முரண்பாட்டுத் தீர்வு செய்முறைகள்

முரண்பாடு என்பது சமூக மாற்றத்தின் உள்ளார்ந்த தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். இது மரபு ரீதியான கட்டுப்பாடு விதிகளை கடந்த ஒரு சமூக மாற்றங்களாக உருவாக்கப்பட்டு புதிய நிலைகளாக அல்லது வடிவங்களாக உருவெடுக்கும் பல்வேறு நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகும். முரண்பாடு என்பது சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக இருப்பினும் அவை பெரும்பாலான நேரங்களில் ஏற்படுத்தக்கூடிய முரண்பாடுகளால் பாதகமான விளைவுகள் ஏற்படும். இப்பின்னணியில் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு அவசியமாகின்றது.

இதன் காரணமாக முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல கோட்பாட்டு ரீதியான வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை முரண்பாட்டு தீர்வு செய்முறை என அழைக்கின்றோம். முரண்பாட்டுத் தீர்வு செய்முறையானது பொதுவாக நீண்டதொரு செயல்முறை ஆகும். அதாவது தனிப்பட்ட ரீதியிலும் சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளினால் பாதிப்புரக்கூடியது. அவதானிக்க தக்க விடயம் யாதனின் முரண்பாட்டை முழுமையாக தீர்த்துக் கொள்ளல் கடினமாக இருப்பினும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு சாதகமான வழிமுறைகளை பின்பற்றும் பல அணுகுமுறைகள் அல்லது வழிமுறைகள் காணப்படுகின்றன.

1. முன்கூட்டியே எச்சரிக்கை செய்தல்

2. முரண்பாடு தவிர்த்தல் 

3. முரண்பாட்டு முகாமைத்துவம் 

4. முரண்பாட்டு நிலை மாற்றம் 

5. முரண்பாட்டுக்கு பின்னரான சமாதானத்தை கட்டி எழுப்புதல் 

6. முரண்பாட்டுக்கான தீர்வு

1. முன்கூட்டிய முன் எச்சரிக்கை செய்தல் (early warning)

முரண்பாட்டு தீர்வு செய்முறையில் 1980 மற்றும் 1990களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட முரண்பாடுகளை கையாளுகின்ற வழிமுறைகளாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்தல் என்பது மிக முக்கிய கருத்தாக முன்வைக்கப்பட்டது. அதாவது சமூகத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் முரண்பாடுகள் தொடர்பான முன்னரான அறிவுறுத்தல் அல்லது முன்னரே இனம்கண்டு அவை ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.  அவ்வாறு அறிவுறுத்தல்களை அல்லது எச்சரிக்கைகளை மேற்கொள்ளும் போது முரண்பாடு ஏற்படக்கூடிய இடம்இ சமூகக் குழுக்கள் போன்றவற்ற இனம்கண்டு அதன் மூலம் முரண்பாடுகளுக்கு காரணமாக அமையக்கூடிய காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை ஆராய்ந்து தீர்ப்பதற்கான யோசனைகளை முன் வைக்க முடியும். 

கெனத் போல்டிங் என்பவரால் முன்மொழியப்பட்ட “சமூகத்தரவு மையம்” என்பது இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் முரண்பாட்டிற்கு காரணமாக அமைந்த குறிப்பிட்ட பிரதேசங்களை கண்காணித்தல் அம் முரண்பாட்டை ஆரம்பத்திலேயே தடுத்து விடுவதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே எச்சரிக்கைகளை  மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக பொருளாதார தடைகளை விதித்தல்.

முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக அல்லது தடுப்பதற்காக முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதானது முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது இதன் மூலம் பிரச்சனைகளை பாரிய தடுத்துக் கொள்ளலாம்.

2. முரண்பாடுகளை தவிர்த்தல் (Conflict prevention)

முரண்பாடு தீர்வு கற்கை நூல் 1950 களின் பின்னர் செல்வாக்கு பெற்றது. முரண்பாடு தவிர்த்தல்  ஆனது பல்வேறு நாடுகளில் தோன்றிய அழிவு ரீதியான முரண்பாடுகள் காரணமாக முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயல்முறை எனலாம். மேலும் ஆயுத ரீதியான அழிவு ஏற்படாமல் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும். முரண்பாடு தவிர்த்தல் என்பது மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அதனை ஒரு சமாதான நிலைக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் உபாயங்களை கொண்டதாகும். அதாவது ஒரு மோதல் பரவி அது ஒரு பெரிய அழிவை ஏற்படுத்துவதில் இருந்து தவிர்த்துக் கொள்வதற்காக முரண்பாடுகளை இருதரப்புகளும் இணைந்து ஆராய்ந்து அவற்றை தீர்த்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியாகும். முரண்பாடு தவிர்ப்பதன் மூலம் பிரதான அம்சமாக முரண்பாட்டின் தன்மை அனைவரும் புரிந்து கொள்ளப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள்  மேற்கொள்வதன் மூலம் முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுதலாகும். முரண்பாடு தவித்த செயல்முறையானது இரண்டு பிரதான வழிமுறைகளை கொண்டு காணப்படுகின்றது.

உடன்பாட்டை சுமாராக தவித்தல்    –    முரண்பாடு ஒன்று வன்முறையாக மாறுவதை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை இதுவாகும் முரண்பாட்டின் அடிப்படைக் காரணியை அவதானிக்காவிடின் ஆயுத முரண்பாட்டை தடுக்க ராஜதந்திர முறையிலான மாநாடுஇ மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்இ சமாதான பேச்சுவார்த்தை போன்றவற்றின் மூலம் தற்காலிகமாக முரண்பாடுகளை தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியாகும்.

முரண்பாடுகளை ஆழமாக தவித்தல்  –     நாட்டின் அடிப்படைத் தன்மையை அறிந்து முற்றான தீர்வுகளை பெற்றுக் கொடுத்தலை இது குறிக்கின்றது. மீண்டும் முரண்பாடு ஏற்படக்கூடாது என்பதனை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். ஜனநாயகம், மக்களாட்சி, ஊடக சுதந்திரம், சட்டசீர்திருத்தம், அபிவிருத்தி வழிமுறைகள், அரசியல் சீரமைப்புகள்இ பொருளாதார சீரமைப்புகள் போன்றன இதன் உத்திகளாகவும் வழிமுறைகளாகவும் பின்பற்றப்படுகின்றன.

3.முரண்பாட்டு முகாமைத்துவம் (Conflict management) 

முரண்பாட்டினை கையாள்வதற்கான உத்திகளில் ஒன்றாக 1980 களின் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஓர் செயல் முறையாகும். முரண்பாட்டு முகாமைத்துவமானது கட்டுப்படுத்த முடியாத மோதல்களின் நீண்ட கால முகாமைத்துவத்தினை குறிப்பிடுகின்றது. அதாவது மோதல் முகாமத்துவம் பிரச்சனைக்கான தீர்வினை முன்வைக்காது மோதல் பரவாது மோதல் தரப்பினரிடையே மோதலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை குறிப்பிடுகின்றது. மோதல் முகாமைத்துவம் பற்றி டொனால்ட் பிளக் என்னும் அறிஞர் மோதலில் தொடர்புடைய இரு குலுக்கள் இடையே மேலும் முதல் அதிகரிக்காது அல்லது பரவக்கூடாது ஒரு குறித்த நிலையில் முகாமை செய்வதை குறிப்பிடுகின்றார். சமாதான உடன்படிக்கை யுத்த நிறுத்து ஒப்பந்தம் என்பவற்றினால் மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முடியாவிட்டாலும் அம்மோதல் நிலைமையினை முகாமை செய்வதற்கு இது உதவுவதை குறிக்கின்றது. அமைத்தோம் பற்றி குறிப்பிடும் “லாட்மன்” எனும் அறிஞர் மோதல் மற்றும் நெருக்கடிக்கு காரணமாக அம்சங்களை குறைத்தல் அல்லது கட்டுப்படுத்தல் என்பவற்றின் மூலம் தீர்வினை காண்பதாகும் என குறிப்பிடுகிறார்.

மேலும் மோதல் முகாமைத்துவமானது மோதலை முழுமையாக தீர்ப்பது கடினமான நீண்டகாலம் எடுக்கக் கூடியதாக உள்ளபோது மோதலை வன்முறை மற்றும் அழிவுத் தன்மையான விளைவுகளை கட்டுப்படுத்தி அது மேலும் பரவுவதை கட்டுப்படுத்துவதாகும். இது மோதலுக்கான பிரதான காரணிகளுக்கு தீர்வுகளை தேடுவதில்லை. மாறாக மோதலை ஒரு வகையில் கட்டுப்படுத்தலை குறிப்பிடுகின்றது. 

இன்னும் ஒரு வகையில் கூறின் மோதலை சாதகமற்ற விளைவுகளை பெற்றுக் கொடுக்கும் ஒன்றாக கருதாதுஇ சமூகத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட மனோநிலை மற்றும் நோக்கங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு மோதல் எனலாம். இது மோதலை ஓர் ஆரோக்கியமான சாதகமான ஒரு நிலையில் கொண்டு செல்கின்றது. அதாவது மோதல் முகாமைத்துவமானது வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் ஆக்கபூர்வமானதாக கையாளும் ஒன்றாக கருதப்படுவதுடன் ஜனநாயகம் சமாதானம் கலந்துரையாடல் இன்பத்தின் மூலம் இடம்பெறும் முயற்சி செய்கின்றது.

 

முரண்பாட்டு முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்

1. முரண்பாட்டுத் தன்மையை அளவிடுதல் 

2. முரண்பாட்டுத் தரப்பினரை சமப்படுத்துதல் 

3. முரண்பாட்டு தரப்பினரை தனிமைப்படுத்துதல் 

4.மாநாடு கலந்துரையாடல்கள் நடத்தி கட்டுப்படுத்துதல் 

5.அழிவினையும் பாதிப்புகளையும் குறைத்தல்

 

4. முரண்பாட்டு நிலை மாற்றம் (Conflict transformation)

கையாளுவதில் மற்றுமொரு அணுகுமுறை முரண்பாட்டு நிலை அணுகுமுறையாகும். இதனை மோதல் ஒரு மாற்றம் என அழைக்கப்படும்.  மோதல் நிலை மாற்றம் என்பது மோதலின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். அதாவது மோதல் தரப்பினர் பிரச்சனைகள் எதிர்பார்ப்புகள் மோதலை ஏற்படுத்தும் அடிப்படை காரணிகளை மாற்றி அமைப்பதனால் மோதலின் அனைத்து விதமான போக்கு நிலை மாறுவதை நோக்கமாகக் கொண்ட அணுகுமுறையாகும். நேரடியாக முடிவுக்கு கொண்டுவர முடியாத ஒன்றாக காணப்படும் மோதலை வேறொரு திசைக்கு அல்லது பரிணாமத்திற்கு கொண்டு செல்லக்கூடியதாகும்.

மோதல் நிலை மாற்றம் ஒட்டுமொத்த மோதல் சூழல் காரணிகளை மாற்றி அமைத்தல்இ மோதல் தரப்பினரின் தொடர்புகள் மாற்றியமைத்தல்இ மோதலுடன் தொடர்புடைய தரப்பினர் மனப்பாங்குகள்இ நடத்தைகள்இ எண்ணங்கள் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். மோதல் நிலை மாற்றம் ஏற்படுவது பற்றி பல அறிஞர்கள் பல்வேறுபட்ட அணுகுமுறைகள் குறிப்பிட்டுள்ளனர். அந்த அடிப்படையில் மோதல் நிலை மாற்றம் பற்றி “ஜோன் போல் லெட்ராஜ்” எனும் அறிஞர் முக்கியமானவர். இவரது கருத்தின் படி மோதல் நிலைமாற்றம் பின்வரும் நான்கு பரிமாணங்களில் ஏற்படும் என குறிப்பிடுகின்றார்.

1. தனியாள் பரிமாணம் 

இது மோதல் பற்றி ஏற்படுகின்ற மாற்றத்தை குறிப்பிடுவதாகும். மனநிலை மாற்றம், ஆன்மீக உணர்வு, மோதல் பற்றிய அறிவு என்பவற்றின் விளைவாக தனிநபரிடம் ஏற்படுகின்ற நிலை மாற்றமாகும். மோதல் மனிதனின் உணர்வுகள்இ கௌரவம், கருத்துக்கள், சிந்தனைகள், நடத்தைகள் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுவதை குறிப்பிடுவதாகும். தனியார் நிலை மாற்றம் சமூக மோதலில் பாரிய அழிவுகளை தடுத்துஇ ஆரோக்கியமான அபிவிருத்தியை கொண்டு வருவதில் செலுத்தக்கூடிய ஒன்றாகும்.

2. தனியாள் பரிமாணம்

முறைகளில் அன்னியோன் இருப்பது போல முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன உறவுகளின் முக்கியத்துவம் அறிந்தால் புரிதலும் விட்டுக்கொடுப்பும் எளிதில் நிகழும். இதன் மூலம் முரண்பாட்டிற்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர். ஆரம்ப காலங்களில் முரண்பாட்டை தவிர்க்கவே உறவுகளுடன் கூடிய சாஸ்திர சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்பட்டது என முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர்.

3. கட்டமைப்பு பரிமாணம் 

சமூகத்தில் பொருளாதார அடிப்படையில்இ மத அடிப்படையில்இ மொழி அடிப்படையில்இ நிற அடிப்படையில் தமக்குள்ளே ஒரு வட்டத்தை இட்டு தமக்கே உரித்தான கட்டுப்பாடுகளை விதித்து வாழுகின்றனர்.  கட்டமைப்பு எதார்த்தமான நிகழ்கால உலகுக்கு பொருந்தாது  போகலாம். கட்டுப்பாட்டை தளர்த்த நினைக்கும் போது முரண்பாடு எளிதில் ஏற்படுகின்றது மனிதாபிமானம் குன்றி போகின்றது. இனவாரியானஇ நிறவாதியான பாகுபாடுகளால் மக்கள் துன்பப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக இந்தியாவில் சாதி பாகுபாடு இன்றும் தீவிரமாக காணப்படுகின்றது. இதனால் ஆணவக் கொலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

4.கலாசார பரிமாணம் 

கலாசார விழுமியங்கள் பாரம்பரிய அடையாளங்களில் எவ்வித குறைபடாது இருத்தலை குறிக்கின்றது. மோதலை எளிதில் அடையாளம் காணக் கூடியதாகவும் அமைகின்றது.

 

5. முரண்பாட்டுக்கு பின்னரான சமாதானத்தை கட்டி எழுப்புதல்

காலம் காலமாக இடம்பெற்று வரும் மோதல்கள்இ முரண்பாடுகள்இ வன்முறைகள் என்றே வழக்கமாக இருப்பதனால் அதன் அடுத்த படியான செயல்பாடாகவே “முரண்பாட்டுக்கு பின்னரான சமாதானத்தை கட்டி எழுப்புதல்” எனும் அம்சம் முக்கியத்துவம் பெறுகின்றது. இவை கட்டம் கட்டமாக அமைய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகின்றது. அதன்படி

*முரண்பாடுகளில் அல்லது வன்முறைகளில் ஈடுபட்டவர்களின் ஆயுதம் ஏந்தியவர்களையும் போராளிகளையும் விடுதலை செய்தல்.

*விடுதலைப் பெற்றோரை சமூகத்துடன் சமரசமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

*அவர்கள் தயக்கம் இன்றி வாழவும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். 

*சகஜமான வாழ்க்கை வாழ்வதற்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழிகாட்டல்களை மேற்கொள்ளுதல்.

போன்ற விடயங்கள் முரண்பாட்டின் பின்னரான செயற்பாடுகளில் இடம்பெற வேண்டும் என்கிறார் டிக் சோலமன் எனும் அறிஞர். 

அரசு நிறுவனங்கள் நிர்மாணிக்கப்படுதல், சனநாயகத்தை நிலை நிறுத்துதல், அதிகார பகிர்வினை மேற்கொள்ளுதல், சட்டவாசியின் நடைமுறைப்படுத்தல் என்பவற்றின் மூலம் மோதலுக்குப் பின்னரான சமாதானத்தை கட்டி எழுப்ப முடியும் என ஜோன் லூயிஸ் எனும் அறிஞர் குறிப்பிடுகின்றார். சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கு பின்வரும் மூன்று விடயங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நிவாரணம் வழங்குதல்

மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குதல் வேண்டும். அதாவது அகதி முகாம்களை ஏற்படுத்தி கொடுத்தல், தற்காலிக இருப்பிடங்களில் வாழ்வதற்கு மக்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடைஇ மருத்துவர் வசதிகள் பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். 

மீள் கட்டுமான  வசதிகளை வழங்குதல்

மோதலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும் முகமாக சமூகத்தில் இணைத்தல், உளவள பயிற்சிகளை வழங்குதல், நம்பிக்கையை கட்டி எழுப்புதல், சனநாயகத்தை நிலைநாட்டல் போன்ற செயற்பாடுகளின் மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதாக மாற்றுதல்.

அபிவிருத்தி செய்தல் 

மோதல்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை குறுங்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் மோதல் இடம் பெற்ற காரணிகளை முற்றாக நீக்கி சமாதான சூழலை உருவாக்குவதாகும்.

 

6. முரண்பாட்டுத் தீர்வு

மோதலுடன் தொடர்புடைய சகல துறைகளுடனும் முரண்பாட்டுத் தீர்வு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மோதல் தீர்வு என்பது குறுகிய மட்டத்தில் மோதலுக்கு வழிவகுத்த காரணிகளை இனம் கண்டு அவற்றினை அகற்றுதல் அல்லது நீக்குதல் என்பதனை குறிக்கும். முரண்பாட்டில் ஈடுபட்ட இரு தரப்பினரில் சகலரும் சாதக விளைவுகளை அனுபவிக்கும் முகமாக  நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும். முரண்பாடுகளுக்கான தீர்வு செய்முறைகளை நடைமுறைப்படுத்தப்படும் போது மோதலுக்கான அடிப்படை காரணிகளை வேரோடு கலையை செய்வதுடன் மோதல் மற்றும் வன்முறைகள் மீண்டும் தலைதூக்கா வண்ணம் சாத்தியப்பாடுகளை ஏற்படுத்துதல் வேண்டும் மோதல் தரப்பினரிடையே புதிய உறவுகளை கட்டி இருப்பதுடன் நேரான மனப்பாங்குகள் மற்றும் நடத்தைகளில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைதல் வேண்டும்.

 

 மீள் கட்டமைத்தல் 

முரண்பாட்டில் ஈடுபட்டவர்கள் சமாதானத்தை கட்டி எழுப்பியதன் பின்னர் இழக்கப்பட்ட அனைத்து வளங்களையும், மக்களின் நலன்களையும் சீர்படுத்துவதனை இது குறிப்பிடுகின்றது. Barnett  என்ற அறிஞரின் குழுவினர்கள் இணைந்து பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.
1. மோதலுக்கு பிந்திய வளையங்களை உறுதிப்படுத்துதல்.
2. ஆயுதக் கலைவு
3. ஒருமைப்பாடு 
4. போராளிகளின் உறுதிப்பாடுகள் 
5. உளரீதியான வழிமுறை ஆலோசனைகள்
 
அரச நிறுவனங்களை சீரமைத்தல்.
1. போரினால் அல்லது மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான           நிவாரணங்களை வழங்குதல்.
2. சனநாயக ரீதியிலான அரச நிறுவனங்களை தாபித்தல்.
3. கல்வி மற்றும் சுகாதார வசதிகளினை அனைவருக்கும் பெற்றுக்            கொடுத்தல்.
4. முறையான கண்காணிப்புகளை மேற்கொள்ளுதல்.
5.சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளை முறையாக                            கையாளுதல்
6. உளவல ஆலோசனைகளை வழங்குதல்.
7.பெண்களை வலுவூட்டல் செய்தல் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
8.சிவில் சமூக மேம்பாட்டுக்கான வேலை திட்டங்களை ஏற்படுத்துதல்.
9. மனித உரிமைகளை பாதுகாத்தல்.
 
 
மோதர்களை தீர்ப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் 
1. அமைதி அல்லது சமாதானமான சூழல் ஏற்படுதல். 
2. அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுதல்.
3. மனித உரிமைகள் முறையாக பாதுகாக்கப்படுதல்.
4. சர்வதேச உறவுகள் மேலும் வளர்ச்சியடைதல்.
5. சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைதல்.
6. பண்பாட்டு கலாசார ஒத்துழைப்புகள் விருத்தி அடைதல்.
7. நம்பிக்கை மேம்படுதல்.
8. முதலீட்டாளர்களின் வருகை கணிசமாக உயர்தல்.
9. உயிரிழப்புக்கள் தடுக்கப்படுதல்.
10. நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்படுதல். 
11. நிலையான அபிவிருத்தி ஏற்படுத்தல்.
12. சர்வதேசத்தில் நாட்டின் நன்மதிப்பு மேம்படுதல்.
 
மோதல் தீர்வு தொடர்பாக பிரஜை ஒருவரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்
1. புரிந்துணர்வு
2. பொறுமை
3. கருணை
4. ஆக்கபூர்வமான சிந்தனை
5. அனுபவ முதிர்ச்சி
6. தெளிவாக முடிவெடுத்தல்
7. பொதுநல சிந்தனை
8. எதையும் தாங்கும் மனோபக்குவம்
9. பயனுடைய சிறந்த தொடர்பாடல்
10.அனுதாபம் காட்டுதல் 
11. அகிம்சை பண்புகளை பின்பற்றுதல்
12. ஏனையவறது கருத்துகளுக்கு மதிப்பளித்தல் 
13. தனது கடமைகளை முறையாக மேற்கொள்ளுதல் 
14. நீதி மற்றும் நேர்மையான சிந்தனைப்போக்கு 
15. தியாக மனப்பாங்கு 
16. தனி நபர்களுக்கு இடையிலான சிறந்த தொடர்புகளை பேணுதல் 
17. வெற்றி தோல்விகளை சமமாக மதித்தல்

Leave a Comment