சர்வதேச அரசியல்
சர்வதேச அரசியல் என்பதன் பொருள்
அரசியல் என்பது “ஒத்தவையல்லாத நலன்களையுடைய குழுக்கள் ஒவ்வொன்றும் தமது நலன்களை நிறைவு செய்து கொள்வதற்குத் தான் இயன்றளவு மேற்கொள்ளும் இடைவினையாகும்” தேசிய அரசியலைப் போலவே சர்வதேச அரசியலையும் “ஒத்தவையல்லாத நலன்களைக் கொண்ட இறைமை அரசுகளுக்கிடையிலான இடைவினைகளும் தொடர்புகளுமாகும்” என வரையறுக்கலாம். அதாவது நாட்டின் உள்ளே நடைபெறும் அரசியல் தேசிய அரசியலாகும். சர்வதேச அரசியல் என்பது தேசங்களுக்கிடையில் நடைபெறும் அரசியலாகும். வேறு வகையில் கூறின் சுதந்திரமான இறைமை பொருந்திய தேசிய அரசுகளுக்கிடையிலான அரசியலாகும்.
வரைவிலக்கணங்கள்
1. மோகன்தோ “தேசங்களுக்கிடையில் இடம்பெறும் அதிகாரத்திற்கான போராட்டமும் அதிகாரப் பிரயோகமும் சர்வதேச அரசியலாகும்”
2. தொம்சன் : “சர்வதேச அரசியல் என்பது தேசங்களுக்கிடையிலான போட்டி மற்றும் அவற்றுக்கிடையிலான தொடர்புகளை சீராக மேம்படுத்தும் நிலைகள், நிறுவனங்கள் என்பன பற்றிய கற்கையாகும்”.
3. நோர்மன் மற்றும் விங்கன் – “தாம் எண்ணும் தேசிய நலன்கள், இலக்குகளை அடைந்து கொள்வதில் தனித்தனி தேசிய அரசுக்கிடையில் இடம்பெறும் ஊடாட்டம் சர்வதேச அரசியலாகும்”, இவ் வரைவிலக்கணங்களின் படி சர்வதேச அரசியல் என்பது “தேசங்கள் தமது ஒத்திசைவற்ற நலன்களை அதிகாரத்தின் மூலம் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் செயன்முறை” எனக் கூறலாம்.
“சர்வதேச அரசியல் என்றால் என்ன என்பது பற்றி அரசுகளின் சார்பில் இயங்குகின்ற அரசாங்களுக்கிடையிலான அதிகாரம் போராட்டமாகும்” என்ற விளக்கத்தையே அநேக அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் நடைமுறையில் பிரயோகிக்கத்தக்க வரைவிலக்கணமாக “சர்வதேச அரசியல் என்பது ஏனைய நாடுகளுடன் முரண்படும் தமது தேசிய நலன்களை அடைந்துக்கொள்ள நாடுகள் தமது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் மூலம் முயற்சிக்கும் ஒரு செயன்முறையாகும்” என்பதை குறிப்பிடலாம்.
தேசிய அரசியலும் சர்வதேச அரசியலும்
சர்வதேச அரசியலின் இயல்பினை விளங்கிக் கொள்வதற்கு தேசிய அரசியலினதும் சர்வதேச அரசியலினதும் ஒத்த பண்பினையும் வேறுபட்ட பண்பினையும் இனங்காண வேண்டும்.
ஒத்த பண்புகள்
சர்வதோ அரசியலும் தேசிய அரசியலும் நலன்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடாகும். இந்நலன்கள் ஒத்திசைவற்றதாக இருப்பதோடு அவற்றை அடைய முயலும் போது மோதல்கள் உருவாகின்றன.
இரண்டிலும் நலன்களையும் மோதல்களையும் நிறைவு செய்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறை என்ற வகையில் அதிகாரம் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டும் அதிகாரத்தைப் பெறுவதற்கு உளவியல் வழிமுறைகளையும் பயன்படுத்துகின்றது. தேசிய அரசியலில் மனிதர்களும் சர்வதேச அரசியலில் அரசுகளும் தத்தமது எதிரிகளுக்கு எதிராகத் தாமாகவே பலம் பெறுவதில் நாட்டமுடையவர்களாவர்.
வேறுபட்ட பண்புகள் கபடம், நாசகாரம், ஏமாற்று, நம்பிக்கைத் துரோகம் என்பன சர்வதேச அரசியலின் முக்கியப் பண்புகளாகும். தேசிய அரசியலில் ஒழுங்கு நியமங்கள் பின்பற்றப்படும்இ அரசு தனது பிரஜைகளின் நலன்களை ஒழுங்குபடுத்தும்.
தேசிய அரசியலில் செயற்பாட்டாளர்கள் (தனிப்பட்டவர்கள்) அரசின் பலவந்த அதிகாரத்துக்குக் கீழ்பட்டவர்களாவர். தேசியச் சட்டங்கள் அவர்களைக் கட்டுப்படுத்தும். நீதிமன்றுகள் தனிப்பட்டவர்கள் மீது தமது நியாயாதிக்கத்தைச் செலுத்தும். சர்வதேச அரசியலில் அரசுகள் பலவீனமானச் சர்வதேச சட்டத்தின் மூலமே ஆளப்படுகின்றன. சர்வதேச நீதிமன்றம் தனது நியாயாதிக்கத்தை இறைமை அரசுகள் மீது பிரயோகிக்கும் அளவுக்கு பலம் வாய்ந்தவையல்ல.
சர்வதேச அரசியலில் அரசுகள் தமது நலன்களுக்காக இறுதி ஆயுதமாகப் போரைப் பயன்படுத்தும். தேசிய அரசியலில் சமாதான வழிமுறைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படும். தேசிய அரசியலில் தனிப்பட்டவர்களும் குழுக்களும் வரையறுக்கப்பட்ட வகையிலேயே செயற்படுவர்.
தேசிய அரசியல் பாமர மனிதர்களைக் கவரும் ஒரு துறையாகும். சர்வதேச அரசியல் சாதாரண மனிதர்களைக் கவரும் ஒரு துறையல்ல. சர்வதேசப் பிரச்சினைகள் அவர்களுக்கு புரியாதவையாகும்.
சர்வதேச அரசியலின் விடயப்பரப்பு
சர்வதேச அரசியல் எனும் பாடத்துறை பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுக்கின்றது.
1.அரசு முறைமை (இறைமை பொருந்திய அரசுகள்)
2. தேசிய அதிகாரம்
3. தேசிய நலன்
4. வெளிநாட்டுக் கொள்கை
5. சர்வதேச அரசியல் கருவிகள் (அரசுகள் தமது நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்தும் உத்திகள்)
6. தேசிய வாதம்இ காலனித்துவ வாதம் மற்றும் ஏகாதிபத்தியவாதம்
7. சர்வதேச அரசியல் மீதான கட்டுப்பாடுகள்
8. சர்வதேச முறைமை
9. போரும் சமாதானமும்
10. சர்வதேச நிறுவனங்களும் ஒழுங்கமைப்புக்களும்
சர்வதேச அரசியலின் செயற்பாட்டாளர்களும் அவற்றின் வகிபாகங்களும் சர்வதேசச் சமூகத்தில் பங்கேற்கும் முக்கியப் பாத்திரங்களாகப் பின்வரும் 4 பகுதிகளை இனங்காண முடியும்.
1. அரசுகள்
2. சர்வதேச அமைப்புக்கள் – இவற்றை அரசாங்கம் சார் அமைப்புக்கள் (உ-ம் – ஐக்கிய நாடுகள் தாபனம்இ பிரித்தானிய பொதுநலவாயம். சார்க்), அரசாங்க சார்பற்ற அமைப்புக்கள் (உ-ம் . சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மன்னிப்புச் சபை) என இரண்டாக வகைப்படுத்தலாம்.
3. பல்தேசியக் கம்பனிகள் – சர்வதேச வர்த்தகத்தின் விஸ்த்தரிப்புடன் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் இணைந்த பாரிய பல்தேசியக் கம்பனிகள் உருவாகியுள்ளன. இவை பெற்றுள்ள பொருளாதார பலத்தினால் சர்வதேச விவகாரங்களில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை மேற்கொள்கின்றன. 4. சர்வதேச சமூகச் செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகச் செல்வாக்குச் செழுத்தும் முக்கிய நபர்கள்
அரசுகள்
இறைமை பொருந்திய தேசிய அரசுகளே சர்வதேச அரசியலில் பிரதான செயற்பாட்டாளர்களாகும். சர்வதேச சமூகத்தில் தற்போது 200 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசுகள் உள்ளன. இவை நிலப்பரப்புஇ குடித்தொகை, வளங்கள். பொருளாதார மற்றும் இராணுவ பலம் என்பனவற்றின் அடிப்படையில் வேறுபடினும் சர்வதேச அரசியலில் சகல அரசுகளும் சம அந்தஸ்தினை (சமமான சட்ட அலகுகள்) உடையனவாக அங்கீகரிக்கப்படுகின்றன. இவ் அரசுகளுக்கிடையிலான தொடர்புகளை,
1. அமைதி போக்கு தொடர்புகள்
2. போர் ரீதியான தொடர்புகள்
என இரு பிரிவுகளாக வகுக்கலாம். இதனாலேயே சர்வதேச அரசியல் போரும் சமாதானமும் பற்றிய கற்றல் விடயம் என இனங்காணப்படுகின்றது.
அரசுகளின் வெளிவாரியான நோக்கங்கள்
சர்வதேச அரசியலில் அரசுகள் அதிகாரப்போட்டியில் ஈடுபடுதல் தமது வெளிவாரியான நோக்கங்களை (தேசிய விருப்புக்கள்) நிறைவேற்றுவதற்காகும். அவை,
1. தேசியப் பாதுகாப்பு
2. தேசியப் பொருளாதாரத்தை உயர்நிலைப்படுத்தல்
3. தேசிய நலனை மேம்படுத்தல்
4. தேசிய கௌரவத்தைப் பாதுகாத்து நிலைத்திருக்கச் செய்தல்
5. தேசிய கொள்கைகளைப் பாதுகாத்து நிலைத்திருக்கச் செய்தல்
நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை பேணும் வழிமுறைகள்
சர்வதேச முறைமையில் அரசுகள் தமக்கிடையில் தொடர்புகளை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட அவற்றின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு அரசுகள் பயன்படுத்தும் உத்திகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. வெளிநாட்டுக் கொள்கையும் இராஜதந்திரமும்
2. பொருளாதார அதிகாரம் அல்லது கருவிகள்
3. ஊடுறுவலும் தலையிடுதலும்
4. பிரச்சாரம்
5. போர்
1.வெளிநாட்டுக் கொள்கையும் இராஜதந்திரமும்
நவீன உலக ஒழுங்கு முறைமையில் தவிர்க்க முடியாத அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் தங்குநிலை என்பவற்றை மேற்கொள்வதற்கு முறையாக வகுக்கப்பட்ட ஒரு கொள்கை முறையே வெளிநாட்டுக் கொள்கையாகும். இதன் மூலம் ஒரு நாடு வெளிவாரியாக நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கும் நோக்கங்கள் யாவை? அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அவை ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது எவ்வாறு என்பன வெளிப்படுகின்றன. இதன்படி வெளிநாட்டுக் கொள்கையை “சர்வதேச சூழலுக்கு ஏற்றவகையில் மற்றைய அரசுகளின் நடத்தையை மாற்றியமைக்கவும் சொந்தச் செயற்பாடுகளைச் செய்யவும் சரி வரையறுக்கலாம்.
ரத்ணசுவாமி என்பவரின் கருத்துப்படி வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு ஏனைய நாடுகளுடன் இடைத்தொடர்புகளைப் பேணும்போது பின்பற்றும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளடங்கும் கூற்றாகும் ” இதன்படி ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை இரண்டு அடிப்படைப் பகுதிகளால் ஆனது. அவையாவன:
- ஒரு நாடு சர்வதேசச் சமூகத்தில் ஏனைய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணும்போது நிறைவேற்ற எதிர்ப்பார்க்கின்ற தேசிய நோக்கங்களும் அபிலாஷைகளும் யாவை என்பதும்
- அவற்றை நிறைவேற்றப் பின்பற்றும் நடைமுறை எதுவென்பதும் ஆகும்.
வெளிநாட்டுக் கொள்கை குறிப்பாக சில நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொள்ளல், சில நாடுகளுடன் தொடர்பு கொள்வதை பகிஸ்கரித்தல், அணிசேராமை போன்ற திசைமுகங்களை கொண்டிருக்கும்.
வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிக்கும் காரணிகள்
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பல உள்நாட்டு மற்றும் வெளிவாரியான காரணிகள் தீர்மானிக்கின்றன.
1. வரலாறும் தேசிய விழுமியங்களும்
2. ஒரு நாட்டின் பருமன்
3. புவியியல் அமைவிடம்
4. தேசிய திறன்
5. பொதுசன அபிப்பிராயம்
6. தலைவர்களின் ஆளுமைஇ கொள்கை வகுப்போரின் செயற்பாடுகள்
7. சர்வதேச முறைமையில் தேசிய அரசுகளின் தன்மையும் செயற்பாடுகளும்
8. சர்வதேச நிறுவனங்கள்
9. உலக பொதுசன அபிப்பிராயம்
வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கங்கள் இன்றைய சர்வதேச முறைமையில் எந்தவொரு நாடும் தனித்து வாழ முடியாதுள்ள நிரபந்தத்தின் அடிப்படையில் ஏனைய நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் பயன்படுத்தும் மிகவும் பொதுவான ஒரு வழிமுறையாக இருக்கும் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கங்களைக் கீழ்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
1. அரசின் ஒருமைப்பாட்டைப் பேணுதல்.
2. பொருளாதார நலன்களை முன்னேற்றல்இ
3. தேசியப் பாதுகாப்பை பலப்படுத்தல்.
4. தேசிய அதிகாரத்தை விருத்தி செய்தல்.
5. உலக ஒழுங்கைப் பேணல்.
6. சர்வதேச சமூகத்தில் நாட்டின் கௌரவத்தை வளர்த்தல்இ வெளிநாட்டுக் கொள்கை இராஜதந்திர அதிகாரிகள் அல்லது தூதுவர்கள் மூலமாக செயலுரு பெறுகின்றது. இங்கு பயன்படுத்தப்படும் முக்கிய நுட்பம் கலந்துரையாடலாகும்.
2. பொருளாதார அதிகாரம்
சர்வதேச அரசியலில் அரசுகள் ஏனைய அரசுகளில் செல்வாக்குச் செலுத்தி தமது நோக்கங்களை அடைவதற்கும் ஏனைய அரசுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தும் மற்றுமொரு வழிமுறை பொருளாதாரச் சக்தியாகும். வர்த்தக ஒப்பந்தம்இ கடன்களும் பணக்கொடைகளும் வழங்கல்இ பகை அரசுகளின் சொத்துக்களைத் தடைசெய்தல்இ பொருட்கள் வாங்குவதை நிறுத்துதல். சுங்கவரி போன்ற பொருளாதாரக் கருவிகளின் மூலம் அரசுகள் தமது நோக்கங்களை அடைய முயற்சிக்கின்றன.
3. ஊடுருவலும் தலையிடுதலும்
சர்வதேச அரசியலில் அரசுகள் தமது வெளிவாரியான நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்தும் பிறிதொரு கருவி அரசுக்குள்ளும் அரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டும் ஊடுருவியும் செயற்படுவதாகும். அரசுகள் பகைமை நாட்டின் உள் விடயங்களில் இரகசிய முறைகளினூடாக பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி அந்த அரசை தமக்குத் தேவையான விதத்தில் வழிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் ஊடுருவல் ஆகும்இ எதிரி நாட்டின் அரசியல் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் அரசின் நடத்தையை மாற்றியமைத்தல் தலையிடுதல் எனப்படும். இதற்காக இரகசிய உளவுச்சேவை போன்ற வெளிப்படையற்ற உத்திகளை அரசுகள் பயன்படுத்துகின்றன. பொதுவாக ஊடுருவலும் தலையிடுதலும் பின்வரும் வழிமுறைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தகவல்களை சேகரிக்கும் உபாயம் மூலம் அரசுக்குள் ஊடுருவல் செய்தல்.
1. பிரச்சாரம் மூலம் தலையிடுதல்.
2. அதிகாரத்தை பிரயோகித்து தலையிடுதல்
போர்
சர்வதேச சமூகத்தில் நாடுகள் தமது வெளிவாரியான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதில் பயன்படுத்தும் பிறிதொரு உபாயம் போர்ப் புரிதலாகும். இராஜதந்திர முறை. ஊடுருவலும் தலையிடுதலும்இ பிரச்சாரம் முதலான முறைகளின் மூலம் அரசுகள் தமது வெளிவாரியான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாத கட்டத்திலேயே இறுதியாக போர் என்ற உபாயத்தைப் பயன்படுத்த முயல்கின்றன. ஆயுதங்கள் மூலம் பகைவரைத் தாக்கி ஒன்றில் முற்றிலும் அழிவேற்படுத்தல் அல்லது எதிரியை வலிமையிழக்கச் செய்து தமக்குத் தேவையான விதத்தில் கட்டுப்படுத்தல் இதன் நோக்கமாகும். போர் ஏனைய வழிமுறைகளை விட அதிக செலவு கொண்டதும் அதிக அழிவை ஏற்படுத்துவதுமான உத்தியாகும்.
ஏதேனும் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகப் போரைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அரசுகள் முதலில் அக்குறித்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இராஜதந்திர வழிமுறை மூலம் முயற்சித்தல் வேண்டும். இம் முயற்சி தோல்வியுற்றால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமென அச்சுறுத்தி முன் அபாய அறிவிப்பு விடுத்தல் வேண்டும். இதற்கும் பகைவர் கீழ்ப்படியாவிடில் வன்முறையை மேற்கொள்ளுதல் என்ற முன்நடவடிக்கைகளுடனே போர் நிலைமையை ஏற்படுத்தல் வேண்டும்.
ஏதேனும் ஒரு அரசு மற்றொரு அரசுடன் நேரடியாகப் போர் தொடுக்கக் கருதினால் அதற்காகப் பின்வரும் முன் நிபந்தனைகளை நிறைவேற்றுதல் வேண்டும்.
1. தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆபத்தான நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் விளக்கச் செய்தல்இ
2. போரில் ஈடுபட்டால் வெற்றிபெறும் வரை போர் செய்வதில் மிகுந்த மனவுறுதி கொண்டிருத்தல்.
3. அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களை தெளிவாகக் காட்டுதல்.
4. குறித்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு மட்டும் போதுமான அளவு இராணுவ பலத்தை ஈடுபடுத்தல்.
5. நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பூரணமாகப் பயன்படுத்துதல்.
அரசியல் சமூக ஒழுங்கினை நிர்ணயம் செய்தல். பிழைகளைத் திருத்துதல் மற்றும் உரிமைகளை நடைமுறைப்படுத்தல் என்பன போரின் முக்கியப் பணிகளாகும்.
தேசிய அதிகாரம்
சர்வதேச அரசியலில் அரசுகளின் நிலைத்திருத்தலும் செயற்பாடுகளும் அரசுகளுக்கு உரிய அதிகாரங்களின் அளவிற்கேற்பவே தீர்மானிக்கப்படுகின்றன. இவ் அதிகாரம் தேசிய அதிகாரமாகும். ஒரு அரசுக்கு வேறொரு அரசின் எண்ணம்இ செயற்பாடு என்பனவற்றை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குமெனில் அதுவே தேசிய அதிகாரம் எனக் கருதப்படுகின்றது. அரசின் தேசிய அதிகாரம்இ செயற்பாட்டு உருவாக்கம் பின்வரும் வழிமுறைகள் மூலம் இடம்பெறும்.
1. செல்வாக்கைப் பிரயோகித்தல்.
2. கொடைகளை வழங்குதல்.
3. தண்டனை விதித்தல்.
4. அதிகாரப் பிரயோகம் (போர் நடவடிக்கை மூலம் அதிகார செயற்பாட்டில் ஈடுபடுதல்)
ஓர் அரசின் தேசிய அதிகாரத்தை உருவாக்கிக் கொள்வதில் பின்வரும் காரணிகள் இணைந்துள்ளன.
1. இயற்கைக் காரணிகள் (உதாரணம் – நாட்டின் அமைவிடம், சனத்தொகை) 2. விஞ்ஞானம், தொழிநுட்பம், கைத்தொழில் காரணிகள்
3. அரசியல் காரணிகள் (உதாரணம் – அரசாங்கத்தின் தன்மை, அரசியல் தலைமைத்துவத்தின் இயல்பு)
4. சமூகம் மற்றும் கருத்து சார்ந்த காரணிகள் (உதாரணம் ஒரு நாடு ஏற்றுக் கொண்ட தேசிய கருத்துக்கள்இ சமூகக் கட்டமைப்பு) 5. வெளிவாரியான மற்றும் வேறு காரணிகள் (நாட்டின் பெருமையும் நற்பெயரும்இ வெளிநாட்டு உதவியைப் பெறும் ஆற்றல். இரகசிய உளவுச் சேவையின் வினைத்திறன் )
சர்வதேச அரசியலில் அரசுகள் மீதான கட்டுப்பாடுகள்
சர்வதேச சமூகத்தில் நிலவும் அதிகாரமின்மை காரணமாக இறைமையும் சுதந்திரமும் தன்னாதிக்கமும் கொண்ட அரசுகள் ஒவ்வொன்றும் தாம் விரும்பியவாறு நடப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமையால் அரசுகளுக்கிடையே சமாதானத்திற்குப் பதிலாக யுத்த நிலைமைகள் அடிக்கடித் தோன்றுகின்றன. இதனால் அரசுகளுக்கிடையில் இடம்பெறும் அதிகாரப் போராட்டத்தைக் கட்டுப்படுத்திஇ சர்வதேச சமாதானத்தை உருவாக்கி முன்னெடுத்துச் செல்வதற்காகச் சர்வதேச அரசியலில் பின்வரும் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
1. அதிகாரச் சமநிலை
2. கூட்டுப்பாதுகாப்பு
3. சர்வதேசச் சட்டம் ஆயுதக் கட்டுப்பாடும் ஆயுதப் பரிகரணமும்
4. உலகப் பொதுசன அபிப்பிராயம்
5. உலக அரசாங்கம்
அதிகாரச் சமநிலை
சர்வதேச அரசியலில் அரசுகளின் நடத்தை மீதான ஒரு கட்டுப்பாடாக அதிகாரச் சமநிலை அடையாளப்படுத்தப்படுகின்றது. தேசிய அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் ஒழுங்குபடுத்துவதே அதிகாரச் சமநிலை என சுருக்கமாகக் கூறலாம். “அதிகாரத்தை அதிகாரமே வரையறை செய்யும்” என்பதே இதன் கருதுகோலாகும். இதன்படி அதிகாரச் சமமின்மை நிலைமைகள் நிலவும் போதே அரசுகள் போரில் ஈடுபடுகின்றன. ஆனால்இ அரசுகள் சமமான அதிகாரமுடையதாக இருப்பின் எந்நாடும் வெற்றியை உறுதியாகப் பெறமுடியாதிருப்பதனால் போரில் ஈடுபட முன்வரமாட்டாது. இதனால் அரசுகளின் அதிகாரங்களைச் சம அளவானதாக அமைப்பின் அரசுகளுக்கிடையில் போர் ஏற்படுவதைத் தவிர்த்து சர்வதேச சமாதானத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதே அதிகாரச் சமநிலையின் எதிர்பார்ப்பாகும்.
அதிகாரச் சமநிலை உருவாக்கபடுதலை அரசுகள் தனித்தனியாக அல்லது கூட்டான மட்டத்தில் செய்யமுடியும். பொதுவாக அதிகாரச் சமநிலையைப் பேணும் வழிமுறைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்இ
1. நட்புக்கூட்டணிகளும் எதிர்க் கூட்டணிகளும்
2. ஆயுதக் கட்டுபாடும் ஆயுதப் பரிகரணமும்
3. ஆள்புல பிரதேசங்களைக் கைப்பற்றல்
4. நட்டாடும் பிரிவினையும்
5. தாக்கத் தனிப்பு அரசுகளை உருவாக்கல் (இரு பலம் வாய்ந்த அரசுகளுக்கிடையில் காணப்படும் ஒரு நடுநிலைமை பிரதேசம்)
6. தலையிடுதல்
7. பிரித்தாளுதல் அதிகாரச் சமநிலையின் பயன்பாடு
1. அரசுகளின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்.
2. சர்வதேச சமாதானத்தைப் பாதுகாத்தல்.
3. சர்வதேச சட்டத்தைப் பேணுதல்
தற்காலத்தில் உலகில் உருவாகியுள்ள அரசுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினாலும் அவற்றிற்கிடையில் பரந்தளவு வேறுபாடு காணப்படுவதினாலும் அதிகாரச் சமநிலை எண்ணக்கரு நடைமுறையில் காலம் கடந்த ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. யுNனுலு
கூட்டுப்பாதுகாப்பு
கூட்டுப்பாதுகாப்பு என்பது சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பைத் தடுத்துச் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். எளிமையாகக் கூறின் “கூட்டுப்பாதுகாப்பானது ஒருவருக்காக எல்லோரும் எல்லோருக்குமாக ஒருவர் என்ற அடிப்படையில் அரசுகள் ஒரு கூட்டணியாகச் செயற்படுவதன் மூலம் தத்தமது பாதுகாப்பை உறுதி செய்தலாகும்”. இதன்படி சமாதானத்தை விரும்பும் அரசுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து தமது கூட்டு அதிகாரத்தைச் சமாதானத்திற்கு எதிராக செயற்படும் அரசு அல்லது அரச குழுக்களுக்கு எதிராக பயன்படுத்திஇ ஆக்கிரமிப்பு தன்மையுள்ள அரசு அல்லது அரச குழுக்களை அடக்கி சர்வதேச சமாதானத்தை உறுதிபடுத்தி முன்னெடுத்துச் செல்லுதல் எனும் அடிப்படையில் கூட்டுப்பாதுகாப்பு என்ற எண்ணக்கரு உருவாக்கப்பட்டுள்ளது.
கு.ர் ஹர்ட்மன் குறிப்பிடுவது “உலகில் எந்த இடத்திலும் இடம்பெறும் ஆக்கிரமிப்புக்கு எதிரான பரஸ்பரக் காப்புறுதி திட்டமே கூட்டுப்பாதுகாப்பாகும்”. கூட்டுப்பாதுகாப்பை அடித்தளமாகக் கொண்டே சர்வதேச சங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் தாபிக்கப்பட்டன. இவ்விரு அமைப்புகளின் உறுப்பு அரசுகளுக்கிடையே கூட்டுப்பாதுகாப்புச் செயற்பாடு கருவாகத் தேவையானப் பொது விருப்பினை ஏற்படுத்த முடியாததின் விளைவாக இவற்றால் எதிர்பார்த்த விதத்தில் இவ் எண்ணக்கருவின் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாதிருந்தன.. எவ்வாறாயினும் அதிகாரச் சமநிலையை விட கூட்டுப்பாதுகாப்பு நடைமுறைச் செயற்பாடு கொண்டது என்பதும் நேட்டோ (Nயுவுழு)இவோர்சோ (றுயுசுளுயுறு) போன்ற அமைப்புகள் இம்முறையை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேசச் சட்டம்
தனிப்பட்டவர்களின் உறவுகள் உள்ளூர்ச் சட்டங்களால் ஆட்சிக்குட்படுத்தப்படுவது போன்று இறைமை பொருந்திய அரசுகளின் உறவுகள் சர்வதேசச் சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன்படி சர்வதேசச் சட்டம் என்பதை “சர்வதேசச் சமூகத்தில் அரசுகளின் உறவுகளையும் நடத்தைகளையும் ஒழுங்குபடுத்தும் விதிகளின் தொகுதி என் வரையறுக்கலாம். இவற்றை நாடுகளின் உரிமைகள்இ கடமைகள் பற்றிய விதிகளின் தொகுதி என்றும் கூறலாம். எளிமையாகக் கூறின் “தேசங்களுக்கு மத்தியிலான சட்டமே” சர்வதேசர் சட்டமாகும்.
சர்வதேசச் சட்டத்தின் மூலங்கள்
1. சர்வதேசச் சமவாயங்கள்
2. சர்வதேச வழக்காறுகள், மரபுகள்
3. நாகரீகமடைந்த தேசங்களினால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான விதிகள்
4. நீதிமன்றத் தீர்ப்புக்கள்
5. சர்வதேச மாநாட்டு தீர்மானங்கள்
6. சட்டவல்லுனர்களின் அபிப்பிராயங்கள்
சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவம்
சட்டத்தின்10 அடிப்படைத் தத்துவங்கள்
ஐக்கிய நாட்டுப் சபையால் சர்வதேசச் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றுள் சில வருமாறு,
1. அரசுகள் சமாதானத்தினை பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்படுத்த வேண்டும்.
2 எந்தவொரு அரசும் ஏனைய அரசுகளின் உள்விவகாரங்களிலும் அதிகாரத்திலும் தலையிடக்கூடாது.
3. அரசுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துச் செயற்படுவது அவற்றின் கடமையாகும்.
4. அரசுகளின் சம இறைமைத் தத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
5. ஒவ்வொரு அரசினதும் எல்லைகள் அத்துமீறப்படக்கூடாதுஇ 6. மனித உரிமைக்கான கௌரவமும் அடிப்படைச் சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும்.
சர்வதேசச் சட்டத்தின் வரையறை அல்லது குறைபாடுகள்
சர்வதேச அரசுகளின் தொடர்புகள் சர்வதேசச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுமாயின் சர்வதேச சமாதானத்தை நிலைநிறுத்த முடியும் என்ற கருத்து வலிறுத்தப்பட்டாலும் இச்சட்டத்திற்குப் பின்வரும் வரையறைகள் காணப்படுகின்றன.
1. சட்டவாக்கப் பணிகளின் பூரணமற்றத் தன்மை.
2. செயற்திறன் மிக்க அமுலாக்கமின்மை.
3. தாக்ககரமானச் சர்வதேச நீதிப் பொறிமுறை இன்மை.
4. சர்வதேசச் சட்டத்தைப் பின்பற்றுவதும் பின்பற்றாது விடுவதும் அரசுகளின் சுயேட்சையான
5. விருட்பில் தங்கியுள்ளமை.
6. சர்வதேசச் சட்டத்தின் நிச்சியமற்றத் தன்மை. இதனால் சர்வதேசச் சட்டமும் அரசுகளின் வெளிவாரியான நடத்தையைக் கட்டுபடுத்துவதற்குப்
பயன்படுத்தப்படும் வினைத்திறன் மிக்க உபகரணமாகக் கருதப்படுவதில்லை.
ஆயுதக்கட்டுப்பாடும் ஆயுதப்பரிகரணமும் அரசியலில்
சர்வதேச அரசுகளின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் பிறிதொரு ஆயுதக்கட்டுப்பாடும் ஆயுதப்பரிகரணமும் ஆகும். இவ்வெண்ணக்கரு உருவாக்கப்பட்டிருப்பது அரசுகள் போர் வழிமுறை செய்வது ஆயுதங்களைக் கொண்டிருப்பதினாலாகும். எனவேஇ அரசுகளின் போர் ஆயுதங்களை இல்லாதொழிப்பின் அரசுகள் போர் செய்ய மாட்டா எனக் கருதுவதன் அடிப்படையிலாகும். இதன்படி ஆயுதப்பரிகரணம் என்பது “ஆயுதப்போட்டியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் சில ஆயுதங்களை அல்லது சகல ஆயுதங்களையும் குறைத்தல் அல்லது அகற்றுதல்” ஆகும். ஆயுதப்பரிகரணத்துடன் தொடர்புடைய பிறிதொரு எண்ணக்கருவான ஆயுதக்கட்டுப்பாடு ஆயுத போட்டா போட்டியைத் தடுக்க முனைகின்றது. கோட்பாட்டு ரீதியில் இக்கருத்து மிகச் சரியாக இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்தப்படுவதில் பல பிரச்சினைகள் உள்ளன. போர் ஆயுதங்கள் இல்லாது அரசுகளின் தேசியப் பாதுகாப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது முக்கியப் பிரச்சினையாகும். எனினும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையும் தனிப்பட்ட மட்டத்திலும் ஆயுதக்கட்டுப்பாடு. ஆயுதப்பரிகரணம் தொடர்பாகப் நடவடிக்கைகளை எடுத்துள்ளன (உதாரணமாக அணு பரிசோதனை தடை பல ஒப்பந்தம்இ அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தம்இ தந்திரோபாய ஆயுத மட்டுப்படுத்தலுக்கான ஒப்பந்தம் போன்ற முயற்சிகளைக் குறிப்பிடலாம். எனினும் இன்னும் முற்றாக ஆயுதபரிகரணத்திற்கு அரசுகள் முன்வராதிருப்பதுடன் ஆயுத உற்பத்தியையும் அரசுகள் நிறுத்திவிடவில்லை.
உலக அரசாங்கம்
அரசுகளின் வெளிவாரியான நடத்தையைக் கட்டுபடுத்துவதற்குச் சட்டவாக்கஇ நிறைவேற்றுஇ நீதித்துறை அதிகாரங்களைக் கொண்ட உலக அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என இவ்வெண்ணக்கரு கவனம் செலுத்துகின்றது. இதன்படி ஒவ்வொரு நாட்டினதும் தேசிய நலன் சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைவதால் தேசிய அரசுகளுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பிறிதொரு உபாயமே உலக அரசாங்கமாகும். உலக அரசாங்கத்தின் பயன்பாடுகள்
உலக அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுமாயின் அதனால் பின்வரும் பயன்பாடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1. அராஜக நிலையை முடிவுறுத்தல்.
2. சர்வதேச சமூகத்தில் சமாதானத்தையும் ஒழுங்கையும் பேணல்.
3. போரைத் தடுத்தல்இ
4. சர்வதேச ஒத்துழைப்பையும் தேசங்கடந்த உணர்வையும் ஏற்படுத்தல்.
உலக அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள தடைகள்
1. சர்வதேச சமூக இன்மை.
2 அரசாங்கம் ஒன்றிற்கான நிறுவன பொறிமுறைக் காணப்படாமை.
3அரசுகள் தமது தேசிய இறைமையை இழக்க விரும்பாமை
4. பெரிய அரசுகள் விரும்பாமை.
மேற்குறிப்பிட்ட காரணங்களினால் உலக அரசாங்கம் என்பது நடைமுறையில் ஒரு கனவு மட்டுமே என விமர்சகர்கள் கருதுகின்றனர். மறுபுறம் தற்காலத்தில் ஐ. நா ஓர் உலசு அரசாங்கமா? என்பது தொடர்பான வாதங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உலகப் பொதுசன அபிப்பிராயம்
சர்வதேச அரசியலில் அரசுகளின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு வழிமுறை உலகப் பொதுசன அபிப்பிராயமாகும். “அரசுகள் அல்லது அரசுகளின் கூட்டணி என்பவற்றின் உள்வாரியானதும் வெளிவாரியானதுமானக் கொள்கைகள் அதற்காகப் பின்பற்றும் வழிமுறைகள் அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து உலக மக்கள் கொண்டுள்ள அபிப்பிராயமே” உலகப் பொதுசன அபிப்பிராயம்
எளிமையாகக் கூறின் உலக அரங்கில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் கொண்டுள்ள கருத்தாகும். இது முழுச் சமுதாயத்தினதும் அரசுகளினதும் நலன்களையும் விருப்பங்களையும் பிரதிபலிப்பதால் உலகப் பொதுசன அபிப்பிராயத்தை எந்தவொரு அரசும் புறக்கணித்துச் செயற்பட முடியாது. அரச சொள்கையாக்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகச் செயற்படல், சர்வதேச அங்கொரத்தின் தன்மையைப் பாதித்தல்இ அரசின் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளைத் தீமானிக்கும் காரணியாக இருத்தல், அணுவாயுதம் தொடர்பான அரசுகளின் நடத்தையைக் கட்டுபடுத்தல் என்ற அடிப்படையில் அரசுகளின் நடத்தையைக் கட்டுப்படுத்துவதாக உலகப் பொதுசன அபிப்பிராயம் காணப்படுகின்றது. எனினும் இதிலும் பல வரையறைகள் காணப்படுவதால் அரசுகளின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் தாக்ககரமான ஒரு கருவி என கூற முடியாதுள்ளது.