உலக வெப்பமயமாதல்

 உலக வெப்பமயமாதல் இன்றைய உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக வழங்குகின்றது. மனிதர்களின் பல்வேறுபட்ட செயற்பாடுகள் புவியின் அழிவுக்கு விட்டுச் செல்வது பெரும் வருத்தத்துக்குரிய விடயமாக தொடங்குகின்றது. இதனை ஒவ்வொரு மனிதனும் விளங்காமல் தமது சுயநலப் போக்குகளினால் பல்வேறு கட்டான சூழ்நிலையில் இன்றைய உலகம் மாறி கொண்டிருக்கின்றது என்பதனை நாம் மறக்க இயலாது. அன்றாடம் நாம் செய்யும் செயற்பாடுகள் உலக வெப்பமயமாதலில் பெரும் பங்கு வைக்கின்றது என்பதனை மனிதன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மறந்து விடுகின்றான். இதனால் எதிர்கால சந்ததியினர் உலகில் நிம்மதியாக வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான சூழ்நிலையை அற்று வருகின்றனர். மனிதனைப் பொறுத்தவரையில் இன்றைய வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வது மாத்திரம் அல்லாமல் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உலகினையும் விட்டு செல்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதில் தவறிழைக்கின்றான் என்பதை நாம் பல்வேறு பட்ட செயற்பாடுகளின் மூலம் உணர்கின்றோம். இருப்பினும் உணர்வுகள் உணர்வுகளாக மாத்திரமே மனித மனதில் தோண்டுவதை தவிர்த்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எவரும் ஆர்வம் காட்டுவதாக இல்லை. இதனால் எதிர்கால சந்ததியினர் இவ்வுலகில் நிரந்தரமான வாழ்வை கொண்டு செல்வதற்கான நிரந்த உலகினை கையளிப்பதில் நாம் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பல்வேறுபட்ட புதிய கண்டுபிடிப்புகள் மனித வாழ்வுக்கு மிகவும் அவசியமான அவசியமாக விளங்கும் அதே வேளையில் பல்வேறு சூழ்நிலைகளில் அவை மனித வாழ்விற்கு கேடு விளைவிப்பவையாக அமைந்து விடுகின்றது. உலக வெப்பமயமாதலில் மிகவும் பெரும் பங்கு வகிப்பது காதலிப்புகளை மனிதன் கண்மூடித்தனமாக மேற்கொள்வதனால் ஆகும். காடுகள் வெறுமனே காடுகளாக மாத்திரம் இன்றி அவை உலக உலகின் இயங்கு நிலைக்கு பெரும் பங்காற்றுகின்றது இதனை பெரும்பாலும் மனிதன் கருத்தில் கொள்ளாது காடுகளை அழிப்பதனை மும்முறமாக மேற்கொள்வதினால் எதிர்கால என நிம்மதி பெருமூச்சு விடுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது கவலைக்குரிய விடயமாக வழங்குகின்றது. இன்றைய வாழ்வை கொண்டு செல்வதற்கு தேவையான விடயங்களை மாத்திரம் கவனத்தில் கொள்ளும் மனிதன் எதிர்கால வாழ்வில் பெரும் அக்கறை காட்டுவதாக விளங்கவில்லை. இதனாலே பெரும் இக்கட்டான சூழ்நிலைகளில் இயற்கையானது மனிதனுக்கு எதிர் நிலையாக செயல்படுகின்றதையும் நாம் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது. நிரந்தரமான நிரந்தரமான வாழ்வினை வாழ்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக எதிர்கால வாழ்க்கையை இங்கு ஒரு விடயத்தில் தொலைத்து விடுகின்றான். இந்நிலையானது எதிர்காலத்தில் மனித சமூகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் அதே வேலை மனித இனத்தின் அழிவில் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதனை மனிதன் உணர்ந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை பேரழிவுகளை சந்திக்க நேரிடப் போகின்றது என்பதனை நினைக்கும் போது மனித சமூகத்திற்கு பெரும் சவாலாக வழங்குவது மனிதனே என்ற நிலை தோன்றுகின்றது. பல்வேறுபட்ட புதிய கண்டுபிடிப்புகள் மனித சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்ற அதேசமயம் அவனது வீழ்ச்சிக்கும் அவை செல்வாக்கு செலுத்துகின்றன என்பதனை அவன் உணர்வதற்கு தவறிவிடுகின்றான்.

ஆரம்ப காலத்தில் மனிதன் இயற்கையோடு இணைந்து இயற்கையான வாழ்க்கை வாழ்ந்த காலகட்டங்களில் இயற்கையானது பெரும்பாலும் மனித வாழ்வில் அழிவுகளை ஏற்படுத்துவதில் அவ்வளவாக செல்வாக்கு செலுத்தியதாக தோன்றவில்லை. ஆனால் தற்காலத்தில் மனிதன் இயற்கையை அழிப்புக்கு உட்படுத்துவதன் ஊடாக இயற்கையின் கோபத்திற்கு ஆளாகுவதனால் பெரும் அழிவுகளை எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது. உலக வெப்பமயமானது மனித செயற்பாடுகளினால் ஏற்பட்ட தாலன்றி இயற்கை காரணிகளால் தோன்றவில்லை. மனிதன் தனது சுயநலத் தேவைகளுக்காக இயற்கை அளித்துக் கொண்டிருக்கும் அதேவேளை எதிர்கால சந்ததியினரின் வாழ்வையும் சேர்த்து அழிவுக்கு உட்படுத்துகின்றான் என்பதனை அவன் உணர்வதற்கு மிக நீண்ட காலம் செல்லும் என்பதை இங்கு கவலைக்குரிய விடயமாகும்.

மனிதனானவன் தனது இருப்புக்கு ஏனையவர்களின் இருப்பில் பெரும்பாலும் கவனம் செலுத்தாத சந்தர்ப்பத்தில் உலக அழிவில் அவன் பெரும் பங்கு வகிக்கின்றான் என்பதனை உணர தவறிவிடுகின்றான்.

உலக வெப்பமயமாதலின் மிகவும் பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது பனிப்பாறைகள் உருகுவதாகும். பனிப்பிரதேசங்கள் உருகுவதனால் உலகில் உள்ள நீர்மட்டங்கள் உயர்வதோடு நிறைய நிலப்பரப்புகள் நீரினுள் உள்வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தோன்றுகின்றது. இன்றைய நவீன காலகட்டத்தை பொறுத்தவரையில் இயந்திரங்களின் பயன்பாட்டிற்கு மனிதன் மிகவும் பழக்கப்படுத்திக் கொண்ட அதே வேலை அவற்றின் பயன்பாடுகளை அதிகமாக இயற்கையின் அழிவிற்கு உட்படுத்துகின்றமை இங்கு கவலைக்குரிய விடயமாகும். மனிதன் மனிதனுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்கள் இன்று நாடுகளுக்கு இடையில் இடம் பெறுகின்றமையினால் பல்வேறுபட்ட இயற்கை காரணிகள் அழிவுக்கு உட்படுகின்றன. பல்வேறு பட்ட உள்நாட்டு யுத்தங்கள், நாடுகளுக்கு இடையிலான யுத்தங்கள் கடத்தல் நிகழ்வுகள் போன்றவற்றால் இயற்கை பல்வேறு அழிவுகளை சந்தித்து வருகின்றது. அவற்றில் மிக முக்கியமாக அணு ஆயுதங்களின் பயன்பாடு உலக அழிவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக வ விளங்குகின்றது. பல்வேறு நாடுகள் தமது நாட்டின் சொத்துக்களையும் தமது நாட்டின் மக்களையும் பாதுகாப்பதாக எண்ணி பல்வேறுபட்ட அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை தயாரித்த வண்ணம் உள்ளன.

சனத்தொகை பெருக்கம் மற்றும் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்தல் போன்ற செயற்பாடுகள் இயற்கையின் கோபத்திற்கு ஆளாக செய்கின்றன. இதனால் இயற்கை தனது கோரத்தாண்டவத்தை பல்வேறு சந்தர்பத்தில் மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்த தவறவில்லை. போட்டிகரமான இவ்வுலகில் வர்த்தக நோக்காக இடம்பெறுகின்ற பல்வேறுபட்டு தொழிற்சாலைகளில் பல்வேறு கழிவுகள் இயற்கையுடன் கலப்பதினாலும் அவற்றால் விடப்படும் நச்சு வாயுக்கள் நமது வளிமண்டத்தில் கலப்பதினாலும் வளிமண்டலம் மாசடைதல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் தோன்றுகின்றன.

மனிதன் வாழ்வதற்கு மிகவும் அவசியமான வழி நீர் நிலம் போன்ற அனைத்து இயற்கை அம்சங்களும் மனிதனால் மாசுபடுத்தப்பட்டு வருவதனால் இயற்கையானது மனிதனின் வாழ்வுக்கு பொருத்தமற்ற ஒரு இடமாக மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை மனிதன் உணர்ந்து கொள்ள தவறுகின்றான். இதனால் இயற்கைக்கு எதிரான பல்வேறு செயல்பாடுகளை மனிதன் அவ்வப்போது முன்னெடுத்து செல்வதில் தவறவில்லை. இதனால் எதிர்காலத்தில் இவ்வுலகானது அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதனை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய போட்டிகரமான உலகில் ஏனைய நாடுகளுடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற நோக்கில் நாசகரமான வேலைகளில் ஈடுபடுகின்ற அதேவேளை நகரமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி என்ற போர்வையில் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு விடயங்களை பல சந்தர்ப்பங்களில் இயற்கைக்கு எதிராக செயல்படுகின்றன என்பதனை நாம் பல்வேறு பட்ட நிகழ்வுகளின் மூலம் உணர்ந்து கொள்கின்றோம்.

இயற்கையை பொறுத்த வரையில் மனிதன் மட்டும் இவ்வுலகில் வாழ்வதாக இல்லை. மனிதனைப் போன்று பல்லாயிரக்கணக்கான அல்லது பல கோடி கணக்கான உயிரினங்கள் எம்முடன் இணைந்து அவற்றின் வாழ்வை கொண்டு செல்கின்றன. இவற்றின் செயற்பாடுகள் மனிதனுடைய செயல்பாடுகளுக்கு எந்த வகையிலும் இடையூறாக அமைந்ததில்லை. இருப்பினும் மனிதனது செயல்பாடுகளானது ஏனைய உயிர்களின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக வழங்குகின்றது என்பது இன்று கவனிக்கத்தக்க விடயமாகும்.

எனவே மனிதன் எதிர்காலத்திலும் நிம்மதியான வாழ்வினை கொண்டு செல்ல வேண்டுமாயின் இயற்கையோடு இணைந்து வாழ்வினை வாழ பழகிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உலக வெப்பமயமாதல் ஆனது எதிர்காலத்தில் உலகம் இருந்ததற்கான அடையாளத்தை அழித்துவிடும் என்பதனை மனிதன் உணர்ந்து கொள்ளும் காலம் இதுவாகும். எனவே இவற்றை கருத்தில் கொண்டு மனிதனுடைய ஒவ்வொரு செயற்பாடுகளையும் இயற்கைக்கு ஆதரவாக செயல்படுத்தும் அதே வேலை இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.

Leave a Comment