கல்விச் சமூகவியல்

கல்விச் சமூகவியலின் இயல்பினையும் அதன் பிரயோகங்களை விளங்கிக் கொளவ் தற்குச் சமூகவியல் பற்றிய அறிவு அவசியமானது. சமூகவியலானது பல்வேறு துறைகளையும் தன்னகத்தே கொண்டு விரிவடையும் பொழுது, கல்விச் சமூகவியலும் அதனுள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. சமூகவியலின் தோற்றத்துக்கு நீண்ட கால வரலாற்றுப் பின்னணி உண்டெனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அது ஒரு தனித்துறையாக அறிமுகமாயிற்று. ஆயினும் கடந்த ஐந்து தசாப்தகாலத்தில் இத்துறையில் ஏற்பட்டுளள் விரிவாக்கமானது, சமூக விஞ்ஞானங்களிடையே சமூகவியலை மிகவும் பிரபல்யமான துறையாக இடம்பெறச் செய்துளள்து. சமூகவியலின் அணுகுமுறைகள் ஆராய்ச்சி முறைகள் மற்றும்

மதிப்பீட்டு முறைகள் ஏனைய சமூக விஞ்ஞானங்களைப் போன்று கல்வித் துறையின் மீதும் பெருமளவில் செல்வாக்கினைச் செலுத்தியுள்ளது. சமூகவியலின் பின்புலத்தினை விளங்கிக் கொண்டு கல்விச் சமூகவியலில் அடங்கும் ஏனைய கூறுகள் பற்றி ஆராய்தல் பயன்மிகுந்ததாக அமையும். 

கல்விக்குச் தத்துவார்த்த மற்றும் உளவியல், அடிப்படைகள் இருப்பது போல சமூகவியல் அடிப்படையும் அத்தியாவசியமானது. கல்விச் செயல்முறை ஒரு சமூகச் செயலாகும் என்பது கல்விச் சமூகவியலின் அடிப்படைக் கருத்தாகும். மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதனால் தனியாட்களுக்கு வழங்கப்படும் கல்வியும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைதல் முக்கியமானது. கல்விச் சமூகவியல் என்றால் என்ன என்பதற்கு முன்வைத்த வரைவிலக்கணங்கள்: 

“தனியாட்களுக்கும், பண்பாட்டுச் சூழலுக்குமிடையில் நிலவும் தொடர்பு பற்றிய கல்வி”    – பிரவுண்

“சமூக நிலைமைகள ; பலவற்றை குறிப்பாக பெறுமதிமிக்க கல்வி நிகழ்ச்சித் திட்டங்களையும் கல்விச் செயற்பாடுகளில் இடம்பெறும் கட்டுப்பாடுகளையும் எடுத்துக் காட்டும் இயல்”   –  காட்டர்  

“சமூகவியல் கோட்பாடுகளின் வினைத்திறனும், செயற்றிறனும் பிரயோகத்தன்மையும் கொண்ட இயல்”   –    ஒட்டாவோ 

“கல்வி நிலையங்களைச் சமூக நிலையங்களாகக் கருதி ஆராயும் அறிவியற் பிரிவே கல்விச் சமூகவியலாகும்” –  குல்ப்

“கல்விப் பிரச்சினைகளுக்குச் சமூகவியலின் அடிப்படையில் விளக்கம் தரும் இயலே கல்விச் சமூகவியலாகும்”   –  பின்னே, ஜெலினி

ஸ்மித் என்பவர்,  சமூகவியலையும், விதிகளையும், முறைகளையும் பல கல்விப் பிரச்சினைகளுக்கு விடை காண, கல்விச் சமூகவியல் (Educational Sociology) பயன்படுத்துகிறது என்று இவ்வியலுக்கு விளக்கம் தருகின்றார். 

தனியாட்களுக்கும் பண்பாட்டுச் சூழலுக்குமிடையில் நிலவும் தொடர்பு பற்றிய கல்வியாகும். 

கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளில் தனி நபர்களுக்கிடையிலான தொடர்பு, சமூகங்களுக்கிடையிலான தொடர்பு, நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பு என்பனவற்றை கற்கும் இயல் கல்விச் சமூவியல் ஆகும். 

பொதுக் கோட்பாடுகள்,  வழக்காறுகள், மரபுகள்என்ப வற்றை கல்விக்காக பயன்படுத்தும் ஒரு இயலாகும்.

கல்விச் செயன்முறையின் தன்மைகள,; இயல்புகள், நடத்தைகள ; என்பவற்றை சமூகத்தினுடைய இயல்புகளோடு மையப்படுத்தி ஆராயும் இயல். 

கல்விச் செயற்பாடுகளை சமூகத்தோடு தொடர்புபடுத்தி ஆராயும் இயல். 

மேலும், கல்விச் சமூகவியல் என்பது பொது நிறுவனங்களும், தனிநபர் அனுபவங்களும் கல்வியையும் அதன் விளைவுகளையும் எவ்வாறு பாதிக்கின்றது என்பது குறித்தான கற்கை நெறியாகும். 

கல்விச் சமூகவியல் ஆய்வுக்கான தேசிய சங்கம் ஆற்றிய பணியாக 1923 இல் “கல்விச் சமூகவியல்” என்ற சஞ்சிகையைக் கூறலாம். 

20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் “கல்விச் சமூகவியல்” என்ற ஆய்வுப் புலத்தை முனைவர் ஆவார்.

ஜே.எம்.கிலேற் என்பார் அறிமுகம் செய்த கல்வியல், சமூகவியல், மெய்யியல், முதலான துறைகளை ஒன்றிணைத்து ஆய்வுகளை மேற்கொளவ் தற்கு அந்த ஆய்வுப்புலம் வழிவகுத்தது. கல்வி பின்வரும் ஆய்வுத் தளங்களிலே சமூகவியலுடன் இணைந்து கொள்கின்றது.. 

1. சமூக அமைப்பும் கல்வியும் 

2. பெரும் சமூகமும் கல்வியும் 

3. குழுக்களும் கல்வியும் 

4. பண்பாடும் கல்வியும்  

5. சமூக நிறுவனங்களும் கல்வியும் 

6. சமூக விழுமியங்களும் கல்வியும் 

7. சமூகப்பாத்திரங்களும் கல்வியும் 

8. சமூக நியமங்களும் கல்வியும் 

9. சமூக உளப்பாங்கும் கல்வியும் 

10. சமூக இடைவினைகளும் கல்வியும் 

11. சமூக முரண்பாடுகளும் கல்வியும் 

12. சமூக மேலாதிக்கமும் கல்வியும் 

13. சமூகக் கட்டுப்பாடும் கல்வியும் 

14. சமூகமயமாக்கலும் கல்வியும் 

 

Leave a Comment