கல்வி என்றால் என்ன?
கல்வி என்பது தத்துவவியலாளர்களாலும் கல்வியியலாளர்களாலும் பல்வேறுபட்ட வகையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள ஓர் எண்ணக்கருவாகும். என்பதை வரைவிலக்கணப்படுத்துவது அவ்வளவு எளிதானதொன்றல்ல. கல்வி தொடர்பாகப் பின்வரும் வரைவிலக்கணங்களில் கவனஞ் செலுத்துசு, அந்த வகையில் கல்வி
“எந்தவொரு சந்ததியினரும் பின்பற்றுவதற்காக அல்லது முன்னேறுவதற்காக தமது இளைய சந்ததியினருக்கு கலாசாரத்தை ஒப்படைத்தலே கல்வியாகும்”
ஜோன் ஸ்ரூவட் மில் –
“நுண்மதி, மனவெழுச்சிகள் மற்றும் உடல், உள ரீதியில் முன்னேறியுள்ள மனிதன் மேற்கொள்ளும் சதாகாலச் செயற்பாடே கல்வியாகும்”
ஹேர்மன் ஹொன்
“தாள் வாழும் சமூகத்தில் தனக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய அனுபவங்களை வழங்குவதே கல்வியாகும்”
ஈ.மூவர்
“கல்விக்கும் பிள்ளைக்குமிடையே அண்மிய தொடர்பைக் கட்டியெழுப்புவதே கல்வியாகும். சிலருக்கு அது தத்துவமாகும். வேறு சிலருக்கு அது அறிவைக் கையாளும் ஊடகமாகும். எவ்வாறாயினும் கல்வியென்பது முன்னேற்றமான கலையாகும்”
லெஸ்டர் சுமித்
“பிள்ளைக்குத் தனது சூழலில் வாழ்வதற்குத் தேவையான அனுபவங்களை வழங்குதல் கல்வியாகும்”
ஜோன் டுபி
“யுத்தத்திலும்,சமாதானத்திலும், தனித்தும், பொதுவாகவும் அனைத்துச் செயல்களையும் நீதியாகவும், முன்மாதிரியுடனும் நிறைவேற்றக் கூடிய மனிதனை உருவாக்குவதே கல்வியாகும்”
ஜோன் மில்டன்
“கல்வியென்பது அனுபவங்கள் பற்றிய தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற புதுப்பித்தலாகும். கல்விச் செயலொழுங்கின் இலக்கும் அதுவேயாகும்”
– A Meyor –
“சிறு பராயத்தில் இயற்கையில் வளரும் பிள்ளைக்கு நல்ல பயிற்சியையும் பழக்கவழக்கங்களையும் வழங்கி அபிவிருத்தி செய்தலே கல்வியாகும்”
-பவ்லோ பிரேயர்