முரண்பாடு தொடர்பான அணுகுமுறை

சைமன் பிலரின் குழு 2000 ஆண்டின் வெளியிட்ட “முரண்பாட்டோடு பணி புரிதல் செயற்பாடுகளுக்கான திறன்கள் மற்றும் உபாய முறைகள் (working with conflict skills and strafries for action) எனும் நூலில் முரண்பாடு தொடர்பில் செயல்படும்போது பயன்படுத்தப்படுகின்ற அணுகுமுறைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடுகின்றார்

1. சமூக உறவு சார்ந்த அணுகுமுறை (Community relation approach)  

முரண்பாடானது சமூகங்களுக்கு இடையில் தொடர்புகள் புரிந்துணர்வு என்பன அட்டு போவதனால் ஏற்படுகின்றது என குறிப்பிடுவது அணுகு முறையில் பிரதான கருத்தாக அமைகின்றது சமூகத்தில் காணப்படும் பல்வேறு குழுக்களுக்கு இடையில் ஏற்படுகின்ற நம்பிக்கையின்மைஇ சந்தேகம்இ அச்சம்இ விரோத உணர்வு மற்றும் அந்நியமாதல் என்பவற்றின் மூலம் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

இதனால் இம்முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு முனையும் போது இரு தரப்பினர்களுக்கு இடையேயும் ஏற்படுகின்ற தொடர்பாடல்  புரிந்துணர்வு என்பவற்றை விருத்தி செய்தல் வேண்டும். தத்துவ சமூக கலாசார வேறுபாட்டினை நீக்கி இவ்வாறான பல்வகைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சமூகங்களுக்கு இடையேயான திறனை விருத்தி செய்வது இவ் அனுபவமுறையின் பிரதான நோக்கமாகும்.

2. மனித தேவைகள் அணுகுமுறை (Human needs approach)

அடிப்படை பௌதிகஇ சமூகஇ மனித தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையால் முரண்பாடு உருவாகின்றது என அணுகுமுறை குறிப்பிடுகின்றது. அதாவது மனிதனின் பாதுகாப்புஇ அடையாளம்இ கவுரவம்இ அரசியல் பங்குபற்றல்இ சுதந்திரம் என்பன பூர்த்தி செய்யப்படாமையினால் முரண்பாடுகள் உருவாகின்றன. எனவே தான் அனைத்து தரப்பினரதும் அடிப்படை பௌதீக தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவர முடியும் என இவ் அனுபவ முறை குறிப்பிடுகின்றது. 

3. அடையாளத் தேவைகள் அணுகுமுறை (The identity needs approach)

முரண்பாடுகள் சமூக குழுக்களுக்கு இடையிலான அடையாளம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற உணர்வினால் தோற்றம் பெற்றது எனும் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  அதாவது முரண்பாட்டின் போது ஓர் இனத்தின் அடையாளங்களான இருப்புஇ கலாச்சாரம்இ பாரம்பரியம்இ மதஸ்தலங்கள்இ வரலாற்று சின்னங்கள்இ தமது அடிப்படை உரிமைகள் என்பன அளிக்கப்படுவதன் காரணமாக முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படுகின்றன. எனவே சமூகங்களில் அடிப்படை அடையாளங்கள்இ தேவைகள் மற்றும்  அவர்களது விருப்பங்கள் ஏனைய சமூகத்தவர்களால் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூட்டு உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நல்லிணக்கம் மற்றும் சமரசம் என்பத்தை நோக்கி செல்வதன் ஊடாக அச்சுறுத்தல்கள்இ அந்நிலமையை நீக்குதல் என்பவற்றின் மூலம் முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ளலாம் என இவ் அணுகுமுறை குறிப்பிடுகின்றது.

4. கலாசார தொடர்பாடல் அணுகுமுறை (Cultural communication approach)

முரண்பாடுகள் ஆனது பல்வேறு பட்ட கலாசார தொடர்பாடல் மாதிரி களுக்கு இடையில் காணப்படுகின்ற புரிந்துணர்வின்மையினை உருவாக்குகின்றது என குறிப்பிடுவதாக அணுகுமுறை காணப்படுகின்றது. அதாவது பல்லின கலாச்சாரங்களை பின்பற்றி வாழுகின்ற நாட்டு மக்களின் மத்தியில் ஏனைய கலாச்சாரங்களை பற்றிய தெளிவான விளக்கம் இன்மைஇ தமது கலாசார விழுமியங்களை முதன்மைப்படுத்தி காட்டுதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக ஏனைய கலாசார விழுமியங்களுக்கு தடை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல்இ பல்வேறுபட்ட தரப்புகளில் கலாச்சாரம்  பற்றிய புரிந்துணர்வு இன்மை என்பவற்றினால் பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே முரண்பாட்டுடன் தொடர்புடைய தரப்புகளின் கலாசாரம் பற்றிய புரிந்துணர்வை அதிகரிக்கச் செய்தல் கலாச்சாரம் தொடர்பான பாதகமான சந்தேகங்களை நீக்கி கொள்ளுதல் உலக கலாச்சார தொடர்பாடல்களை வலுப்படுத்திக்கொள்ளுதல் என்பவற்றின் மூலம் முரண்பாடுகளை நீக்கிக்கொள்ள  முடியும் என அணுகுமுறையில் வலியுறுத்துகின்றது.

5. முரண்பாடு நிலைமாற்ற அணுகுமுறை (Conflict transformation approach)

சமூக பொருளாதார கலாசார மற்றும் அரசியல் என்பவற்றில் ஏற்படும் பாரபட்சம்இ அநீதிஇ சமத்துவமின்மை என்பன முரண்பாட்டை ஏற்படுத்த காரணமாக அமைகின்றது. எனவே இக்கட்டமைப்பின் தன்மையினை நிலை மாற்றுவதின் ஊடாக முரண்பாடுகள் தீர்த்துக் கொள்ள முடியும் என இவ் அணுகுமுறை குறிப்பிடுகின்றது. அதாவது பாரபட்சம்இ அநீதிஇ சமத்துவமின்மை என்பவற்றை ஏற்படுத்தக் கூடிய கட்டமைப்புகள்இ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கொள்கைகள் என்பவற்றை மாற்றி அமைப்பது ஊடாக சமாதானம்இ மக்களை வலுவூட்டுதல்இ நியாயத்தன்மையினை ஏற்படுத்துதல்இ மன்னிப்பு வழங்குதல்இ நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளின் மூலம் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள முடியும் என இவ் அணுகுமுறை குறிப்பிடுகின்றது.

6. பிரச்சனை தீர்த்தல் அணுகுமுறை  (Problem solving approach)

முரண்பாட்டு தரப்பினர்களுக்கு இடையே ஒன்றுக்கொன்று வேறுபட்ட அல்லது பொருத்தமற்ற இலக்குகள் மற்றும் நோக்கங்கள் காரணமாக முரண்படும் ஒரு தரப்பினர் மாத்திரம் வெற்றி பெறுதல் இதனால் எதிர் எதிர்த்தரப்பினர் முழுமையாக தோல்வி அடைதல் வேண்டும் என்ற காரணங்களால் தோன்றும் முரண்பாட்டை விளக்கும் அணுகுமுறை இதுவாகும். முரண்படும் தரப்பினர் அனைவரும் பரஸ்பர நம்பிக்கை பெரும் வகையில் சமாதான ஒப்பந்தங்களுக்கு வர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ல் மற்றும் இறுக்கமான நிலைமைகளை விடுபட்டு நலன்களின் அடிப்படையில் விட்டுக் கொடுப்புடன் இருதரப்பினரையும் இணங்க செய்வதன் மூலம் முரண்பாடுகளை தீர்த்து வைத்தல் அணுகுமுறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

Leave a Comment