முரண்பாட்டு வாழ்க்கை சக்கரம்

மோதல் கல்வியில் முன்னோடிகளில் ஒருவரான அமெரிக்க அறிஞரான லூயிஸ் கிரிஸ்பேர்க் மோதல் வாழ்க்கை சக்கரம் பற்றியும் அதன் படிநிலைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

1. முரண்பாட்டிற்கான காரணம் நிபந்தனைகள் காணப்படல்.

ஆரம்பக்கட்டம் இதுவாகும். முரண்பாடு ஒன்று ஏற்படுவதற்கு நிபந்தனைகள் காணப்படுதலும் அதனை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது இதன் பிரதான அம்சமாகும். முரண்பாட்டுக்கான காரணி கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது முரண்பாடு ஏற்படுவதற்கான பிரதான காரணியாக அமைகின்றது. அதற்கான தீர்வு பெற்றுக் கொள்ளாமையும் முரண்பாடு மேலும் வலுப்பெறுவதற்கு காரணியாக அமைகின்றது.

2. முரண்பாடுகள் தோன்றுது அது ஏற்படுவதற்கான பின்னணியை அறியாமையினால்

அதன்மூலம் மக்களின் தேவைகள், நோக்கங்கள் மற்றும் விருப்பங்கள் என்பன பூர்த்தி செய்யப்படாமையினால், மக்களுக்கு ஏற்படுகின்ற எதிர்விளைவுகளும் விரக்தி நிலைமை, பாரபட்சம், அதிருப்தி என்பவற்றின் கூட்டு காரணமாக ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் முரண்பாடுகள் உருவாகின்றன.

3. முரண்பாடுகள் தீவிர நிலையை அடைதல், அதாவது வலுப்பெறுதல்

முரண்பாடுகளை ஏற்படுத்தும் தரப்பினரால் தமது இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் வன்முறை சம்பவங்கள், யுத்த நிலைமைகள், கொலை சம்பவங்கள், சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல், கடத்தல் என்பவற்றின் மூலம் முரண்பாடுகளை தீவிர நிலைக்கு கொண்டு செல்வதாகும். பொதுவாக இவ்வாறான நிலை ஒரு நாட்டினுடைய உள்ளக முரண்பாடுகளில் அதிக தாக்கத்தை செலுத்தக் கூடியதாக அமைகின்றது. இக்கட்டான நிலைமைகளின் போது முரண்பாடானது சமாதானம் பேச்சுவார்த்தை அரசியல் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக் கொள்வது மிகவும் கடினமானதாக அமைகின்றது இதன் போது பெருமளமான சேதங்கள் மற்றும் இழப்புகளை சந்திக்க நேரிடுகின்றது.

4. முரண்பாட்டின் தீவிர நிலை அற்றுப்போதல்

முரண்பாடு தீவிர நிலையை அடைந்ததன் பின்னர் முரண்படும் தரப்பனரிடையே ஒரு கட்டத்தில் தீவிர நிலை குறைந்து செல்லும் நிலை ஏற்படும். அதாவது முரண்பாட்டினை வலுப்பெற செய்வதற்கு கொண்டு செல்லும் வளம், திறன் என்பன குறைவடைவதன் காரணமாகவும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள், மக்களின் ஒத்துழைப்பு குறைபடுதல், என்பவற்றின் காரணமாகவும் முரண்பாடு தரப்பினரை ஒரு தலைப்புச்சமாக தீர்வினை நோக்கி செல்வதால் மோதலின் தீவிர நிலை குறைவடைந்து மோதல் கீழ் நிலையை நோக்கி செல்கின்றது.

5. முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டு வருதல்

ஒரு நாட்டின் உள்ளக முரண்பாடு சிவில் யுத்தமாக மாற்றமடைந்து அதன் மூலம் அம்மோதல் நீண்ட காலம் முதலாக மாற்றம் அடைகின்றது. முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் நீண்ட கால செயற்பாடாக மாற்றமடைந்து இம்முரண்பாடானது யுத்தத்தின் மூலம் ஒரு தரப்பினர் வெற்றியடைகின்றனர். இரு தரப்பினரும் பல இழப்புகளை சந்தித்து நீண்டகால பாதிப்புகளை எதிர் கொள்கின்றனர். இதனால் தோல்வி அடைந்த தரப்பினரது உரிமை, கொள்கை, அரசியல் கோரிக்கைகள் என்பன நிறைவேற்றப்பட வேண்டும். இந்தப் பின்னணியிலையே இரு குறித்த தரப்பினரும் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சமாதான பேச்சுவார்த்தைகள், சமாதான உடன்படிக்கைகள், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பவற்றின் ஊடாக கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் இருதரப்பினரும் சில விட்டுக் கொடுப்புகளை செய்து சமரச சமாதானத்தை ஏற்படுத்துவது ஊடாக முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டு வருவதை இப்படி நிலை குறிப்பிடுகின்றது.

Leave a Comment