21ம் நூற்றாண்டுக் கல்வி

 21ம் நூற்றாண்டுக் கல்வி (Education to 21st century Education)

யுனெஸ்கோ அறிக்கை 21ம் நூற்றாண்டுக்கான கல்வியை மீளசிந்திக்க வைக்கிறது யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார ஒழுங்கமைப்பு) 21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றி மீளச்சிந்திக்க வைத்தலை மேம்படுத்தி வருகிறது வேகமாக மாற்றத்துக்குள்ளாகி வரும் தொழிலிநுட்பம் மற்றும் சமூகத்துறைகள் என்பனவற்றிற்கு ஏற்ப தனியாட்களுக்குப் புதிய தேர்ச்சிகளையும் மற்றும் திறன்களையும் வழங்கி அவர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ள காரணத்தால் கல்வியைப் பற்றி மீளசிந்திக்கவைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

”21ம் நூற்றாண்டில் கல்வி எனும் தலைப்பிலான யுனெஸ்கோவின் அறிக்கை, பலமான ஆசார அடிப்படைகளுடன் நுண்ணாய்வுச் சிந்தனை, ஆக்கத்திறன், பிரச்சினைத் தீர்த்தல், மற்றும் இணைந்து செயற்படும் திறன்களை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக்காட்டுகிறது. மேலும், புலமைசார் அறிவுக்கு மேலதிகமாக கலாசாரங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, பல்வகைத் தன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் பொறுப்புள்ள பிரஜை என்பனவற்றுக்கான கல்வி என்ற விடயமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவரின் பின்னணி மற்றும் சமூகப் பொருளாதார அந்தஸ்து என்பனவற்றைக் கவனத்தில் கொள்ளாது, சகலருக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கு ஏற்றதும் கல்வியில் உட்படுத்தல் மற்றும் கல்வியில் சமசந்தர்ப்பத்தை வழங்கும் ஒரு கல்வி முறைமை அவசியம் என்பதையும் இந்த அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது. 21ம் நூற்றாண்டுத் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கான அனுசரணை மற்றும் ஆதரவு வழங்கும் பொருட்டு கல்வியில் தொழில்நுட்பத்தையும், புத்தாக்க மற்றும் உயிரோட்டமுள்ள கற்பித்தல் நுட்ப முறைகளையும் பயன்படுத்துதலை அதிகமாக வலியுறுத்துகிறது.

ஒட்டுமொத்தமாக, 21ம் நூற்றாண்டுக் கல்விக்கான கல்வியின் மீதான யுனெஸ்கோவின் அறிக்கை வெறுமனே தனியாளின் புலமை விருத்திக்கான கல்வியை வழங்குவதைவிட நிலைமாற்று மற்றும் கல்வியில் உட்படுத்தல் அணுகுமுறையுடன் ஒரு பூரணமான மனிதனை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்குதலை வலியுறுத்துகிறது.

21ம் நூற்றாண்டுக்கான கல்வி (யுனெஸ்கோ)

நவீன உலகின் வாய்ப்புக்களுக்கும் மற்றும் சவால்களுக்கும் தனியாட்களைத் தயார்படுத்தும் ஒரு பூரணமான மற்றும் உட்படுத்தல் கல்வி அணுகுமுறையை அபிவிருத்தி செய்தலையே 21ம் நூற்றாண்டுக்கான கல்வி என யுனெஸ்கோ தனது ஆரம்பித்தலை மேற்கொண்டுள்ளது. இந்த ஆரம்பமானது கற்றலின் நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது.

1.அறிவதற்காகக் கற்றல்: அடிப்படை அறிவையும் திறன்களையும் பெறுதலை வலியுறுத்துதல்

2. செயல்புரிவதற்காகக் கற்றல்: யதார்த்தமான உலகில் அறிவைப் பிரயோகிப்பதற்கான பிரயோகத் திறன்களையும் ஆற்றல்களையும் அபிவிருத்தி செய்தல் மீதான வலியுறுத்தல்கள்

3. சேர்ந்து வாழக் கற்றல்: பல்வகை கலாசாரங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, பல்லினத் தன்மைக்கு மதிப்பளித்தல் என்பனவற்றை மேம்படுத்ததல்

4. வாழக் கற்றல்: சுய மற்றும் சமூக அபிவிருத்தி, நுண்ணாய்வுச் சிந்தனை,ஆக்கத்திறன் மற்றும் மனவெழுச்சி புத்திக்கூர்மை என்பனவற்றை ஊக்குவித்தல் இந்த முன்வைத்தலானது, கல்வியில் தொழில்நுட்பம், அதிகளவிலான நிலைத்திரு தன்மை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் கோடிட்டுக்காட்டுகிறது. சமூக. பொருளாதார, அல்லது காலாசார பின்னணிகள் கவனத்தில்கொள்ளப்படாது, கல்வியானது சகலரையும் உட்படுத்தியதாகவும் மற்றும் அனைவரும் இலகுவில் அவற்றைப் பெறக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. சுருக்கமாக கூறின், 21ம் நூற்றாண்டின் கல்வியின் ஆரம்பமானது கல்வி பொருத்தப்பாடுடையதாகவும், நிலைமாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாயும், தனிப்பட்டவர்களையும் நவீன உலகின் சமூகத்தையும் வலுவூட்டக்கூடியதாகவும் அமைய வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டது.

21ம் நூற்றாண்டு கல்வியின் மீதான யுனெஸ்கோவின் அறிக்கை

எண்மான யுகத்தில் கல்வியின் பரப்பை மாற்றுவதற்கும் கற்பவர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்துவதற்கும் அதிக அழுத்தம் கொடுத்து 21ம் நூற்றாண்டுக் கல்விக்கான அறிக்கைகள் பலவற்றை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. “அனைவருக்கும் கல்விக்கான பூகோள கண்காணிப்பு அறிக்கை” யுனெஸ்கோவின் அறிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையாகும். அந்த அறிக்கை கல்விக்கு மாணவர்களை உள்வாங்கல் பற்றிய பூகோள இலக்குகளை அடைதலின் முன்னேற்றத்தைப் பற்றி ஒரு விரிவான மீளாய்வை வழங்குகிறது. 21ம் நூற்றாண்டுக் கல்வியின் தரத்தையும் மற்றும் சகல கற்போனும் எண்மான யுக (னுபைவையட யபந) பொருளாதாரத்தில் பங்குகொள்ளவும்இ எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டிவரும் சவால்களை வெற்றிகொள்ளவும் தேவையான அறிவும் திறன்களும் கிடைக்கப்படுவதை உறுதிப்படுத்துக் கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்த அறிக்கை மையப்படுத்திக் காட்டுகிறது

யுனெஸ்கோவின் மற்றுமோர் அறிக்கை 2021ல் வெளியிடப்பட்ட எதிர்காலக் கல்வியும் திறன்களும் பற்றிய யுனெஸ்கோவின் பூகோள அறிக்கையாகும்” வேகமாக மாற்றம் பெற்று வரும் உயர் தொழில்நுட்ப சூழமைவில் மற்றும் உலகில் தொழில்களின் தன்மையில் ஏற்படும் மாற்றம் என்பனவற்றுக்கு எற்ப எதிர்காலக் கல்வி மற்றும் திறன்கள் பற்றி இந்த அறிக்கை ஆராய்வொன்றை மேற்கொள்கிறது. எதிர்வரும் வருடங்களில் அதிகளவு கேள்வி ஏற்படும் 3திறன்கள் மற்றும் கல்வி மற்றும் பயிற்சி முறைகளில் அவற்றின் தாக்கம் பற்றியும் தனது பார்வையை செலுத்துகிறது.

கற்பேர் 21ம் நூற்றாண்டில் தனியாட்கள் என்ற வகையில் வெற்றிகரமாக செயற்படுவதற்குத் தேவையான அறிவையும் திறன்களையும் கொண்டவர்களாக அவர்களைத் தயார் செய்வதற்குக் கல்வித் துறையின் சகல உரித்தாளர்களுக்கும், மற்றும் கொள்கை ஆக்குவோர்களுக்கும், கல்வியியலாளர்களுக்கும் மற்றும் கற்போனுக்கும் மேற்குறித்த இரண்டு அறிக்கைகளும் பெறுமதியான விளக்கங்களையும் விதந்துரைகளையும் முன்வைத்துள்ளன.

பூகோளரீதியாக அணிதிரட்டப்படும் கல்வி (Globally Mobilized Education)

பூகோளரீதியாக அணிதிரட்டப்படும் கல்வி எனக் கருதப்படுவது உலகெங்கும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக தொழில்நுட்பத்தையும் எண்மான வளங்களையும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்தல் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு வளங்களை வழங்குதல் என்பதையே குறித்து நிற்கிறது. இது நிகழ்நிலை பாடநெறிகள், மெய்நிகர் வகுப்பறைகள் மற்றும் எங்கிருந்தேனும் கல்வி பெறும் இணைய இணைப்புடைய எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்துதலை உள்ளடக்கலாம். பூகோளரீதியாக அணிதிரட்டப்படும் கல்வியானது மரபுரீதியாக கல்வியைப் பெறமுடியாதுள்ள தனியாட்கள் தமது இடைவெளியை குறைத்துக்கொள்ளவும், அநேகமானோர் கல்வியைப் பெற்றுக்கொள்ளச் செய்தலையும், சமசந்தர்ப்பம், மற்றும் உட்படுத்தல் கல்வி முறை என்பனவற்றை சாத்தியமாக்குதலையும் நோக்கமாகக் கொண்டது. தொழிநுட்ப எழுச்சியுடன், பூகோளரீதியாக அணிதிரட்டப்பட்ட கல்வியானது உலகில் விசாலமான எண்ணிக்கையானோர் கற்கவும். திறன்களை விருத்திசெய்துகொள்ளவும் புதிய வாய்ப்புகளை வழங்கும் ஆற்றல்களையும் கொண்டுள்ளது.

Leave a Comment