21ம் நூற்றாண்டு எழுத்தறிவுத் திறன்கள்

21ம் நூற்றாண்டு எழுத்தறிவுத் திறன்கள்
வெறுமனே வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்ற விடயங்களுக்கு மட்டுப்படாமல் அதற்கு அப்பால் சென்று 21ம் நூற்றாண்டு எழுத்தறிவுத் திறன்கள் விரிந்த அளவில்இ மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சிகளைத் தொகுத்துள்ளது. இன்றய உலகில் அத்தியாவசிய எழுத்தறிவுத் திறன்கள் எனக் கருதப்படும் திறன்கள் பின்வருமாறு தரப்படுகிறது:
1. தகவல் எழுத்தறிவு: நூல்கள், கட்டுரைகள் மற்றும் எண்மான ஊடகங்கள் போன்ற பல்வேறுபட்ட மூலங்களிலிருந்து தகவல்களை கண்டுபிடிக்கவும், பெறவும், மதிப்பிடவும் மற்றும் அவற்றை பயன்படுத்தவும் தேவையான ஆற்றல்கள்
2. எண்மான  எழுத்தறிவு: கணிணிஇ ஸ்மாரட் கைத்தொலைபேசி,  இணையத்தள இணைப்புகள், போன்ற தொழிநுட்பத்தைப் பயன்படுத்தவும் தொடர்பாடல்களை மேற்கொள்ளவும், தகவல்களைப் பெறவும் உள்ளடக்கங்களை உருவாக்கவும் உள்ள ஆற்றல்கள் எண்மான எழுத்தறிவாகும்
3. ஊடக எழுத்தறிவு: விளம்பரங்கள், செய்திகள் மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு வகைப்பட்ட வடிவங்களிலான ஊடகங்களை விளங்கிக் கொள்ளவும் மற்றும் பகுப்பாய்வு செய்யவும் ஒருவருக்கு இருக்க வேண்டிய ஆற்றல்கள்
4.நுண்ணாய்வு சிந்தித்தலுக்கான எழுத்தறிவுத் திறன்: பதிவுகளை வாசிக்கவும் பக்கச்சார்பையும் முன்னோக்கையும் மதிப்பிடவும், வாதிடவும் மற்றும் ஆதாரங்களை பகுப்பாயவும் தேவையான திறன்கள் இதுவாகும்.
5. விஞ்ஞான எழுத்தறிவு: நாளாந்த வாழ்வில் விஞ்ஞான எண்ணக்கருக்களையும் முறைகளையும் விளங்கிக்கொண்டு பிரயோகிக்கும் திறன்கள் இவையாகும்.
6. நிதி எழுத்தறிவு: வரவு செலவுத் திட்டமிடல் முதலீடு செய்தல் கடன்களை முகாமை செய்தல் உட்பட நிதி விவகாரங்களில் தகவல்களுடன் தீர்மானமெடுத்தல் மற்றும் நிதியை முகாமை செய்தல் போன்றனவற்றுக்குத் தேவையான திறன்கள்
7. கலாசார எழுத்தறிவு: தனது சொந்த மற்றும் மற்றவர்களது கலாசார மற்றும் பராம்பரிய மரபுரிமைகளை விளங்கிக் கொள்ளும் மற்றும் போற்றி ஆதரவளிக்கும் ஆற்றல்
இந்த திறன்கள் ஒன்றிலொன்று சார்ந்திருப்பவையும் தொடர்புள்ளவையுமாகும். அத்துடன் இன்றுள்ள வேகமாக மற்றமடைந்து வரும் தொழிநுட்பத்தால் இயக்கப்படும் உலகிற்கு மிக மிக அத்தியாவசியமானவைகளாகும்.
இன்றைய எண்மான உலகில் மாணவர்கள் வெற்றிகரமான வாழ்க்கை ஒன்றை கொண்டு நடாத்துவதற்குத் தேவையான 21ம் நூற்றாண்டுத் திறன்களை அவர்கள் அபிவிருத்தி செய்துகொள்வதற்கு ஆசிரியர்கள் கற்றலை தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் உதவ முடியும். தொழிநுட்பமானது கற்றலில் ஈடுபாட்டைச் செலுத்தவும் இணைந்து செயலாற்றுவதற்கும்இ தனியாட்படுத்தப்பட்ட கற்றல் அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கவும் ஆக்கத்திறன் விருத்திக்கும் நுண்ணாய்வுச் சிந்தனைக்கும் மற்றும் தொடர்பாடலுக்கும் உதவும்.முக்கியமான 21ம் நூற்றாண்டுத் திறன்களான சுய அறிதல், நுண்ணாய்வுத் திறன்கள் மற்றும் பிரச்சினைத் தீர்த்தல் போன்ற திறன்களை மாணவர்கள் அபிவிருத்தி செய்துகொள்ள இந்த பிரதிபலிப்பு கற்றல் முறை ஊக்குவிக்கப்படல் அவசியமாகும். பிரதிபலிப்பானது மாணவர்கள் கற்றலை தமது உரித்துடமையாக ஆக்கிக்கொள்ளவும் தமது எதிர்கால முன்னேற்றத்துக்கான இலக்குகளைத் தாமே நிர்ணயித்துக் கொள்பவர்களாகவும் மாற வழிசமைக்கிறது.

Leave a Comment