக்கு காலம் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது.

முரண்பாடு பற்றி அறிஞர்கள் கூறிய வரைவிலக்கணங்கள்

“ஒத்து வராத இலக்கணங்களை கொண்டிருக்கின்ற அல்லது கொண்டிருப்பதாக நினைக்கின்ற இரண்டு அல்லது பல தரப்பினர்களுக்கு இடையே காணப்படுகின்ற உறவே” முரண்பாடு ஆகும்.

                                                                                                                    (கிறிஸ்தோபர் மிச்சல்)

“ஒன்றுக்கொன்று எதிராக வழி நடாத்தப்படுகின்ற சமூகத்தவர்களின் எதிர்ப்பு தன்மை” முரண்பாடு ஆகும்.                                                                        (குயின்சிரைட்)

“இரு தரப்பினர் அல்லது இரு பிரிவினரின் ஒரே தன்மையினது பற்றாக்குறையாக  காணப்படுகின்ற பலத்தை கைப்பற்ற முயற்சிப்பதால் ஏற்படும் நிலை” முரண்பாடு ஆகும்.                                        (பீட்டர் வொலன்ஸ்பின்)

“தமது எதிரிகளை மட்டுப்படுத்துவதை அல்லது காயப்படுத்துவதை அல்லது அழிப்பதை இலக்காகக் கொண்ட விழுமியங்கள் மற்றும் பற்றாக்குறையான அந்தஸ்து மற்றும் அதிகாரம் மற்றும் வளங்களுக்கான போராட்டமே” முரண்பாடு ஆகும்.                                                                                                        (கோஸர்)

“ஒன்றுக்கொன்று பொருந்தாத குறிக்கோள்களை கொண்ட ஆட்கள் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் அவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போது சமூக மோதல்கள் தோன்றும் நிலைமையே” முரண்பாடு ஆகும்.                                                                                                            (லூயிஸ் கிரிசோஸ்)

“அருமையாக கிடைக்கின்ற வளங்களை முறைகேடான முறையில் பங்கீடு செய்தல் காரணமாக முரண்பாடுகள் தோன்றும்”    (தோமஸ் ஒப்ஸ்)

“ஆட்குழுக்கள் அல்லது அரசுகள் பாரதூரமான இணக்கப்பாடுகள் இன்மையினால் அல்லது விவாதத்திற்கு உள்ளடங்கியுள்ள நிலைமைகளின் இறுதியில் மோதல்கள் தோன்றும்.    (ஒக்ஸ்பேங்ட்)

மோதல் தொடர்பில் ஏனையஅறிஞர்கள் பல கருத்துக்களை முன்வைத்து போதிலும் கல்முன் எனும் அறிஞர் முரண்பாடு தொடர்பாக அதிக அக்கறை காட்டியுள்ளார். மோதல் அல்லது முரண்பாடு உட்பட மனித தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையே மோதல் ஏற்பட காரணம் என்கின்றார். உயிர் வாழ்தல், சிறப்பான வாழ்க்கை சுதந்திரம், அடையாளம் ஆகியவற்றை தேவைகளாக குறிப்பிடுகின்றார்.

சூழல், நடத்தை, மனப்பாங்கு இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றது. எனவே இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றம் அல்லது குறை ஏற்பட்டால் முரண்பாடுகள் இயல்பாகவே தோன்றுகின்றது என்கின்றார். மனிதனாகிய ஒவ்வொருவரும் சூழல் மற்றும் நடத்தை, மனப்பாங்கு என்பவற்றை அனுசரித்து செல்லும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது முரண்பாடுகள் தவிர்க்கப்படுகின்றமைக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

முரண்பாடுகளின் இயல்புகள்

1.முரண்பாடு என்பது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட     தரப்பினரிடையே ஏற்படுகின்ற ஒன்றாகும்.

2.முரண்பாடுகளில் ஈடுபடுகின்றபவர்கள் பரஸ்பரம் எதிரான வழிமுறைகளில் ஈடுபடுகின்றனர்.

3.வள தட்டுப்பாடு மற்றும் பல தட்டுப்பாடான நிலைமைகளின் போது விகித சமமின்மை காரணமாக முரண்பாடுகள் ஏற்படுகின்றது.

4.முரண்பாடானது நடத்தையில் பாதிப்பை அல்லது சேதத்தை மற்றும் அழிவை ஏற்படுத்துவதாக அமைகின்றது.

5.முரண்பாடில் ஈடுபட்டும் நபர்களின் பரஸ்பர தொழிற்பாடானது வெளிப்படையாக காணக் கூடியதாக உள்ளதால் அதனை மதிப்பிட முடியும்.

6.மோதலின் அல்லது முரண்பாட்டின் தன்மைக்கு ஏற்ப அது அழிவையோ அல்லது பெரும் தாக்கத்தையோ ஏற்படுத்துவதாக அமைகின்றது.

7.மோதலில் அல்லது முரண்பாட்டின் சாதகமான இயல்புகளும் பாதகமான இயல்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

8.நடத்தை எதிர்ப்பை அழிக்க அல்லது சேதப்படுத்தக்கூடிய தன்மை உடையதாக முரண்பாடுகள் காணப்படுகின்றது.

9.முரண்பாடானது தனி நபர்களுக்கு இடையே அல்லது இரு அரசாங்கங்களுக்கு இடையே அல்லது பல நாடுகளுக்கு இடையே ஏற்படலாம்.

10.முரண்பாடுகள் பெரும்பாலும் தீர்வுகளை எட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.

முரண்பாட்டின் சாதகமான அம்சங்கள்

சாதகமான அம்சங்கள் அல்லது நிலை பற்றி 1904ல் ஜெர்மனிய நாட்டவரான  ஜோர்ஜ் சிமெல்  எனும் அறிஞர் பல கருத்துக்களை “சமூக முரண்பாடு” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அறிஞரின் கருத்தின் படி பிரச்சனைகள் எனவும் தீர்வு பெறவும் காரணியாக அமைவது முரண்பாடுகள் ஆகும். அதன் படி இவர் குறிப்பிட்ட சாதகமான கருத்துக்கள் பின்வருமாறு,

1.சமூகம் வளர்ச்சி அடையாமல் ஒரே இடத்தில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுதல்.

2.சமூகப் பிரச்சனையை ஆராய்ந்து அவற்றின் தீர்வினை பெற்றுக்கொடுத்தல்.

3. தனி நபர்கள் சமூகம் மாற்றம் அடைய பங்கு வழங்குதல்.

4. சமூக குழுக்களின் ஒற்றுமை தன்மையினை வலுப்படுத்துதல்5.

6. சமூக நீதியை நிலைநாட்டும் ஓர் கருவியாக தொழிற்படுதல்.

7. முரண்பாடு தரப்பினர்களுக்கு இடையே ஒருவித உறவினை கட்டி எழுப்புதல்.

8. பொதுசன அபிப்பிராயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

9. ஒரு விடயம் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்களை பெற முடித்தல்

முரண்பாட்டின் பாதகமான அம்சங்கள்

1. முதலாம் உலக மகா யுத்தம் இரண்டாம் உலக மகா யுத்தம்.

2.நாடுகளுக்கு இடையிலான யுத்தங்கள் மற்றும் ஆயுத ரீதியான முரண்பாடுகள்.

3. உள்நாட்டு உள்ளக சிவில் யுத்தங்கள்.

4. வன்முறை சார்ந்த இன முரண்பாடுகள்.

5. ஆயுத வாத மோதல்கள்.

6. பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம்.

7. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தங்கள்.

8. மதரீதியான பிணக்குகள்.

9. அரசியல் ரீதியான போராட்டங்கள்.

10.முற்போக்கான அல்லது சாதகமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் போகின்றமை.

முரண்பாட்டின் வகைப்பாடு

1. எளிய வகைப்படுத்தல்

2. செயற்பாட்டு வாத வகைப்படுத்தல்

3. அரசியல் ரீதியான வகைப்படுத்தல்

1. எளிய வகைப்படுத்தல்

எளிய வகைப்படுத்தல் என்பது தனிநபர் மற்றும் சமூகங்களுக்கு இடையில் மாத்திரம் இடம்பெறுகின்ற முரண்பாடுகளை குறிப்பதாகும். எளிய வகைப்படுத்தலானது பின்வரும் நான்கு வகைகளின் கீழ் நோக்கப்படுகின்றது. ஆளக முரண்பாடு

தனிமனித உள்ளத்தினுள் ஏற்படும் முரண்பாடுகளை இதில் உள்ளடக்கலாம். வாழ்வியல் ஏற்படுகின்ற அபிலாசைகள், நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடு ஏற்படும். வாழ்வில் படுகின்ற பல்வேறு தோல்விகள்,  சவால்கள்கள், பிரச்சனைகள், அவமானங்கள் போன்றவற்றாலும் உள்ளக முரண்பாடு தோன்றுகின்றது எனலாம். இதனால் மன அழுத்தம், தற்கொலை, சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற தீமையான விளைவுகள் ஏற்படுகின்றது.

ஆளிடை முரண்பாடு 

நபர்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளை இது குறிக்கும். நபர்களுக்கு இடையே ஏற்படுகின்ற போட்டி, பொறாமை, புரிந்துணர்வின்மை, கருத்து வேறுபாடு போன்ற பல்வேறு காரணங்களினால் முரண்பாடுகள் ஏற்படுகின்றது.

 உதாரணம் :   வாக்குவாதத்தில் ஈடுபடுதல், கணவன் மனைவிகளுக்கு                                             இடையே ஏற்படுகின்ற பிரச்சனை, நண்பர்களுக்கு இடையே                                        ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகள்  போன்றவற்றை                                                         குறிப்பிடலாம்.

குழு முரண்பாடு

சமூகத்தில் காணப்படுகின்ற குழுக்களுக்கு இடையை ஏற்படுகின்ற புரிந்துணர்வு இன்மை காரணமாக ஏற்படுகின்ற பிரச்சனைகளை குறிக்கும். அதாவது பல்வேறு நோக்கங்கள் மற்றும் அபிலாசைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும். பொதுவாக ஒரு நாட்டுக்குள்/ சங்கங்களுக்குள்/ அரசியல் கட்சிகளுக்குள் அல்லது அரசாங்கத்திற்குள் இடம்பெறும் முரண்பாடுகளை இது குறித்து நிற்கின்றது.

 உதாரணம்:   குழுக்களுடைய சண்டை கலவரம் ஏற்படுதல்.

குழுக்களுக்கு இடையிலான முரண்பாடு

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களுக்கு இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை இது குறிக்கின்றது. அதாவது பல்வேறு குழுக்களுக்கு இடையே காணப்படுகின்ற முரண்பாடுகள், வெளிப்படுத்துகின்ற அரசியல் குழு அல்லது இனக்குழுக்கள் போன்ற முறைசாரா குழுக்களினால் இம் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

2 செயற்பாட்டு வாத வகைப்படுத்தல்.

ஒரு சமூகத்தில் முரண்பாட்டினால் ஏற்பட்ட விளைவுகள் சாதகம் மற்றும் பாதகமான அம்சங்களின் விளைவாக கட்டமைக்கப்பட்டது. இதனை அமெரிக்க சமூக உளவியலாளான மோர்டன் டச் இரு வகையாக விளக்குகின்றார்.

நேர்கனிய முரண்பாடு 

முரண்பாட்டில் ஈடுபடும் தரப்பினர் முரண்பாட்டினால் சாதகமான விளைவை பெற்றுக் கொள்வார்கள் ஆயின் அது நேர்கனி முரண்பாடு எனலாம். இதனால் அழிவுகள் இன்றி ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. முரண்பட்டை இருதரப்பினருக்கும் சமமான வாய்ப்பினையும் திறமை அர்ப்பணிப்பு என்பன கிடைக்கப்படுகின்றது. இதனால் இருதரப்பினர்களுக்கும் எவ்விதமான பாதகமான விடயங்களும் ஏற்படுவது இல்லை.

எதிர்மறை முரண்பாடு

முரண்பாட்டில் ஈடுபடுகின்ற தரப்பினர்  முரண்பாட்டில் ஈடுபடுகின்ற தரப்பினர் தன்னக்கிடையே பாதகமான விளைவுகளை பெற்றிருப்பார்களாயின் அதனை எதிர்மறை முரண்பாடு என்போம்.

உதாரணம் :   இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், ரஷ்யா மற்றும் உக்ரைன்                                        நாட்டுகளுக்கு இடையிலான யுத்தம்

எதிர்மறையான முரண்பாட்டில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் ஒரு போதிலும் அமைதி, திருப்தி, சமாதானம் என்பன ஏற்பட வாய்ப்பு கிடைக்காது.

3. அரசியல் வகைப்படுத்தல்

உலகில் காணப்படுகின்ற முரண்பாடு வன்முறை என்பவற்றில் பெரும்பாலானவை அரசியல் மோதல்களாகவே காணப்படுகின்றன. பிரதான காரணமாக அதிகரித்து வருகின்ற சனத்தொகை, அரசுகளுக்கு இடையிலான இராஜ தந்திர உறவுகளில் ஏற்படுகின்ற விரிசல்கள், பிராந்திய ரீதியான வாதங்கள்/ முரண்பாடுகள் வன்முறைகளை உருவாக்க காரணமாக அமைகின்றது. இதனை விட வல்லரசு ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டிகள் என்பவற்றை குறிப்பிடலாம். “பீட்டர் வொலன்ஸ்டீன்” எனும் அறிஞர் முரண்பாட்டின் தன்மையை பொறுத்து முரண்பாட்டின் அரசியல் வகைப்படுத்தல் ஆனது பின்வரும் அம்சங்களை கொண்டது என குறிப்பிடுகின்றார்.

1. அரசுகளுக்கு இடையிலான முரண்பாடு

 சர்வதேச ரீதியில் அரசுகளுக்கடையிலான முரண்பாடுகள் இதனை குறிக்கின்றது. ஒவ்வொரு நாட்டிற்கும் நட்பு நாடு, பகைநாடு என்று ராஜதந்திர உறவுகள் அமைகின்றது.  அதன் அடிப்படையில் நட்பு நாட்டிற்கு எதிரான நாட்டினையும் பகைநாடாக கொள்ளுதல் அல்லது அரசுகளின் இயல்பு, வளம், பொருளாதாரம் இவற்றை அடிப்படையாக வைத்து அரசுகள் இடையில் ஏற்படும் முரண்பாடுகளை அரசுகளுக்கு இடையிலான முரண்பாடு எனலாம்.

உதாரணம் : ஈரான் – ஈரா யுத்தம், இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம்,  இந்தியா –                                       பாகிஸ்தான் எல்லை யுத்தம்

2. அரசு உருவாக்க முரண்பாடு அல்லது அரச நிர்மான  முரண்பாடு

அக்கால உலகத்தில் பல்வேறு இன மொழி நிறம் அடிப்படையில் வேறுபட்டு வாழுகின்ற மக்கள் தமக்கென்ன ஒரு தனியான அரசினை உருவாக்கும் முயற்சியினால் தோன்றும் முரண்பாடுகள் இது குறிக்கின்றது. ஒரே நிலப்பரப்பில் அல்லது ஒரே அரசின் கீழ் வாழ்கின்ற மக்கள் தமக்கான உரிமைகள், சுதந்திரங்கள் புறக்கணிக்கப்படுவதனால் குறித்த நாட்டில் ஏதேனும் ஒரு பிரதேசத்தை தமக்கென உரிமை கூறி புதிய அரசினை உருவாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் முரண்பாட்டு ரீதியான முயற்சிகளை இது குறிக்கின்றது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் தனிநாடு கோரிக்கைகள் வலுப்பெற்றுடன் அவற்றுக்கான போராட்டங்கள் யுத்தங்கள் பல அவ்வப்போது பல நாடுகளில் இடம்பெற்றதுடன் அவற்றினால் பல்வேறு வகையான இழப்புகளும் இன்றளவும் ஏற்பட்டு வருகின்றது.

3. அரசுக்குள் இடம்பெறும் உள்ளக முரண்பாடுகள்

அரசுக்குள் காணப்படுகின்ற முரண்பாடுகள். அதாவது ஒரு அரசில் காணப்படும் குழுக்களுக்கு இடையில் நடைபெறுகின்ற முரண்பாடுகளை குறிப்பிடுகின்றது. புரட்சிகள், கிளர்ச்சிகள், உள்நாட்டு கலவரங்கள், இனக் கலவரங்கள் என்பவற்றை இதில் குறிப்பிடலாம். இவ்வாறான முரண்பாடுகள் அரசுக்குள் இடம் பெறுகின்ற பட்சத்தில் ஒரு அரசின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு என்பவற்றுக்கு பாரி அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றது.

ஒரு நாட்டுக்குள் உலக முரண்பாடு தோன்றுவதற்கு கட்டமைப்பு சார் அம்சங்கள், அரசியல அம்சங்கள், பொருளாதார சமூக அம்சங்கள், கலாசார அம்சங்கள் என்பன பெரும் பங்கினை வகிக்கின்றன. இவற்றினை ஓர் அரசனது அந்நாட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி சமமாக முகாமை செய்வதின் ஊடாக  அரசுக்குள் இடம்பெறும் முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ளலாம். இவை சமமாக பங்கிடாத பட்சத்தில் முரண்பாடு ஏற்படுகின்றது.

Leave a Comment