வெகுசன ஊடகங்களில் பெண்கள்

“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீனின் அழகினில் படகினை செய்தான் 

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்”

என அறிஞர்களால் விதந்து போற்றப்பட்ட அறிவியல் வளர்ச்சியின் அதிவேகப் பயணத்தின் விளைவாக ஊற்றெடுத்த புரட்சியே தகவல் தொழில்நுட்பமாகும். தகவல் பரிமாற்றத்தினை கஊடுக்கடத்தும்இ இலகுபடுத்தும் இன்றியமையாத சாதனங்களாக ஊடகங்கள் உலா வருகின்றன. இத்தகைய ஊடகங்களிலே பொதுமக்களிடையே தொடர்பு கொள்ளதக்க வகையில் வீறுநடை போடுவன வெகுசண ஊடகங்கள் ஆகும். பத்திரிகைஇ சஞ்சிகைகள் என்பவற்றை குறிப்பிடலாம். இலத்திரனியல் ஊடகங்கள் என்பதற்குள் தொலைக்காட்சிஇ வானொலிஇ கணினி போன்றவற்றை வரிசைப்படுத்தலாம். இவற்றில் பணிபுரிபவர்களும் சேவையின் துணைக் கொண்டே அவ் ஊடகங்களின் வளர்ச்சி பாதையை அமைக்க கணிக்க முடியும். அதீத வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு சேவை நல்கும் பணியாளர்களிலும் வளர்சேர்த்து செழிக்க வைக்கும் பார்வையாளர்களிலும் பெண்களுக்கு என தனி இடம் உண்டு. “மங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா

என்ற கவிமணியின் கவி குரலுக்கு இணங்க உன்னத பிறவியாக துதிக்கப்படும் பெண்கள்இ அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற இருளில் இருந்து விடுபட்டு இன்றைய யுகத்தில் சகல துறைகளிலும் சாதனைகள் புரிந்த வண்ணமே உள்ளனர்.

நுண்ணிய அணு முதல் நூதனமான விண்ணியல் வரை தங்களது கால் தடத்தை பதித்த பெண்கள் ஊடகத்துறையில் ஊடுருவ தவறவில்லை.   அந்த வகையில் பெண்களது பங்களிப்பு பற்றி ஆராயும் இடத்தில் வெகுசன ஊடகங்கள் பெண்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன? என்ற துணிப்பொருளில் இருந்து ஆரம்பிப்போம் இன்றைய ஊடகங்களை பொதுப்பார்வையை நோக்கும் இடத்தில் அறிவார்ந்த நிகழ்ச்சிகள்இ கலை கலாச்சாரங்களுக்கும் பண்பாட்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கலை நிகழ்ச்சிகள்இ விளம்பரங்கள்இ மேடை நிகழ்ச்சிகள்இ தொகுப்புகள் என்பதை பெரும்பாலும் பெண்களின் பங்களிப்பினாலே அதிக அளவு இடம் பெறுகின்றன.

இவ்வாறான விடயங்களில் பெண்களது பங்களிப்பிற்கு ஊடகங்களின் தூண்டல் இன்றியமையாததாகும். பொது மக்களை போட்டி உலகிற்கு ஈர்த்தெடுக்கும் நோக்குடனும் வியாபார லாப நோக்குடனும் ஊடகங்களில் பெண்களுக்கான அங்கீகாரம் அதிக அளவில் வழங்கப்படுகின்றது. இயந்திர சக்தியும் அவசரயுகமாய் பயணிக்கும் இந்த உலகிற்கு எண்ணற்ற வியாபார நிறுவனங்களின் பெருக்கமும் போட்டித் தன்மையும்இ விளம்பரங்களில் தன் விற்பனை இலாபத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளினாலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன.

ஊடகத்துறையினை பொறுத்தவரையில் ஆண்களுக்கு நிகராக நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். அறிவிப்பாளர்கள், செய்தி சேகரிப்பாளர்கள்இ தொழில்நுட்ப வல்லுனர்கள்இ பணியாளர்கள்இ செய்தி வாசிப்பாளர்கள், விளம்பரப்படுத்துதல் ஈடுபடுபவர்கள் என பல பரிமாணங்களை பெண்கள் கண்டுள்ளனர்.

இவ்வாறான பரிமாணங்களை நோக்கும் இடத்து பெண்களது அறிவாற்றலையும் அனுபவத்தினையும் பெருக்கெடுக்க செய்யும் பரிமாணங்களாகவே விழுகின்றன இருப்பினும் மக்களின் மத்தியில் பெண்களானவர்கள் எப்பொழுதும் கவர்ச்சி பொருளாகவும்இ அதிகரமான ரசிகர்களை ஈர்த்து எடுப்பதற்கான காட்சி பொருள்களாகவும் பிரயோக்கப்படுகின்றனர் என்ற எண்ணம் காணப்படுகின்றது. இவ்வாறு பல கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும் பெண்கள் தனது அறிவு பெருக்கம் காரணமாக இன்றைய யுகத்தில் ஊடகத்துறையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காணப்படுகின்றனர்.

ஆரம்ப காலகட்டங்களில் ஆணாதிக்கத்திற்கு உட்பட்டும் அடக்குமுறைகளுக்கு உட்பட்டும் காணப்பட்ட பெண்கள் தற்போது சமூகத்தில் நன்மதிப்பை பெறும் ஒரு இடத்திற்கு உயர்ந்துள்ளனர் என்பதில் இந்த விகுசன ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியது.  இருப்பினும் ஊடகத்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் எவ்வளவு முன்னேறிச் சென்றாலும் அவர்களுக்கான அச்சுறுத்தல்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. சுய பாதுகாப்பு தொடக்கம் குடும்பப் பின்னணியில் ஏற்படுகின்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் முன்னேறி செல்வதற்கு பெரும் தடையாக காணப்படுகின்றது. ஆண்கள் மாத்திரம் வேலைக்கு சென்று உழைக்கும் வருமானம் இன்றைய குடும்பத்துக்கு போதாத நிலையில் பெண்களும் வேலைக்கு சென்று உழைப்பதற்கான தேவை நிலவுகின்றது.  இதனால் ஊடகத்துறையில் பல்வேறு பங்களிப்புகளை மேற்கொண்டு வரும் பெண்களின் சுய பாதுகாப்பு மற்றும் அவர்கள் பண்பாட்டு தொடர்பான விடயங்களில் அதிக அக்கறை கொண்டு ஊடகத்துறை சார் வேலைவாய்ப்புகளில் கரிசனையுடன் உறுதிப்படுத்தல்கள் காணப்படுவது இன்றியமையாததாகும்.

அச்சு ஊடகங்களில் பங்கேற்கும் பெண்களான பெண்கள் செய்தி வெளியீட்டின் போது தனது பெயர்களை குறிப்பிட விரும்பாமையும் அக்கிரமங்களை அமல்படுத்தும் போது அவலங்கள் பலவற்றை சந்திக்கும் துர்பாக்கிய நிலை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஊடகங்களின் கருத்து சுதந்திரம் என்பது பெண்களைப் பொறுத்தவரையில் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. உலகிலே பழங்காலம் தொட்டு பண்பாடும் பாரம்பரியமும் முதன்மை பெரும் தமிழினத்தில் உதித்த பெண்களை பொறுத்தவரையில் ஊடகத்துறையில் பரிணமித்து தமிழர் பண்பாட்டு சீரழிவுக்கு காரணமாகின்றனர் என்ற எதிர்மறையான கருத்தும் நிலவுகிறது. ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் நவீன மோகத்தினாலும் பணியின் திறமையை வெளிக்காட்டுவதற்காகவும் நடை உடை பாவனைகள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். அத்தோடு பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு முகம் கொடுப்பவர்களாக காணப்படுகின்றனர். அத்தோடு மூளைச்சலவைக்கு உட்படுத்தல்இ தனிமைப்பட்டு போதல் போன்ற தீமைகளை அனுபவிப்பவர்களாகவும் உள்ளனர்.

எது எவ்வாறாக இருப்பினும் சமுதாயத்தில் ஓரங்கமாக ஒரு கொண்டுள்ள ஊடகங்கள் ஆண் பெண் சமத்துவத்தை பேணும் கடப்பாட்டினை உணர்ந்து கொள்வது இன்றியமையாததாகும்.  பெண்களது பண்பாட்டு சீரழிவினை உருவாக்கும் ஊடகங்களுக்கு எதிராக அரசு தன் அதிகாரங்களை பிரயோக்கப்படுத்துவதன் மூலம் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இன்றைய யுகத்தைப் பொறுத்தவரையில் அவசியமான ஒரு விடயமாகும். அடக்குமுறைகளாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட பெண்களை விடிவு பாதையை நோக்கி பயணித்திடும் வகையில் சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து சமுதாயம் முன்னேற்றத்திற்கு வித்துட வேண்டிய பாரிய பொறுப்பு வெகசன ஊடகங்களுக்கு உள்ளது. வரலாறு போற்றும் வகையில் தமது பண்பாடுகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வண்ணம் ஊடங்களை பயன்படுத்திக்கொள்ள இன்றியமையாத ஒரு விடயமாகும். அதே சமயம் ஊடகங்களுக்கு பெண்களை கவர்ச்சி பொருளாக பாவனை செய்யாமல் அவர்களது கண்ணியத்திற்கு மதிப்பளித்துஇ  சட்டங்களை வகுத்து உன்னதமான பணியை உலகத்துக்கு எடுத்துக்காட்டுவது ஊடகங்களின் இன்றியமையாத ஒரு பணியாக விளங்குகின்றது.

Leave a Comment