கல்வியியல் அணுகுமுறைகள்
முறைசார்ந்த கல்வியின் நோக்கங்கள், குறிக்கோள்களை தீர்மானித்தல். கலைத்திட்டம்இ கற்றற் சூழல் ஒழுங்கமைப்பைத் தெரிவு செய்தல் மற்றும் அமுல்படுத்தல் போன்ற ஒட்டுமொத்த செயல்முறையின் நெறிப்படுத்தல் நாட்டுக்கு நாடு, ஒரே நாட்டுக்குள்ளும் காலத்துக்குக் காலம் வேறுபடுவதற்கு ஏதுவாய் அமையும் பல்வேறு கல்வியியல் அணுகுமுறைகளை அடையாளம் காட்ட முடியும்.
1. ஆசிரியர் மையக் கல்வி
2. சமூக மையக் கல்வி
3. மாணவர் மையக் கல்வி
4. அபிவிருத்தி மையக் கல்வி
மேற்கூறப்பட்டவாறு காணப்பட்டாலும் இப்பிரவேச முறைகளுக்கிடையே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அன்னியோன்னிய தொடர்புகளைக் காணமுடியும்.
ஆசிரியர் மையக் கல்வி
கற்றல் கற்பித்தல் செயன்முறையைத் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நடைமுறைப்படுத்தல், தீரமானம் எடுத்தல் போன்ற சகல செயற்பாடுகளும் ஆசிரியரால் நெறிப்படுத்தப்படும் முறையானது, ஆசிரியர் மையக் கல்வியாகும். இது சம்பிரதாயக் கல்வி முறையாகும். இங்கு கல்வி என்பது அறிவை வழங்குதல் ஆகும். அறிவை வழங்குவதற்காக ஆசிரியர் கொண்டுள்ள பாட அறிவானது அவராலேயே வழங்கப்படுதல் வேண்டும். விரிவுரை முறை போன்ற ஆசிரியரின் குரலுக்கு பிரதான இடமளிக்கும் கற்பித்தல் முறையே இதுவாகும். இங்கு மாணவர் செயற்பாடற்ற செவிமடுப்போராக மாத்திரம் விளங்குவர். அமைதியான இவ்வகுப்பறையில் செயற்பாடுகளோ கற்றல் வளங்களோ பயன்படுத்தப்படமாட்டாது. மாணவர்களின் பலங்கள் பலவீனங்கள் தொடர்பாக கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. மாணவரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். தூண்டலுக்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கும். இவ்வாசிரியர் மையக் கற்பித்தல் ஆனது கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அன்பார்ந்த ஆசிரியரே உங்களது பாடசாலை ஒரு வைத்தியசாலையாகும். அதன் சிறப்பு யாதெனில் ஆரோக்கியமானவர்களை வைத்துக் கொண்டு நோயாளிகளை வெளியேற்றுதல் ஆகும்”.
மாணவர் மையக் கல்வி
இருபதாம் நூற்றாண்டின் பழைய ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக கல்வியானது மென்மேலும் முன்னேற்றகரபானதாக காணப்பட வேண்டும் என கூறப்பட்டதன் விளைவாக மாணவர் மையக் கல்வி முறை தோற்றம் பெற்றது.குறிப்பாக மேற்படி காலகட்டத்தில் ரூஸோ, பிளேட்டோ, பெஸ்டலோசி, புரோபல், ஜோன்டுபி. மொரூர் போன்ற-தத்துவவியலாளர்களின் கருத்துக்களுடன் பியாஜே. மாஸ்லோஇ சிக்மன் புரொய்ட் போன்ற உளவியலாளர்களின் கருத்துக்களும் சமூக விஞ்ஞானிகளின் கருத்துக்களும் மேற்படி எண்ணக்கருவின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்தது.
மாணவர் மையக் கல்வியின் பண்புகள்
1. மாணவரை மையமாகக் கொண்டது.
2. மாணவரின் தேவைகள் , திறன்கள், இயலுமைகள், விருப்புக்களை கருத்திற் கொண்டது
3. கற்பித்தலை விட கற்றல் முக்கியத்துவமானது.
4. மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டது
5. பல்வேறு கற்றல் முறைகளைப் பாவித்தல்.
6. கற்றல் சூழல் பல்வேறுபட்டிருத்தல.
7. வார்த்தைகளால் கற்பிப்பதை விட செயல்மூலம் கற்பித்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.
8. ஆசிரியர் மாணவர் தொடர்பு உயர்ந்த மட்டத்தில் காணப்படல்.
மாணவர் மையக் கல்வியைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தத்துவவியலாளர்களின் கருத்துக்கள்:
‘பிள்ளை ஒரு சிறிய மனிதன் அல்ல. அவன் காண்பது, சிந்திப்பது, உணர்வது, செயல்படுவது. வயதுவந்தோரை விட வேறுபட்டதாகும்’.
(ரூசோ)
‘பிள்ளையின் ஆசைகளுக்கும் திறன்களுக்கும் ஏற்ப கற்பித்தல் ஒழுங்கு படுத்தப்படல் வேண்டும்’.
(பெஸ்டலோசி
பிள்ளைகள் விளையாட்டின் மீது காட்டும் பிடிப்பை கற்பித்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’
(புரோபல்
வார்த்தைகளால் கற்பிப்பதை விட அங்கங்களி1ன் மூலம் கற்பதற்கு இடமளிக்க வேண்டும். இயற்கையே சிறந்த ஆசிரியராகும்.
(கொமினியஸ்)
‘கற்றலுக்காக தூண்டப்படுவதற்கு மாணவர்களிடையே செயற்பாடுகளின் மீது பிடிப்பை ஏற்படுத்துதல் வேண்டும்’.
(ஜோன்டுயீ)
‘மாணவருக்குச் சுயமாகக் கற்பதற்குத் தேவையான சுதந்திரமும் சூழலும் உருவாக்கப்படல் வேண்டும்’.
(மொன்டிசூரி)
சமூகமையக் கல்வி
சமூகத்தேவைகள், சமூக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டு கல்வியை ஒழுங்கமைத்தலும், நடைமுறைப்படுத்தலும் சமூக மையக் கல்வியாகும்.
கிரேக்கத் தத்துவலாளர்களின் கருத்துப்படி சமூகமானது மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. மனிதர்களுக்குச் சுகமாக வாழ வேண்டுமாயின்இ மனிதனால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாத்தல்இ நடாத்திச் செல்லுதலுடன் முரண்பாடுகளின்றி சமாதானமான முறையில் வாழ்தல் வேண்டும். இதன் பொருட்டு சுயநலத்திற்குப் பதிலாக பொதுநலனுடன் ஒன்றிணைந்து சமூகத்தை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
- கல்வியை ஒரு முதலீடாகக் கருதிச் செயற்படல்.
- மனிதனின் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துதல்.
- இவற்றின் மூலம் மனிதனது தேவைகளும் கருத்தில் கொள்ளப்படும்.
- உலகக் கிராமம் எனும் எண்ணக்கருவின் மூலம் இது பரவியுள்ளது.
- கல்வியானது நுகர்வு எண்ணக்கருவிலிருந்து விலகுதல்.
- கல்வியின் மூலம் மனிதனின் தொழிற் திறமையை அதிகரித்தல் உற்பத்தித் திறன் விருத்தி வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படல்
- இதன் போது தனி நபரின் நோக்கத்துடன் சமூக நோக்கமும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.