கல்வி சமூகவியலானது, சமூக உறவுகள்,சமூக அடுக்கமைவு இவை பற்றிய மனபாங்குகள் கல்வி நிறுவனங்களிடையே நிகழும் உளப்பாங்குகள் சார்ந்த ஒழுங்குத்துறைகள், ஆசிரிய மாணவ உறவுகள் என்பனவற்றில் செல்வாக்கு செலுத்துகின்றது.இதன் முக்கியத்துவத்தினை நோக்குமிடத்து, சமூகத்தின் ஆசிரியர் பங்கினை தெளிவாக்கி அதனை மேலும் முக்கியமானதாக உயர்த்துதல், ஆசிரிய மாணவர்களின் சமூக விளைவுகளை உணர்ந்து கற்றலை ஊக்குவித்தல்.ஆகியவற்றிற்கு அவசியமானதாக காணப்படுகின்றது
இவற்றிற்கு மேலாக பாடசாலை அமைந்திருக்கும் சமூதாய தேவைகளை உணர்தல், பாடசாலை பிற சமூக நிறுவனங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பினை உருவாக்கல், மாணவர்களிடையே ஜனநாயக பண்பு வளர உதவுதல், மற்றும் காலத்திட்டத்தினை பயன்மிக்கதாக மாற்றியமைத்து இதனூடாக சமூதாய பாடசாலை என்பதன் வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற விடயங்களிலும் செல்வாக்கு செலுத்துகிறது.
கல்வி சமூகவியலானது தனியார், குடும்பம் என்ற ரீதியிலும் தொடர்வதை நாம் காணலாம். அதாவது தனியாரை சமூகத்திற்கு பொருத்தமான ஆக்கத்திறனுள்ள முழுமையான மனிதனாக வடிவமைக்கின்றது. இது பற்றி நோக்கும் போது பள்ளியில் வளங்கப்படும் கல்வி மூலம் தனி ஓரு பிள்ளையின் வாழ்கையில் முதல் தடவையாக சகபாடி குழுவினருடன் வருவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது,மேலும் குடும்பம் என்ற ரிPதியில், பண்டைய காலத்தில் குடும்பங்களை கல்வி நிலையங்களாகவும் பணியாற்றிய பெற்றோர்கள் ஆசிரியர்களாகவும் காணப்பட்டணர். ஒருவரது மனவெழுச்சியின் போது அவனில் தாக்கம் செலுத்தும் முதலிடம் பாடசாலை ஆகும்.
குழந்தையின் முதல் பாடசாலையாக குடும்பம் விளங்குவதால் பழக்கவழக்கங்களை குடும்பத்திலேயே கற்றுக்கொள்கின்றான். அந்த வகையில் குடும்பமானது கல்வி சமூகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது எனலாம். இன்றைய காலத்திலும் எமது சமூகத்தில் கல்வி புலன்களிலும் மனித பண்புகள், நெறிமுறைகள், மனித நேயம் இல்லாது எமது சமூகம் பிறழ்வான நடத்தைக்கொண்டதாக வளர்வதைக் காணலாம்.ஆனால் கல்வியினால் ஏற்படும் நன்மைகளை கண்டு சமூகமானது முரண்பாடற்ற ஒழுங்கான சமூகமாக திகழ்கின்றமைக்கு கல்வி சமூகவியல் உதவியாக அமைவதைக் காணமுடிகின்றது.
மேலும் ஆசிரியர்களுக்கு கல்வி சமூகவியலானது முக்கியத்துவம் வாயந்த ஒன்றாக உள்ளது. அதாவது, கல்வி முறைமையானது சமூக அமைப்பினை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது எனலாம். கல்வி அமைப்பு கற்பிக்கும் பாடங்கள், கற்பித்தல் முறைகள், கல்வியின் இறுதி இலக்கு என்பதும் சமூக அமைப்பு அதன் குறிக்கோள், நோக்கங்கள் என்பனவற்றுடன் இணைந்தவை. இதனால் சமூகம் பயன்மிக்க கல்வியினை உருவாக்கவும், சமூக வாழ்கையில் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் உதவியாக அமைகிறது. சமூகத்தில் காணப்படும் பல்வேறு விடயங்களை அறிந்துக்கொள்வதற்கான முறையான அறிவை வழங்குவதனூடாகவும், அறிவியல் ரீதியாக சமூக வாழ்வின் பல்வேறு அம்சங்களை புரிந்துக்கொள்ளவும், விளங்கிக் கொள்ளவும் அவசியமிக்கதாக கல்வி சமூகவியல் அமைகிறது.
மேலும் , பண்பாடு சார்ந்த விடயங்கள் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்பனவற்றின் அடிப்படையில் விளங்கிக்கொள்ளவும், சமூகத்தில் புரிந்துணர்வு உடைய மனிதர்களை உருவாக்குவதற்கான காரணியாகவும் அமைகிறது. எனவே கல்விசமூகவியல் இன்று ஆசிரிய கல்வித்துறையில் பிரபல்யம் பெற்ற கற்கைத் துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் கல்வி ஊடாக சமூக மாற்றமும், சமூக மாற்றத்தின் ஊடாக கல்வியில் மாற்றம் நிகழ்வது தவிர்க்க இயலாதவை எனவே இம்மாற்றங்களை உணர்ந்து செயலாற்ற ஆசிரியருக்கு கல்வி சமூகவியல் அறிவு அவசியமாகும். இதனூடாக கல்விச் சமூகவியலானது முக்கியத்துவமிக்க ஒரு பாடமாக விளங்குகின்றது.