21ம் நூற்றாண்டுத் திறன்கள்

 21ம் நூற்றாண்டுத் திறன்கள்

21ம் நூற்றாண்டில் தனியாட்கள் வெற்றிகரமாக வாழ்வதற்கு அவசியமானதெனக் கருதப்படும் திறன்களதும் தேர்ச்சிகளினதும் தொகுதியே 21ம் நூற்றாண்டுத் திறன்கள் என அழைக்கப்படுகிறது.. இந்த திறன்கள் மரபுரீ திலான புலமைசார் அறிவைப் பெறுதலுக்கு அப்பால் சென்று நுண்ணாய்வுச் சிந்தனைஇ பிரச்சினை தீர்த்தல் திறன்கள்இ தொடர்பாடல்இ இணைந்து பணியாற்றல் எண்மான அறிவு மற்றும் ஆக்கத்திறன்கள் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த திறன்கள் ஒவ்வொன்றும் பற்றிய மேலும் விளக்கங்கள் கீழே தரப்படுகின்றது.

1. நுண்ணாய்வுச் சிந்தனை: தகவல்களை பகுப்பாய்வு செய்யும்இ சான்றுகளை மதிப்பிடும் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானம் எடுத்தலுக்கான ஆற்றல்கள்.

2. பிரச்சினைத் தீர்த்தல்: ஆக்கத்திறன்களையும் புத்தாக்கச் சிந்தனையையும் பயன்படுத்தி சிக்கலான பிரச்சினைகளை இனங்காணலும் அவற்றைத் தீர்த்தலும்

3. தொடர்பாடல்: வாய்மொழி மூலமாகவும் எழுத்து வடிவிலும் தகவல்களையும் கருத்துக்களையும் விளைதிறனாக மற்றவர்களுக்கு மாற்றும் அல்லது கொண்டுசெல்லும் ஆற்றல்

4. இணைந்து செயற்படல்: பல்வேறுபட்ட நோக்குகளை விளங்கிக்கொண்டு அதற்கு மதிப்பளித்தல் உட்பட பொது இலக்கை அடைவதற்காக மற்றவர்களுடன் இணைந்து விளைதிறனாக வேலைசெய்தல்

5. எண்மான எழுத்தறிவு: பல்வேறுபட்ட எண்மான கருவிகளையும் தளங்களையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற அறிவு உட்பட தொழிநுட்பத்தை விளைதிறனாக பயன்படுத்தும் ஆற்றல்

6.ஆக்கத்திறன்: புதிய கருத்துகளைஇ முன்நோக்குகளை மற்றும் தீர்வுகளை தோற்றுவிக்கும்ஆற்றல்

7. ஏற்புடைத்தாதல் அல்லது இசைவாக்கம் அல்லது தழுவுதல்: மாறும் நிலைமைகளுக்கு ஏற்ப தம்மை சரிசெய்து கொள்ளல்இ நெகிழ்வுடையவராயிருத்தல்இ மற்றும் புதிய கருத்துகளை வரவேற்றல்

8.தொடக்குதல்: தலைமைத்துவம் வழங்க இயலுமையுடையவராயிருத்தல்இ செயலுக்கமுடையவராய் இருத்தல்இ மற்றும் சொந்தக் கற்றலுக்கும் அபிவிருத்திக்கும் பொறுப்பாயிருத்தல்சொந்த வாழ்விலும் தொழில் சூழமைவிலும் வெற்றிபெறுவதற்குத் தேவையானதும் பொருத்தமானதுமான திறன்களாக இவை கருதப்படுவதால் இந்தத் திறன்கள் மிக முக்கியமான திறன்களாகக் கருதப்படுகின்றன். வேகமாக மாற்றமடைந்து வரும் மற்றும் அதிகரித்தளவிலான சிக்கலான 21ம் நூற்றாண்டில் தனியாட்கள் இந்த திறன்களை அபிவிருத்தி செய்துகொள்வதன் மூலம். தம்மை நன்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்ககூடியதாக இருக்கும்.

21ம் நூற்றாண்டு கற்றல் திறன்கள் பங்குடமை 21 அறிக்கை

21ம் நூற்றாண்டு கற்றல் திறன்கள் பங்குடமை (P21) ஒழுங்கமைப்பு, கல்வியில் 21ம் நூற்றாண்டுத் திறன்களை ஊக்குவிப்பதற்காக பணியாற்றும் ஒழுங்கமைப்பாகும். 21ம் நூற்றாண்டு கற்றலுக்கான P21 சட்டகத்தின்படிஇ நான்கு பிரதான 21ம் நூற்றாண்டு கற்றல் துறைகள் உள்ளன. மையப் பாடங்கள்இ கற்றல் மற்றும் புத்தாக்கத் திறன்கள் தகவல்இ ஊடகம் மற்றும் தொழிநுட்பத் திறன்கள் மற்றும் வாழ்க்கையும் தொழில் தேர்ச்சிகளும் ஆகும்.

1. மையப் பாடங்கள்: ஆங்கிலம் அல்லது தாய்மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் வரலாறு உட்பட்ட மரபு ரீதியிலான பாடங்கள்.

2. கற்றலும் புத்தாக்கத் திறன்களும்: இந்த துறையானது நுண்ணாய்வுச் சிந்தனைஇ பிரச்சினை தீர்த்தல், தொடர்பாடல், இணைந்து பணியாற்றல் மற்றும் ஆக்கத்திறன்கள் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது.

3. தகவல், ஊடகம் மற்றும் தொழிநுட்பத் திறன்கள்: இந்த துறையானது எண்மான எழுத்தறிவு தகவல் எழுத்தறிவுஇ கற்றலுக்கும் தொடர்பாடலுக்கும் தகவல் தொழிநுட்பத்தை விளைதிறனாக பயன்படுத்தும் ஆற்றல்கள் என்பனவற்றை உள்ளடக்கும்

4. வாழ்க்கை மற்றும் தொழில் திறன்கள்: அது ஏற்புடைதாகுதல் அல்லது தழுவுதல், தொடக்குதல், மற்றும் சமூகமும் பல்வகை கலாசார திறன்கள் என்பனவற்றை உள்ளடக்குகிறது.

P21 சட்கத்தின்படி மாணவர்கள் 21ம் நூற்றாண்டில் வெற்றிகரமான வாழ்க்கை ஒன்றை கொண்டு நடாத்துவதற்குத் தேவையான திறன்களுடையவர்களாக ஆயத்தம் செய்வதற்கு ஒன்றிலொன்று தங்கியிருக்கும் மற்றும் அத்தியாவசியமான நான்கு துறைகளும் இவை ஆகும். இந்த திறன்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் வேகமாக மாற்றமடைந்து வரும் மற்றும் அதிகரித்தளவிலான சிக்கலான 21ம் நூற்றாண்டில் தனியாட்கள் தம்மை நன்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்ககூடியதாக இருக்கும்.

சுருக்கமாகக் கூறின், 21ம் நூற்றாண்டில் வெற்றிகரமாக வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கு மரபு ரீதியிலான புலமைசார் பாட அறிவை வழங்குவதற்கும் அப்பால் சென்று மாணவர்களுக்கு இங்கு காட்டப்படும் 21ம் நூற்றாண்டுத் திறன்களையும் தேர்ச்சிகளையும் கல்வியினூடாக வழங்குதல் வேண்டும்.

Leave a Comment