ஆலோசணை சேவை
சுட்டிக்காட்டி அவர்களின் நல்வழிப்படுத்துத முயல்கின்றோம். இதன் அடிப்படையில் பார்க்கின்ற போது பண்டைய காலம் தொட்டு உளவளத்துறையும் வளர்ச்சி அடைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டளவில் உலகில் விஞ்ஞானம் என்பது ஆன்மாவுக்கும் உள்ளத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய அமைப்பு என்ற விரிந்த கருத்து முன்வைக்கப்பட்டது. விசேடமாக வில்லியம் ஜேம்ஸ் என்ற அமெரிக்க உளவியலாளர் முதன்முதலாக உளவியல் என்பது ஒரு வாழ்க்கை விஞ்ஞானம் எனக் குறிப்பிட்டார். ஒருவன் எப்படி சிந்திக்கின்றான் என்ற நிலையினை வைத்து அவனது தனிப்பட்ட நடத்தையை மாற்றியமைக்கலாம் என சுட்டிக்காட்டினார்.இருபதாம் நூற்றாண்டில் நடத்தை உளவியல் அறிஞர் J.D.வொட்சன் என்பவர் உளவியலுக்கு நவீன கொள்கைகள் பலவற்றை சேர்த்தார். மனிதனது உள்ளத்தை விட அவனது நடத்தைக்கு முக்கியத்துவம் அளித்தார். மனிதனின் சிந்தனையை மாற்றாமல் நடத்தையை மாற்றுவது என்பது முடியாத ஒன்று என அறிகை உளவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். சிந்தனை நடத்தையை விட மேம்பட்டது ஒன்று என இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆலோசணை சேவையின் அவசியம்
- தன்னைத் தானே விளங்கிக் கொள்வதற்குரிய சுய விளக்கத்தை ஏற்படுத்தல்.
- நடைமுறை சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருத்தப்பாடு காணுதல்.
- நிகழ்காலம் மற்றும் எதிர்கால நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை இசைவு படுத்திக் கொள்ளுதல்.
- ஆற்றல்களை வெலிக்கொணர்ந்து அவற்றை விருத்தியடைந்து கொள்ளச் செய்தல்.
- சுயமாக சிந்தித்து சுதந்திரமாக சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவுதல்.
- பல்வேறு வகைப்பட்ட மூட நம்பிக்கைகளிலிருந்து தன்னை விடுபட்டு கொள்ளச் செய்தல்.
- மனித வாழ்வின் பெருமதியை உணரச் செய்தல்.
- பல்வேறுபட்ட மனவெழுச்சிகளுக்கு அப்பாற்பட்டு பல முடிவுகளை சிறந்த முறையில் எடுப்பதற்கான திறனை வளர்த்தல்.