நோய்களில் பாதிப்புட்டோர்களுக்கும் வாழ்க்கை வசதிகள் அற்றோர்களுக்கும் விஞ்ஞானம் வழிகாட்டியாக அமைந்தது. எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்த அம்மைப்பால் ஏற்றும் பணியானது கொடுமையான அம்மை நோயிலிருந்து மனித குலத்தை காப்பாற்ற உதவியது. தாமஸ் ஆல்வா எடிசன் கண்டறிந்த மின்சாரமானது மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு உதவியது. லூயி பாஸ்டர் முன்மொழி தொடர்பான ஆய்வு, மேரி கியூரி அம்மையாரை ரேடியோ தொடர்பான ஆய்வு என்பன மக்கள் சமூகத்திற்கு கிடைக்க அருங் கொடைகள் என்று கூறவேண்டும். மருத்துவத்துறையில் விஞ்ஞானத்தின் விளைவுகளை நோக்கும் போது தொற்று நோய்கள் பல தடுக்கப்பட்டன. குழந்தைகளுக்கு முன்கூட்டியே மருந்து ஏற்றுதல், போலியோ நோய் தடுப்பூசி, சொட்டு மருந்து அளித்தல் என்பவற்றை குறிப்பிடலாம்.
விஞ்ஞஞானா கண்டுபிடிப்புகளில் ஒன்றான மின்சாரம் இன்று சகல தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகின்றது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்ட தொழில்நுட்பம் இன்று சமூக முன்னேற்றத்திற்கு தொடர்பாடல் துறையிலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மக்களுக்கு இன்று பெரிதும் பயன்படுகின்றன. தொடர்பு சாதனங்களில் அதிகரிப்பும் விஞ்ஞானத்தின் விளைவு எனலாம். தொலைபேசி, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, கணினி, இணையம், தொலைநகல், வீடியோ சாதனங்கள் கல்வி வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கும் சமூக பயன்பாட்டிற்கும் உதவுகின்றன.
போக்குவரத்து துறையில் விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் உச்சகட்ட பயன்பாடு இன்று மக்கள் சமூகம் பயன்படுத்தி வருவதை காணலாம். நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக நீராவி கப்பல், நீராவி புகையிதம் என்பவற்றின் மூலம் பயணம் செய்த மக்கள் இன்று அதன் துரித வளர்ச்சியினால் அதிவேகமாக செல்லும் சுபர்சோனிக் விமானங்களில் பயணம் செய்யும் வாய்ப்பைக் கிட்டி உள்ளது. இவையெல்லாம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் பயனே ஆகும். மருத்துவத்துறையில் இன்று மகத்தான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கும் விஞ்ஞான வளர்ச்சியே மூலக்காரம் எனலாம். இருதய மாற்று சிகிச்சை சிறுநீரகம் மாற்றுதல் ஸ்கேனர் மூலம் நோய்களை கண்டறிதல் போன்ற பல்வேறு பரிசோதனைகளை இன்று விஞ்ஞான வளர்ச்சியின் ஊடாக நாம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் போக்குகள் உலகத்தின் பல்வேறு வகையான வரவேற்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்ற பொழுதிலும் மனித குலத்தின் பெரும் அழிவுக்கும் இட்டுச் செல்கின்றது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. பலர் விஞ்ஞானத்தின் வளர்ச்சிகளை பல்வேறு வகையான தீய செயல்களுக்கு பயன்படுத்துகின்றமை நாம் இன்று உலகத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது குறிப்பாக கூறின் பல்வேறு நாடுகளில் இன்று பல அச்சுறுத்தல்களை வழங்கி வரும் தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் வல்லரசு ஆதிகத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல அரசுகள் அணு ஆயுத உற்பத்திகளை தொடர்ந்து மேற்கொள்கின்றமை, போன்ற பல்வேறு காரணங்களை நாம் குறிப்பிடலாம். அதாவது இன்று மருத்துவத்துறையை பொறுத்தவரையில் பல வரவேற்கத்தக மாற்றங்களை விஞ்ஞானம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் பல உயிர்கள் இன்றும் பல்வேறு நோய் நிலைமைகளை சவால்களை எதிர்கொண்டு அவற்றை வெற்றிக்கொண்டு மீண்டும் உயிருடன் வாழ்வதற்கு விஞ்ஞானம் எனக்கு வழி சமைத்து தந்திருக்கின்றது. இருப்பினும் பல பல வைத்தியர்களை பொறுத்தவரையில் விஞ்ஞானத்தின் மருத்துவ ரீதியான அறிவை பயன்படுத்தி மக்களின் பல உடல் பாகங்களைத் திருடி விற்பனை செய்யும் நிகழ்வுகளும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனால் விஞ்ஞான வளர்ச்சியின் போக்குகள் எதிர்காலத்திலும் மனித சமுதாயத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் அமையும் என்பதை நாம் ஏற்றுகிக்கொள்ள வேண்டும். இதற்கு எதிராக பல்வேறு வகையில் மக்கள் தமது எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணமே இருந்து வருகின்றனர். சுருங்கக் கூறின் இன்று மக்கள் சமூகத்தின் மீது பிரிக்க முடியாத வகையில் செல்வாக்கு செலுத்துகின்றது இந்த விஞ்ஞான வளர்ச்சி. இதன் மூலம் மக்கள் பல வகையிலும் நன்மைகளை அனுபவிக்கின்ற போதிலும் பல தீமைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி எதிர்காலம் மக்கள் சமூகத்திற்கு உயர்ந்த பயன்களை வழங்கும் என்பதை நாம் எதிர்பார்ப்பதுடன் அவை பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாகவும் அமையலாம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.